தலையில் எத்தனை மயிர்க்கற்றைகள் உள்ளன?

 

 



 

தலையில் எத்தனை மயிர்க்கற்றைகள் உள்ளன?

10 ஆயிரம் மயிர்க்கற்றைகள்.

குரங்குகளுக்கு உடல் முழுக்க உரோமங்கள் உண்டு. இப்படி இருப்பது தோலுக்கு பாதுகாப்பு. வெப்பம், குளிர் ஆகிய பருவகால மாறுதல்களையும் எதிர்கொள்ள உதவியது. பரிணாம வளர்ச்சிப்படி, மனிதர்கள் ஆதிகாலத்தில் உடல் முழுக்க முடிகளைக் கொண்டிருந்தாலும் அதற்கான தேவை குறைந்துவிட்டது. வெற்று உடலாக இருந்தால் முடி தேவை. உடைகளை உடுத்தியபோது உடலிலுள்ள உரோமங்கள் மெல்ல குறையத் தொடங்கின. பிறகு அவை காலப்போக்கில் உருவாகவில்லை. உருவான உரோமங்கள் கூட குறிப்பிட்ட நீளத்தில் வளர்ச்சி நின்றுவிட்டது. ஆனால் தலைமுடி அப்படியில்லை.

தலைமுடி என்பது இறந்த செல் போன்றது. அது வளருகிறது என ஷாம்பூ விற்பவர்கள் நடிகைகளை பேன் காற்றில் முடியை பறக்கவிட்டு விளம்பரம் எடுப்பார்கள். அது உடான்ஸ். உண்மையல்ல. பொய்களை திரும்ப திரும்ப சொல்லும்போது நூறில் பத்து பேராவது நம்புவார்கள். ஆனால், இப்படியான பொய்களை இ்ந்தியா போன்ற மூடநம்பிக்கை கொண்ட பகுத்தறிவு குறைந்த சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர்களும் நம்புவதுதான் வேதனை. அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. முடி வளருவது அழகு என்று சொல்லி அதற்கென தனி அழகுசாதன பொருட்களே சந்தையில் குவிந்து கிடக்கின்றன. அத்தனை பேர்களுக்கும் நாம் எதிரியாகி வழக்குகளை சமாளிப்பது கடினம். முடி நல்லது. எதற்கு என்றால் அழகுக்காக அல்ல. அது வளர்ந்துகொண்டே செல்லும். நீங்கள் ஷாம்பூ, கண்டிஷனர் அல்லது மலிவு விலை கொண்ட தாடி பாபாவின் மாட்டு மூத்திர பொருட்களை போட்டு வளர்த்தாலும் சரி. போடாவிட்டாலும் சரி. சூரிய ஒளி தலையில் நேரடியாக படுவதை தலைமுடி தடுக்கிறது. அதுதான் பயன்பாடே தவிர வேறில்லை. தலைமுடியை வழித்தெறிந்துவிட்டால் ஆக்கப்பூர்வ வேலைகளுக்கு நிறைய நேரம் கிடைக்கும்.

பத்தாயிரம் என்பதில் கூடக்குறைய பதினோராயிரம் வரை இருக்கலாம். சிவப்பு முடி, பொன்னிற முடியைக் கொண்டவர்களுக்கு அதிக மயிர்க்கற்றைகள் உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்