விபச்சாரக்கும்பலில் சிக்கிய காதலியை போலீஸ் காதலன் மீட்கும் கதை! -

 

 


 

 

 

 




 

 

வீடிக்கி தூக்குடெக்குவா

ஶ்ரீகாந்த், காம்னா

ஆங்கிலத்தில் வெளியான டேக்கன் படத்தை தெலுங்கு மொழியில் கண்றாவியான ஒளிப்பதிவில் இசையில் எடுத்தால்... அதுதான் 'இவனுக்கு துணிச்சல் அதிகம்' என்ற தெலுங்குப்படம்.
தெலுங்கு படத்தலைப்பை அப்படியே தமிழில் மொழிபெயர்க்க கூடாது. அது தவறு. நாயகனின் பெயரைக் கூட தலைப்பாக வைக்கலாம். கிராந்தி. நன்றாகத்தான் உள்ளது. அப்படியெல்லாம் நடந்துவிடுமா என்ன? படத்தைப் பார்க்க பார்வையாளர்களுக்கு கூடுதல் துணிச்சல் தேவை.

நீதி என்பது துப்பாக்கித் தோட்டாக்களால் வழங்கப்படுகிறது என நம்புபவர், கிராந்தி. பணிநீக்கம், கடுமையான விமர்சனம் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் குற்றவாளி என தெரிந்தால் அவர்களை பாய்ண்ட் பிளாங்கில் துப்பாக்கி வைத்து சுடுவதுதான் அவரது பாணி. இப்படி செய்தால் சமூகத்தில் குற்றம் குறையும் என நம்புகிறார். கதைப்படி, நாயகனின் இந்த மூடநம்பிக்கையை அவரது மேலதிகாரியும் பெரிதாக புகார் சொல்லாமல் ஏற்கிறார். நாயகன் கிராந்திக்கு ஒரு இளம்பெண் அறிமுகமாகிறார். அவர் வேறு யாருமல்ல. அவரின் பள்ளிக்கால ரவுடித் தோழி. அவரை நாயகன் காதலிக்கிறார். அந்தப் பெண்ணும் பள்ளிக்கால தோழனின் புகைப்படத்தை வைத்து அவனைத் தேடிக்கொண்டிஉரக்கிறார். எதற்கு, அடித்து உதைத்து கல்யாணம் செய்துகொள்வதற்குத்தான்.

நாயகியின் பாத்திரப் படைப்பே அதிரிபுதிரியான பயத்தை ஏற்படுத்துகிறது. மலைமாடு போல வந்து நெற்றியில் தலையை நச்சென இடிப்பதே தவறு. இதில் அதை பாசம், காதல் என அர்த்தப்படுத்திக்கொண்டு படம் முழுக்க திரிவது என இருக்கிறார். இப்படியாக அதீத முட்டாள்தனமாக மூடநம்பிக்கைகளை கொண்ட இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். தான்தான் பள்ளிக்கால தோழன் என்பதை நாயகன் சொல்ல முயல்கிறார்.. கிறார்.... அதற்குள் டேக்கன் படத்தை இயக்குநர் பார்த்துவிட்டார். படம் உடனே மலேசியாவிற்கு சென்றுவிடுகிறது. அங்கு கழுகு டாட்டூ குழு விபச்சாரம் செய்ய பெண்களை கடத்தி வருகிறார்கள். அவர்கள் நாயகி, அவளின் தோழி என இருவரையும் கடத்திச் சென்று போதை ஊசி போட்டு விபச்சாரத்திற்கு தயார்படுத்துகிறார்கள்.

கிராந்தி மலேசியா சென்று தனது காதலியை மீட்பதுதான் கதை. டேக்கனில் நாயகன், அவரது மகளை மீட்பார். இங்கு அதை சற்றுமாற்றி எடுத்திருக்கிறார்கள். அப்படியாச்சும் படம் ஏதாவது தேறுகிறதா என்றால் அம்மணியம்மா... துப்பறியும் காட்சி, சண்டைக்காட்சி எல்லாவற்றையும் சீரியல் கேமராவில் எடுத்திருக்கிறார்கள் போல... வேகமும் இல்லை துடிப்பும் இல்லை. அதைப் பார்க்கும் நமக்கு எந்த கோமாவுக்கு சென்றுவிட்ட உணர்வு.

திரைப்படம் என்பது காட்சி ஊடகம். இயக்குநர் அதை மறந்துவிட்டு, வசனங்களாக எழுதி தள்ளியிருக்கிறார். எனவே, துப்பறியும் கதையைக் காட்சியாக எடுக்கும்போது எந்த புதுமையும் இல்லை. கதையை திருடி எடுத்தால் கூட குறைந்தபட்சம் அதை கெடுக்காமல் இருக்கலாமே சார்? மட்டமான ஒளிப்பதிவை வைத்துக்கொண்டு எதற்கு மலேசியா? உள்நாட்டில் விபச்சாரம் என எடுத்து தொலைந்திருக்கலாமே? தன்னுடைய டூர் ஆசையை இயக்குநர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

ஆந்திராவைச் சேர்ந்தவர் கழுகு விபச்சாரக் குழுவிடம் காசு வாங்கிக்கொண்டு அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். ஏறத்தாழ அந்த நாட்டிற்கு துரோகம் செய்கிறார். அதையாவது நாயகன் தடுத்தாரா என்றால் இல்லை. மன்னித்து விடுகிறார். எதற்காக, அதையெல்லாம் நாம் கேட்க முடியாது.

மைதா மாவு போல நிறம் கொண்ட காம்னாவை வைத்து என்ன செய்யலாம்? நீ ரோலிங்குல போம்மா என கவர்ச்சி நடனம் ஆட வைத்திருக்கிறார்கள். நிறைய இடங்களில் உணர்ச்சிகளை அவரால் வெளிப்படுத்த முயலவில்லை.

படத்தின் இறுதி சண்டைக் காட்சியை எல்லாம் என்ன சொல்வது? துப்பாக்கி வைத்திருந்தால் வில்லன் எளிதாக வென்றிருக்கலாம். திடீரென துப்பாக்கியை எடுத்து நாயகனை சுடாமல், பட்டாக்கத்தியை எடுத்துக்கொண்டு வெட்ட முயல்கிறார். அந்த சண்டையே வெகு சுமாராக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

டேக்கன் படத்தின் மிக மலிவான நகல் பிரதி
 
கோமாளிமேடை டீம்


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்