தேச பாதுகாப்பு சட்டம் என்பது பசுக்கொலைகளை உள்ளடக்கியது அல்ல! முன்னாள் நீதிபதி கோவிந்த் மாத்தூர்

 

 

 

 


 

 

கோவிந்த் மாத்தூர், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி


சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் மீது கொரோனாவை பரப்பிய காரணத்திற்காக வழக்கு பதியவேண்டும் என்று கூறியுள்ளதே?


நீங்கள் நீதிமன்றம் இயங்கும் விதத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நீதிமன்றம் சொல்லும் ஒவ்வொரு வாக்கியங்களையும் ஆராய்ந்தால் கடினமாகவே இருக்கும். நீதிமன்றங்கள் இப்படி கூறுவது இயல்பானதுதான். இதனை தலைப்புசெய்தியாக ஊடகங்கள் மாற்றுகின்றன. ஆனால் இதனால் முக்கியமான விஷயங்கள் மக்களின் கவனத்திற்கு வராமல் போகின்றன.


நீதிபதிகள் தங்கள் வரையறைகளைத் தாண்டி நடந்துகொள்கிறார்கள் என்று புகார்கள் கூறப்படுகின்றனவே?


உயர்நீதிமன்றம் இப்படி நடந்துகொள்வதாக தெரிந்தால் உடனே உச்சநீதிமன்றத்தை அணுகலாம். அதில் எந்த தவறும் இல்லை. நீதிமன்றங்கள் நடந்துகொள்வதற்கான விதிமுறைகள் உள்ளன. தவறுகள் கண்டறியப்பட்டால் அவை மெல்ல சரிசெய்யப்படுவது உறுதி.


பெருந்தொற்று காலத்தில் நீதிமன்றத்தின் செயல்பாடு எப்படியிருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள்? அவர்களின் பணி என்ன?


அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளைக் காப்பதுதான் நீதிமன்றத்தின் பணி. அரசின் செயல்பாடுகளில் ஏதேனும் தவறு தெரிந்தால் அதனைப் பற்றி கேள்வி கேட்பது நீதிமன்றத்தின் கடமைதான். பெருந்தொற்று காலத்தில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர் இயங்கிவருகின்றனர். ஆனால் நீதிமன்றங்கள் மூடிக்கிடக்கிறது. இப்படியிருப்பது சரியில்லை என சிறப்பு பெஞ்ச் ஒன்றை அமைத்து நாங்கள் உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்று பற்றி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினோ்ம்.



மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பு தொடர்பான தங்களது அனுபவத்தை கூறுங்கள்?


கடந்த சில ஆண்டுகளாக அரசு, தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பது, அதன் மீது தாக்குதல் நடத்துவது என செயல்பட்டு வருகிறது. இதனை நீதிமன்றங்கள் தடுக்க வேண்டிய பணி உள்ளது. நம் நாட்டில் தேசதுரோகி என யாரையும் குற்றம் சாட்ட முடியும். நாட்டிலுள்ள 99 சதவீத மக்கள் நாட்டின் மீது அக்கறை கொண்ட மக்களாகவே உள்ளனர். எனக்கு குறிப்பிட்ட விவகாரத்தில் மாற்றுக்கருத்து இருக்கிறது என்றால் எனக்கு தேசபக்தி இல்லையென்று அர்த்தமாகாது. அரசு இப்படி மாற்றுக்கருத்து பேசுபவர்களை பாதுகாக்கவேண்டும். உத்தரப்பிரதேசத்தில் பலரும் வன்முறையை கையில் எடுத்துக்கொண்டு பிறரை சாலையில் தாக்குவது தவறான முன்னுதாரணம். இந்த நிலையில் அங்கு நீதிமன்றங்கள் தலையிடுவது அவசியமாகிறது.


லக்னோவில் மார்ச் 2020இல் கூட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது வன்முறையைத் தூண்டியதாக வழக்கு பதியப்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட்டது. நீதித்துறையதைப் பொறுத்தவரை அரசியலமைப்புச்சட்டம் தான் பகவத்கீதை. அதைத்தான் பின்பற்றவேண்டும். அந்த சமூக ஆவணம்தான் நமது இந்தியாவை குடிமைச்சமூகமாக மாற்றும்.


தேசிய பாதுகாப்பு சட்டம் தொடர்பாக நீங்கள் நிறைய தீர்ப்புகளை வழங்கியுள்ளீர்கள். இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளீர்கள்?


இந்தியாவில் தேசிய பாதுகாப்பு சட்டம் 1980இல் அறிமுகமானது. இச்சட்டம் பற்றி மசோதாவில் பேசப்பட்டபோதே ஏராளமான கருத்துவேறுபாடுகள் எழுந்தன. இதனை எளிதாக மக்களுக்கு எதிராக பயன்படுத்த முடியும். இப்போது கோவிட் விதிமுறையை கடைபிடிக்காத மக்கள் மீது இச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்கலாம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இதுவே சான்று.



பசுக்கொலை எ்ன்பது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வருமா?


இல்லை தேசிய பாதுகாப்பு என்பது அதைவிட பெரிய விவகாரம். இதில் இருவர் மட்டுமே காவல்துறை அமைப்பு சார்ந்த நியமிக்கப்படுபவர்கள். பிறர் அனைவருமே மத்திய அரசு அரசியல் கட்சிகள் சார்ந்து நியமிக்கிறது. இதனால் இச்சட்டம் ஜனநாயகப்பூர்வமாக அமலாக்கப்பட வாய்ப்பு உள்ளது. பசுக்கொலை என்பது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வராது.


முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றிய உங்கள் கருத்து?


நான் அதைப்பற்றியெல்லாம் எந்த கருத்தையும் சொல்ல விரும்பவில்லை.


நீங்கள் ராஜ்ய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட விரும்புகிறீர்களா?


இல்லை. தேர்தலில் போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினராகவே விரும்புகிறேன். சிபாரிசு செய்து உறுப்பினர் பதவியை பெற விரும்பவில்லை.


முஸ்லீம்களை நீதிபதிகளாக பரிந்துரைத்திருக்கிறீர்களா?


ஆமாம். கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.


நீங்கள் நீதிபதியாக பணியாற்றியபோது, ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா?


நான் பணியாற்றிய 17 ஆண்டுகளில் எந்த அழுத்தமும் எனக்கு கொடுக்கப்பட்டதில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில் பன்வாரிதேவி வழக்கை விசாரித்தபோது, கேபினட் அமைச்சர் பதவி விலக நேர்ந்தது. நீதிபதி மறைமுகமாக அல்லது நேர்முகமாக கொடுக்கு்ம் அழுத்தங்களை கண்டுகொள்ளக்கூடாது என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டேன்.


எதிர்காலத்தில் அரசு அமைப்புகளில் இடம்பெறுபவர்களுக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. நீதிபதிகள் தங்களது பணி ஓய்வுக்குப் பிறகு மனித உரிமை ஆணையம் உட்பட எந்த அரசு அமைப்புகளிலும் இணையக்கூடாது. பணிபுரியக்கூடாது. நான் எனது பணி ஓய்வுக்குப் பிறகு எந்த அரசு அமைப்பிலும் பணிபுரியக்கூடாது என்பதை முடிவு செய்துள்ளேன். இப்படி அரசு அமைப்பில் நீதிபதிகள் இடம்பெறுவது ஆபத்தானதாக கருதுகிறேன்.



பினான்சியல் எக்ஸ்பிரஸ்


அபூர்வா விஸ்வநாதன்



கருத்துகள்