இயக்குநரின் ஃபெட்டிஷ் பேன்டசிகளைக் கொண்ட ஆள்மாறாட்டக்கதை!

 

 

 

 









அல்லரி புல்லோடு
நிதின், திரிஷா, ரதி
இயக்கம் கே ராகவேந்திர ராவ்

பெரிய தொழிலதிபர், அவரின் எதிரிகளால் விபத்துக்குள்ளாக்கப்படுகிறார். இதனால் அவரின் மூத்த மகள் வெளிநாட்டிலிருந்து நிறுவனத்தைக் கவனித்துக்கொள்ள வருகிறாள். அவள், நிறுவனத்திற்கு விசுவாசமான மேலாளர் நாராயண ராவ் என்பவரை தவறாகப் புரிந்துகொண்டு பணிவிலக்கம் செய்கிறாள். இதற்கு நிறுவனத்திலுள்ள சதிகாரர்களே காரணம். மேலாளரின் மகன், எதிரிகளின் சதிகளை முறியடித்து திரிஷாவின் நிறுவனத்தை எப்படி காப்பாற்றுகிறான் என்பதே கதை.

இரண்டு நாயகிகள் என்பதால், ஒரு நாயகன் ஆந்திராக்காரர், பாலு. பொறியாளர். இன்னொருவர், தெலங்கானாக்காரர், ராஜூ. ரௌடி.

படத்தில் திரிஷா, ரதி என இரண்டு பாத்திரங்களுமே லூசுத்தனமானவை. பாலு, ராஜூ ஆகிய பாத்திரங்களை சார்ந்து அண்டி வாழ்பவை. எனவே இவர்கள் சார்ந்த காட்சிகள் எல்லாவற்றிலும் நாயக துதியே அதிகம்.

இயக்குநர் ராகவேந்திர ராவ், நாயகியின் உடலில் எண்ணெய் ஊற்றுவது, பழங்களை வயிற்றில் உருட்டுவது, தொப்புளில் தண்ணீர் ஊற்றுவது என பலவித ஃபெட்டிஷ்களை செய்வார். இந்த சோதனைக்கு இப்படத்தில் ஆளாகுபவர், நடிகை ரதி. அவரின் வயிற்றில் மேலிருந்து நீர் ஊற்றப்பட, அதை தொலைவில் உள்ள நாயகன் உறிஞ்சுவது போல மனதை மயக்கும்படி ஒரு காட்சி. கைத்தொழில் மன்னர்களுக்கான படம். வித்தைகளை தியேட்டரிலேயே செய்யலாம். இத்தகைய சுகானுபவ காட்சிகள், ராகவேந்திர ராவ் காரு இயக்கிய அனைத்து படங்களிலும் நீக்கமற உண்டு.

பாலு எஞ்சினியரிங் படித்தவன். அவன் திரிஷாவின் கம்பெனியில் அப்பாவுக்கு வேலை பறிபோக, அதே பணியிடத்திற்கு வருகிறான். பல்வேறு தந்திரங்களைச் செய்து வேலையை சம்பாதிக்கிறான். ஓவர்டைம் வேலை பார்க்கும் அவனைப் பார்த்து திரிஷாவே காதலிக்க வா என அழைப்பு விடுக்குமளவு  உழைப்பு அதீதமாகிறது. இந்த சூழலில் இரண்டாவது நாயகி ரதி வெளிநாட்டிலிருந்து வருகிறாள். அவளை பாலு தெலங்கானா பகுதி நபர் போல நடந்துகொண்டு ராக்கிங் செய்கிறான். பிறகு என்ன, அதுவே காதலாக மாறித்தொலைகிறது.

படத்தில் வில்லன்கள், திரிஷாவின் நிறுவனத்தை எப்படியாவது நஷ்டப்படுத்தி அதை அடையவேண்டும் என விரும்புகிறார்கள். இதற்காக முன்னா என்ற மும்பை ரௌடியை நாடுகிறார்கள். அவன், பாலுவைப் போலவே உருவ ஒற்றுமை கொண்டவன். பாலு, முன்னா இருவரும் யார் என்பது பெரிய ட்விஸ்ட் எல்லாம் கிடையாது. அதை படத்தில் இறுதியில் சொல்லி, திரிஷா நிறுவனம் டெண்டர் ஒன்றில் வெல்வதோடு படம் முடிகிறது.

நிதின் எந்தளவு முயன்றாலும் அவர் பேசும் வசன உச்சரிப்பு மாஸாகவெல்லாம் இல்லை. ஆளும் சன்னமாக இருக்கிறார். தனாதன், படாபட், கேத் கதம் துகான் பந்த் என்ற வசனங்கள் எல்லாம் எரிச்சலை இமாலய அளவுக்கு கூட்டுகின்றன.
புத்திசாலி நாயகன், அறிவே இல்லாத நாயகிகள். கிளுகிளு பாடல்கள். காமெடி வில்லன்கள். பெண்களை கேலி, கிண்டல், அத்துமீறல் செய்து காதலிக்கும் காதல் காட்சிகள் என படம் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கான அக்மார்க் ட்ரீட். இதிலுள்ள விஷயங்களை இன்று இளைஞர்கள் செய்தால், அவர் சிறையில்தான் இருக்க வேண்டி வரும். கவனம்....

திரிஷா, ரதி ஆகியோருக்கு புன்னகைத்தபடியே அழகழகான உடைகளில் வலம் வரும் பாத்திரங்கள். பாடல்களில் உடைகளை முடிந்தளவு குறைத்துக்கொள்கிறார்கள். பார்வையாளர்கள் லாஜிக்கை யோசிக்கவே கூடாது.

மூளையைக் கழட்டி ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு பார்க்கவேண்டிய படம். அப்போதுதான் கிளுகிளு மேஜிக் நடக்கும்.



குறிப்பு
யூட்யூபில் உள்ள சேனல்களில், பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்கள் கொள்ளையாக கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், தமிழ்படங்களை ஆதிக்க சேனல்கள் தங்களது நிறுவனத்தில் பூட்டி வைத்துள்ளன. எனவே, டன் கணக்கிலான பி்ற்போக்குத்தனமும், பெண்களின் உடல் மீது வினோத பரிசோதனைகளை நிகழ்த்த விரும்பும் தெலுங்கு சினிமாக்களை இலவசமாக எளிதாக பார்க்கமுடிகிறது. நவீன காலத்தில் சிறப்பான கதையம்சம் கொண்ட படங்களை ஆந்திர இயக்குநர்கள் எடுத்தும் வருகிறார்கள். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்