இடுகைகள்

அச்சுறுத்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கற்ற அறிவை நினைவில் வைத்து செயல்படும் விலங்குகள்! - எட்வர்ட் டோல்மனின் ஆய்வு

படம்
  அமெரிக்காவில் புகழ்பெற்ற உளவியலாளர் என எட்வர்ட் டோல்மனை உறுதியாக சொல்லலாம். இவர் முன்னர் நாம் பார்த்த உளவியல் ஆய்வாளர்களான தோர்ன்டைக், வாட்சன் ஆகியோரை விட வேறுபட்ட அறிவியல் அணுகுமுறையைக் கொண்டிருந்தார். இவர் குணநலன் சார்ந்த உளவியலை அறிவியல் அணுகுமுறை சார்ந்துதான் அணுகினார். கோணம், அறிவாற்றல், ஊக்கம் ஆகியவற்றை முக்கிய அம்சங்களாக எடுத்துக்கொண்டார். ஜெர்மனியில் கெசால்ட் உளவியல் முறையை கற்று பல்வேறு விஷயங்களை அறிந்துகொண்டார். இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து பர்பஸிவ் பிஹேவியரிசம் என்ற கோட்பாடை உருவாக்கினார். இதை தற்போது காக்னிட்டிவ் பிஹேவியரிசம் என அழைக்கின்றனர்.  டோல்மன், குறிப்பிட்ட நிபந்தனைகளை முன்வைத்து விலங்குகளின் மீது செய்யும் சோதனைகளை நம்பவில்லை. ''விலங்குகளுக்கு உணவை பரிசாக கொடுக்காமல் ஒரு வேலையை செய்ய வைத்தாலும் அவற்றால் குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும்'' என்று கூறினார். இப்படி கற்ற அறிவை சேர்த்து வைத்து விலங்குகள் பின்னாளில் பயன்படுத்துகின்றன என்றார். எலிகளுக்கு சில புதிர்களை விடுவித்தால் உடனே உணவும், மற்றொரு குழு எலிகளுக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு உண

செய்தி ஆதாரங்களை பாதுகாப்பது முக்கியம்

படம்
  பத்திரிகையாளர்களுக்கு செய்திகளைக் கொடுக்கும் ஆதார ஆட்கள் பல்வேறு துறைகளிலும் இருப்பார்கள். இவர்கள், பத்திரிகையாளர்கள் எழுதிக் கொடுக்கும் செய்தியில் ஆதிக்கம் செலுத்துவார்கள். செய்தி ஆதார மனிதர்கள் இல்லையென்றால் துறைசார்ந்த பல்வேறு முக்கிய தகவல்களை நாளிதழ்களில் எழுதுவது சாத்தியப்படாது. செய்திகளைத் தரும் ஆதாரங்களிடம் தொழில்முறையாக நேர்மையாக, மரியாதையாக நடந்துகொண்டு வருவது முக்கியம். செய்தி ஆதாரங்களிடம் மிகவும் நெருங்கிப் பழகுவது, செய்தியைப் பார்க்கும் கோணத்தை மாற்றிவிடும். எனவே, சற்று தள்ளி இருந்து செய்திகளைப் பெறுவது நல்லது. இந்த முறையில் செய்திகளை பல்வேறு கோணத்தில் பார்வையில் பார்த்து எழுத முடியும். பத்திரிகையாளர், ஆதார மனிதர்கள் என இருதரப்பிலும் நம்பிக்கை உருவாவது முக்கியம். அப்போதுதான் செய்திகளை எளிதாக பெறமுடியும். செய்தி ஆதார மனிதர்களின் பெயர்களை, பத்திரிகையாளர் எந்த சூழ்நிலையிலும் வெளியிடக்கூடாது. வெளியிடும் செய்தி காரணமாக பத்திரிகையாளர் அரசு அதிகாரத்தால் மிரட்டப்படும்போது கூட செய்தி ஆதார மனிதர்களை பாதுகாக்க வேண்டும். செய்தி ஆதார மனிதர்கள் கொடுத்த ஆதாரங்கள், ஆவணங்கள் தவறானவை எ

கலையை முழுக்க அரசியலாக மாற்றுவது அனைத்து மக்களுக்கும் பிடித்தமானதாக இருக்காது! - ஆர்ஜித் சென், ஓவிக்கலைஞர்

படம்
              நான் உருவாக்குவதற்கு நான்தான் பொறுப்பு ! ஓவியர் ஆர்ஜித் சென் கோவாவைச் சேர்ந்த கலைஞர் ஆர்ஜித் சென் . இவர்தான் இந்தியாவில் முதல் கிராபிக் நாவலை 1994 இல் ரிவர் ஆப் ஸ்டோரிஸ் என்ற பெயரில் எழுதினார் . அரசின் சட்டங்கள் , கொள்கைகள் பற்றி கார்டூன்களை வரைவது இவருக்கு பிடித்தமானது . அடிக்கடி வைரலாகும் கார்ட்டூ்ன்களில் இப்போது காமிக்ஸ் சென்ஸ் என்ற பெயரில் பத்திரிகை ஒன்றைத் தொடங்கியுள்ளார் . சென்னும் அவரது மனைவியும் பீப்பிள் ட்ரீ என்ற வடிவமைப்பு மையம் ஒன்றைத் தொடங்கி செயல்பட்டு வருகின்றனர் . சென் , இந்தியாவில் நடைபெறும் அனைத்து கலை விழாக்களிலும் கலந்துகொண்டுள்ளார் . இதுபற்றி அவரிடம் பேசினோம் .      காமிக்ஸிற்கான இதழ் தொடங்கவேண்டுமென எப்படி தோன்றியது ? எனது எட்டு வயதிலிருந்து இப்படி காமிக்ஸ் இதழ் தொடங்கவேண்டுமென்று நினைத்து வருகிறேன் . இப்போது தொடங்கியுள்ள காமிக்ஸ் சென்ஸ் இதழ் , பதிமூன்று முதல் பதினெட்ட வயது வரையிலானவர்களுக்கு . இந்த வயதிலுள்ளவர்கள் பல்வேறு டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள் . அவர்களை அதிலிருந்து மாற்றி வாசிப்பு பக்கள் கொண்ட

நகைச்சுவையை செய்ய நாட்டில் ஜனநாயகத்தன்மை அவசியம்! - சைரஸ் புரோச்சா

படம்
    சைரஸ் புரோச்சா         சைரஸ் புரோச்சா எழுத்தாளர் , டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களை ஹஸே தோ பாஸே நிகழ்ச்சியில் பங்கேற்றத் தூண்டியது எது ? என்னை நானே எவ்வளவு சிறந்தவன் என்று கண்டுபிடிக்கத் தோன்றியது . அந்த முயற்சியின் விளைவாகவே நான் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன் . நிகழ்ச்சியின் கான்செப்ட் வேடிக்கையும் , சுவாரசியமும் கொண்டது . நீங்கள் ரிகானா போன்ற புகழ்பெற்ற ஒருவராக இருக்கலாம் . ஆனால் ஒருவரை சிரிக்க வைப்பது கடினமான ஒன்று . நீங்கள் எவ்வளவு சிறந்தவர் என்று நீங்களே தெரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பு . பொதுமுடக்க காலத்தில் உங்களை எப்படி பரபரப்பாக வைத்துக்கொள்கிறீர்கள் ? தினசரி எனது நாயுடன் ஐந்துமுறை வெளியே செல்கிறேன் . அதிகாலை ஆறுமணிக்கு உடற்பயிற்சி செய்கிறேன் . இந்தியாவில் நகைச்சுவை என்பது எப்படி இருக்கிறது ? நீங்கள் நகைச்சுவை செய்வதற்கு நாட்டில் ஜனநாயகத்தன்மை தேவையாக உள்ளது . கூடவே பிரச்னைகளை சமாளிக்க நல்ல வழக்கறிஞரும் தேவை . இதில் நிறைய பிரச்னைகளும் உள்ளதுதான் . அதிலும் நீங்கள் மக்கள் நினைப்பதுபோல் இல்லாமல் நகைச்சுவை செய்யமுடியும் . ஜனநாயகத்தன்மையோடு ந

உண்மையை விசுவாசியுங்கள் இந்தியர்களே! - சேட்டன் பகத்

படம்
எங்களைக் காப்பாற்றுவதாக கூறும் அரசியல்வாதிகளே, சமூக ஆர்வலர்களே உங்கள் அனைவரின் நோக்கத்திற்காக உங்களை வணங்குகிறேன். நாங்கள் அணிந்துள்ள தொப்பி உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் நாங்கள் கலவரத்தில் பட்ட காயங்கள், அதில் எங்களை ஈடுபடுத்திய உங்களது குற்றவுணர்வு நழுவாமல் பார்த்துக்கொள்கிறது. இந்தியா ஜனநாயகப்பூர்வ குடியரசு என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நாட்டில் பெரும்பான்மையினருக்கு அதே நம்பிக்கை இருக்கிறதா என்று தெரியவில்லை. வாக்குவங்கிக்காக பல்வேறு இனக்குழுக்களை நாட்டின் விரோதிகளாக முன்னே நிறுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனை துணிச்சலாக எதிர்த்துப் பேசியவர்களின் வாட்ஸ் அப் கூட இன்று உளவு பார்க்கப்படுகிறது. நல்லரசு நினைத்தால் எதுவும் செய்யலாம்தானே?  கல்வி, தொழில் என அனைத்திலும் நாங்கள் இன்று பின்தங்கவில்லை. பெரும்பான்மை மதங்களைச் சார்ந்தவர்களுக்கு நிகராக நாங்களும் வளர்ந்துள்ளோம். இதற்கு அரசு ஒத்துழைப்பு, நண்பர்களின் ஆதரவு ஆகியவை பின்னணியாக உள்ளன. என்னை நீங்கள் இப்போது அடையாளம் கண்டிருப்பீர்கள். பாஷா, அப்துல்லா, சாதிக் அலி, சித்திக் அலி, நிஜாமுதீன் என ஏதாவொரு பெய