தடுப்பூசி விலை நிர்ணயித்தல் விவகாரத்தில் மத்திய அரசு தவறு செய்துவிட்டது! - அமர்த்தியா லகிரி

 

 

 

 

 

 https://econ2017.sites.olt.ubc.ca/files/2016/01/HR-Amartya-Lahiri-3-1024x746.jpg

 

 

அமர்த்தியா லகிரி


பேராசிரியர், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம்


பொதுமக்கள் மத்திய அரசின் தடுப்பூசி திட்டம் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசிகளை மாநிலங்கள் பெறும்படி மத்திய அரசு உத்தரவிட்டது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?


இந்தியாவின் தடுப்பூதி திட்ட முறை கடுமையான தேக்கத்தை சந்தித்துள்ளது. தொடக்கத்திலேயே இந்திய அரசு தேவையான தடுப்பூசிகளை தயாரிக்க ஆர்டர் கொடுக்கவில்லை. இந்தியாவுக்கு இரண்டு பில்லியன் டோஸ்கள் மருந்து தேவை. இதில் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 12 சதவீதத்தினர் மட்டுமே முதல் டோஸ் மருந்தைப் பெற்றுள்ளனர்.அரசு இப்போதுதான் கோவிஷீல்டு மருந்திற்கான நூறு மில்லியன் டோஸ் ஆர்டர்களை அளித்துள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட்டின் மருந்து தயாரிப்புத் திறன் 700 மில்லியன் டோஸ்களாக உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் திறன் 150 மில்லியன் டோஸ்களாக உள்ளது. இங்கு கூறியிருப்பது நிறுவனங்களில் ஆண்டு தயாரிப்பு. ஆனால் மத்திய அரசு பற்றாக்குறையைப் போக்க மருந்துகளை இறக்குமதிசெய்வதற்கான முயற்சிகளையோ, சீரம் அல்லது பாரத் நிறுவனத்திற்கு புதிய ஆலைகளை உருவாக்கவோ நிதியுதவிகளை வழங்கவில்லை.


அரசு மூன்றுவிதமாக மருந்துகளின் விலைகளை வைப்பது புதிதான ஒன்றல்ல. இப்படி அறிவிப்பை வெளியிடுவதன் மூலம் பிரச்னைகள் ஏற்பட்டது என்றாலும் தடுப்பூசியின் விலை உலகிலேயே குறைவாகத்தான் இருந்தது. பல்வேறு வித விலைகளை விதிப்பது, அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் செலவுகளை பெறுவதற்கு உதவும். மத்திய அரசு 50 சதவீத மருந்தை குறைந்த விலைக்கு வழங்கும். இதற்குமேல் தேவையானவற்றை அதிக விலையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் என்பது குழப்பமாக உள்ளது. எதற்கு மத்திய அரசிடம் மாநில அரசுகள் அதிக விலைக்கு தடுப்பூசிகளை வாங்க வேண்டும்? இதற்கான சுமையை மாநில அரசுகள் சுமக்க வேண்டியுள்ளது. மத்திய அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரி மூலம் மாநில அரசுகளின் வருவாய் குறைந்துவிட்டது. அனைத்து மாநிலங்களும் நிதிக்கு மத்திய அரசை சார்ந்தே இருக்கின்றன.


மேலும் தடுப்பூசி உற்பத்தி இதற்கேற்ப அதிகரிக்கவில்லை. அரசிடமிருந்து தேவையான தகவல்களை பெறாமல் நிறுவனங்கள் மருந்துகளை தயாரிக்க முடியாது. ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் திட்டத்தால் தடுப்பூசி வழங்கும் திட்டமே பேரிடராக மாறிவிட்டது.


இதற்கு ஏதாவது தீர்வுகள் உள்ளதா?


மத்திய அரசு மருந்துகளை மாநிலங்களுக்கு வழங்க தீட்டியுள்ள திட்டம் தவறானது. குறிப்பாக பல்வேறு விலை நிர்ணய முறை. நாட்டிலுள்ள மக்களுக்கு முழுவதுமாக ஒரே விலையில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும். மத்திய அரசு தரகர் போல நின்று தடுப்பூசி நிறுவனங்களிடம் பேசி சரியான விலையில் தடுப்பூசிகளைப் பெற்று வாங்கி மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டும். மக்களில் குறிப்பட்ட சதவீதத்தினருக்கு இதனை இலவசமாக வழங்கவேண்டும். பிறருக்கு உள்நாட்டு உற்பத்தியில் 0.5 முதல் 0.7 வரையிலான தொகையில் வழங்கலாம். இப்படிக்கொடுப்பதால் பெரிய நஷ்டம் ஏற்பட்டு விடாது. ஒருவார பொதுமுடக்கத்தால் உள்நாட்டு உற்பத்தியில் 5.9 சதவீதம் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இது பெரிய நஷ்டத்தை சுமையை அரசுக்கு ஏற்படுத்தாது.


இந்தியா இப்போது கோவிஷீ்ல்ட், கோவாக்ஸின், ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசி மருந்துகளை பயன்படுத்த தொடங்கியுள்ளது. இதுகூட தாமதமான நடவடிக்கைதான். பைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனங்களோடு சேர்ந்து ஒப்பந்தங்களை செய்திருந்தால் பாதுகாப்பு அடிப்படையில் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கியிருக்கலாம். சீனாவில் கூட பைசர் இப்படி செயல்பட்டது. ஆனால் இந்திய அரசு இதனை செய்யவில்லை. நிலைமை மோசமாகி வருவதால் தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தியே ஆகவேண்டும். அப்போதுதான் நிலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.


அண்மையில் உச்சநீதிமன்றம், மத்திய அரசு கட்டாய காப்புரிமைச் சட்டத்தின் கீழ் தடுப்பூசிகளை தயாரிக்கலாமே என்று கேட்டது. இதனை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் கூட தனது கடிதத்தில் கூறியிருந்தார். இதில் உங்கள் பார்வை என்ன?


இது யோசிப்பதற்கான சரியான வழிதான். இந்த வழியில் அரசு பாரத் பயோடெக்குடன் ஒப்பந்தம் செய்துகொண்டு தடுப்பூசிகளை தயாரிக்கவேண்டு்ம். இப்படி தயாரிக்கும் டோஸ் ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட விலையைத் தீர்மானித்து அந்த நிறுவனத்திற்கு அரசு வழங்கவேண்டியதிருக்கும். ஆனால் நாட்டில் அவசரநிலை போல தீர்மானித்து இதனை செய்யலாம். மேலும் முக்கிய சிக்கலாக, கோவாக்ஸின் பிறருக்கும் கூட தயாரிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டிருக்கலாம்.


தேசிய தடுப்பூசித்திட்டத்தில கொரோனா தடுப்பு மருந்தை இணைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறதே?


உண்மைதான். ஆனால் தடுப்பூசி திட்டத்தில் இணைக்கப்பட்ட அனைத்து மருந்துகளும் இலவசமானவை. அதில் கொரோனா மருந்தை இணைப்பதில் பிரச்னை இல்லை. ஆனால் இம்மருந்து உலகம் முழுவதும் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே இத்திட்டத்தை இப்போதைக்கு செயல்படுத்த முடியாது.


மத்திய அரசு தடுப்பூசிகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்கிவருகிறது. இதனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


முன்னுரிமை என்பது முக்கியம்தான். நீண்ட பொதுமுடக்கத்தில் கூட வேலை செய்யாமல் இருக்க முடியாத தொழிலாளர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவது முக்கியம்.


லிவ் மின்ட்








கருத்துகள்