சூரிய வெப்பத்திலிருந்து மக்களைக் காக்க சன்ஸ்க்ரீன் மாத்திரைகள்!

 

 

 

 


சூரியனின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயில் தாக்கத்தால் மக்கள் இறந்தும் வருகிறார்கள். இதற்கு என்ன செய்வது? சூரிய கதிர்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும் க்ரீம்களை வாங்கி தடவலாம். சந்தையில் க்ரீம், லோஷன் என நிறைய விற்கிறது. இப்போது சூரியவெப்பத்திலிருந்து ஒருவரைக் காக்க மாத்திரைகள் கூட வந்துவிட்டது. இந்த மாத்திரைகளை அமெரிக்காவின் ஃஎப்டிஏ அங்கீகரிக்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய அங்கீகாரம் எல்லாம் தேவையில்லை. இனாம் கொடுத்தால் கிடைத்துவிடும். தடை செய்தால் கூட மாத்திரைகளை வாங்கிக்கொள்ள முடியும் வசதி, நம் தாய்நாட்டில் எப்போதும் உண்டு.

மாத்திரை வசதிகளைப் பார்ப்போம். மாத்திரை ஆய்வில் இருக்கிறது. ஆன்டிஆக்சிடன்டுகளான பாலிபோடியம் லியுகாடமோஸ், பீட்டாகரோட்டின், அஸ்டாசாந்தின் ஆகியவை உள்ளன. இவை உடலுக்கு புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கின்றன. தோலுக்கு பாதுகாப்பு தரும் மெலனின் நிறமிகளை ஊக்கப்படுத்தும் பகுதிப்பொருட்களும் உள்ளன.

க்ரீம்களில் ஜிங்க் ஆக்சைடு, டைட்டானியம் டையாக்சைடு ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை மாத்திரைகளை விட பயன்தரக்கூடியவை. கதிர்கள் தோலில் படுவதற்கு முன்னரே நமக்கு பாதுகாப்பு கிடைத்துவிடுகிறது. தோலுக்கு ஏற்றபடி க்ரீம்களை வாங்கிவிட்டால் அலர்ஜி கூட ஏற்படாது. குறிப்பாக, அமெரிக்க அரசு வழங்கும் தரப்பாதுகாப்பு அங்கீகாரம் உள்ளது. இந்திய நிறுவனங்கள், அரசு அமைப்புகளின் அனுமதி என்றால் கூட க்ரீம்களை, லோஷன்களை வாங்க யோசிக்கலாம்.

மாத்திரைகளை சாப்பிடுவது தோல் புற்றுநோயை தடுக்குமா என்று கேட்டால், அதற்கு எந்த உத்தரவாதமும் கிடைக்கவில்லை. குறைந்தபட்சமாக உடல் உறுப்புகளில் புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் அழற்சி தவிர்க்கப்படலாம். அவ்வளவுதான். பருத்தி ஆடைகளை அணிவது, சூரிய வெப்பம் அதிகமாக உள்ளபோது வெளியே செல்வதைத் தவிர்த்தால் ஆகியவையே சிறப்பான பயன்தரும் பரிந்துரைகள். க்ரீம், லோஷன், அல்லது மாத்திரைகளை உண்பது சிறப்பானதல்ல.

க்ரீம்கள் லோஷன்கள் வெளியில் தடவப்படுபவை. ஆனால் மாத்திரைகள் உடலுக்குள் செல்பவை. வயிற்றில் அழற்சி, வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. பிற நோய்களுக்கான மருந்துப்பொருட்களோடு, வெயிலுக்கான மாத்திரைகள் சேர்ந்தால் வேறு பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். கவனம்.


ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்