கலையை முழுக்க அரசியலாக மாற்றுவது அனைத்து மக்களுக்கும் பிடித்தமானதாக இருக்காது! - ஆர்ஜித் சென், ஓவிக்கலைஞர்
நான் உருவாக்குவதற்கு நான்தான் பொறுப்பு!
ஓவியர் ஆர்ஜித் சென்
கோவாவைச் சேர்ந்த கலைஞர் ஆர்ஜித் சென். இவர்தான் இந்தியாவில் முதல் கிராபிக் நாவலை 1994 இல் ரிவர் ஆப் ஸ்டோரிஸ் என்ற பெயரில் எழுதினார். அரசின் சட்டங்கள், கொள்கைகள் பற்றி கார்டூன்களை வரைவது இவருக்கு பிடித்தமானது. அடிக்கடி வைரலாகும் கார்ட்டூ்ன்களில் இப்போது காமிக்ஸ் சென்ஸ் என்ற பெயரில் பத்திரிகை ஒன்றைத் தொடங்கியுள்ளார். சென்னும் அவரது மனைவியும் பீப்பிள் ட்ரீ என்ற வடிவமைப்பு மையம் ஒன்றைத் தொடங்கி செயல்பட்டு வருகின்றனர். சென், இந்தியாவில் நடைபெறும் அனைத்து கலை விழாக்களிலும் கலந்துகொண்டுள்ளார். இதுபற்றி அவரிடம் பேசினோம்.
காமிக்ஸிற்கான இதழ் தொடங்கவேண்டுமென எப்படி தோன்றியது?
எனது எட்டு வயதிலிருந்து இப்படி காமிக்ஸ் இதழ் தொடங்கவேண்டுமென்று நினைத்து வருகிறேன். இப்போது தொடங்கியுள்ள காமிக்ஸ் சென்ஸ் இதழ், பதிமூன்று முதல் பதினெட்ட வயது வரையிலானவர்களுக்கு. இந்த வயதிலுள்ளவர்கள் பல்வேறு டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.அவர்களை அதிலிருந்து மாற்றி வாசிப்பு பக்கள் கொண்டு வரவேண்டுமென இதழ் நிறுவனர் சஞ்சீவ் குமார் விரும்பினார்.
இந்த இதழை எப்படி வரையறை செய்ய விரும்புகிறீர்கள்?
நான் காமிக்ஸ் சென்ஸ் இதழை மதுபானி பாணியில் அமைந்த இதழாக நினைக்கவில்லை. மேலும் இதில் இத்தாலி நாட்டின் காமிக்ஸ் வடிவமும் இருக்கும். இந்தியா மட்டுமல்லாது உலகிலுள்ள பல்வேறு ஓவிய பாணிகளை கடைபிடித்து உருவாக்கவேண்டுமென நினைக்கிறேன். கதைகளும் இந்த வகையில் உருவாக்கப்படவேண்டும் என முயன்று வருகிறேன்.
நீங்கள் அண்மையில் பாஜக தேர்தலில் தோல்வி பெற்றதை விமர்சித்து படங்களை வரைந்திருந்தீர்கள். கொரோனாவை மோசமாக கையாண்டதையும் கூட உங்கள் பாணியில் வெளிப்படுத்தியிருந்தீர்கள்?
நான் வரைந்த படங்கள் அனைத்துமே இந்த சூழ்நிலையில் நான் எதுவுமே செய்யமுடியவில்லை என்ற இயலாமையில் ஏற்பட்டதுதான். இவை மக்களின் மனதை பிரதிபலிப்பதால் அவை வரவேற்பை பெறுகின்றன. நான் வரையும் படங்களில் எழுத்துகளையும் படங்களையும் பயன்படுத்துகிறேன். மக்கள் நான் எழுதும் எழுத்துகளை தாண்டி யோசிக்கும்போது படத்தைப் பார்க்கத் தொடங்குவார்கள். காமிக்ஸின் அடிப்படை பலமே மொழிதான். சாதாரணமாக படம் வரைவதற்கும், காமிக்ஸை உருவாக்குவதற்கும் வேறுபாடு உண்டு.
கடந்த மார்ச் முதல் நீங்கள் உருவாக்கும் படங்களிக் உங்கள் ஸ்டாம்ப் உள்ளது இதற்கு முன்பு சமூக வலைத்தளத்தில் உங்கள் கையெழுத்து கூட இருக்காது. ஏன் இந்த திடீர் மாற்றம்?
நான் எழுதும் விஷயங்களுக்கு முழுப்பொறுப்பு நான்தான் என்பதால்தான் எனது பெயரை உருவாக்கியுள்ளேன். இதற்கு முன்னால் பெயரை இப்படி போடவேண்டும் என்று தோன்றவில்லை. அப்போது கூட படத்தை உருவாக்கி வெற்றி பெற்றால் அது எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்று எனக்கு தெரியாமல் இருந்தது. முதலில் அனைத்திலும் எனது பெயரை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. இப்போது அப்படி பெயர் இல்லாத மனிதராக காட்டிக்கொள்ளவேண்டும் என்று தோன்றவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக அரசை விமர்சிப்பவர்கள் மீது பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலை எப்படி பார்க்கிறீர்கள்?
நான் உருவாக்கும் விஷயங்களை நானே சுயமாக தணிக்கை செய்து வருகிறேன். நாம் அறிந்த, அல்லது அறியாதவர்கள் கூட இப்போது நான் செய்யும் வேலைகளைப்பார்த்து பயந்து வருகிறார்கள். நீ இன்னும் ஜெயிலுக்கு போகலையா, எப்படி ஜெயிலுக்கு போகாமல் இருக்கிறீர்கள் என்று கமெண்டுகளை அடித்து வருகிறார்கள். அவர்கள் கூறுவது முழுக்க பொய் அல்ல. அதற்கான வாய்ப்பும் உள்ளது. அழுத்தமான சூழல் நம்மைச் சுற்றியுள்ள நம்மை விரும்புபவர்களையும் அச்சுறுத்துகிறது.
அரசியல் பகடி என்பது இன்று புகழ்பெற்ற கலை வடிவமாக உள்ளது என நினைக்கிறீர்களா?
கலை என்பதை அப்படி பிரித்துப் பார்க்க முடியாது. கலை என்பது மக்களுக்கு தொடர்புடையதாக இருக்கவேண்டும். இதனை முழுக்க அரசியல்மயப்படுத்தினாலும் மக்களுக்கு புரியும் என்று கூறமுடியாது. நான் எனது கலையை எப்போதும் ஆர்ட் கேலரியில் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புவதில்லை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
பெனிடா பெர்னாண்டோ
கருத்துகள்
கருத்துரையிடுக