உலக மக்களை குரங்குகளாக்கும் கிறுக்கு வில்லனைத் தடுக்கும் உதவாக்கரை நாயகன்! - லூனி ட்யூன்ஸ்
லூனி ட்யூன்ஸ்
Written by | Larry Doyle |
---|---|
Based on | Looney Tunes by Warner Bros. |
Music by | Jerry Goldsmith |
---|---|
Cinematography | Dean Cundey |
Directed byJoe Dante
படத்தில் நாயகன், நாயகி என நாம் நினைத்துக்கொள்வது இரண்டு கார்ட்டூன் பாத்திரங்கள்தான். இவர்களுக்கு உதவி செய்ய இரண்டு நடிகர்கள் உள்ளனர். அப்படித்தான் படத்தை ஈகோவும் அதிக எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்கவேண்டும்.
படம் முழுக்க குழந்தைகளுக்காக அர்ப்பணிப்பாக எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து காட்சிகளும் முழுக்க லாஜிக் இல்லாத மேஜிக்கிற்காகவே எடுக்கப்பட்டவை என்பதால் சோபாவில் சாய்ந்துகொண்டு ரிலாக்சாக பார்க்கலாம்.
அக்மே என்ற தொழில்நிறுவனம் உளவுத்துறை அதிகாரிகளை கடத்தி் வைத்துள்ளது. எதற்காக? அவருக்குத்தான் நீலக்குரங்கு எனும் வைரத்தை எடுக்கும் வழி தெரியும். அதனை அவர் தானாக எப்படி சென்று எடுக்கமுடியும். அந்தளவு புத்தி வேலை செய்தால், அவர் எதற்கு உளவுத்துறை அதிகாரியை கடத்தி வைக்கவேண்டும். உளவுத்துறையின் மகன் வந்து வைரத்தை எடுத்து வந்து கொடுத்துவிட்டு அவரை மீட்டுப்போக வேண்டும் என்பதுதான் அக்ரிமென்ட்.
இந்த வைரத்தை எடுக்கும் பயணத்தில் வார்னர்ஸ் பிரதர்ஸில் செக்யூரிட்டியாக வேலை செய்து ஆர்வக்கோளாறால் வேலை இழக்கும் இளைஞர், வார்னர் பிரதர்ஸின் அனிமேஷன் பிரிவு துணைத்தலைவராக இருக்கும் பெண்மணி, அதில் நடிக்கும் வாத்து, முயல் என ஆகியோர் டீமாக செல்கிறார்கள். லாஸ் வேகாஸ் சென்று கிளப் டான்ஸ் அடிக்கும் பெண்ணை நைஸ் செய்து குயின் கார்ட்டை கடத்தி வந்து தந்தையை காப்பாற்ற முயல்கிறார் மகன். அதில் நடக்கும் காமெடி களேபரங்கள்தான் படம்.
படத்தின் தமிழ் டப்பிங் அசத்தலாக வந்திருக்கிறது. இதில் டயலாக் பேசுவதில் பின்னி எடுப்பது டஃபபி எனும் வாத்துதான். பிராண்டன் பிராசசருடன் வலம் வரும் பிரேம்ஜி பாத்திரம்தான் டஃப்பி. படத்தை ரசித்துப் பார்க்க உதவுகிறது இப்பாத்திரம்.
அடுத்து அக்மே நிறுவன முதலாளி ஏராளமாக கிறுக்கு பிடித்த வில்லன். அவரின் பாத்திரமும் ரசிக்கும் வைக்கும் விதமாக உள்ளது. ஒருவரைக் கொல்ல இரண்டிற்கும் மேற்பட்ட வழிகளை யோசித்து வைப்பது கோமாளித்தனமாக இருந்தாலும் நிறைய இடங்களில் கைகொடுக்கிறது. இப்படி கிறுக்குத்தனமும், புத்திசாலியுமாக கார்ட்டூன் பாத்திரத்திற்கு இணையான இவரின் உடல்மொழி படம் நெடுக அசத்துகிறது.
படத்தில் ஆல்பிரட் ஹிட்ச்சாக்கின் சைக்கோவில் வரும் பாத்ரூம் காட்சியைக் கிண்டல் செய்வது, புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை பகடி செய்வது, இறுதியில் பிராண்டன் பிராசசர் தன்னைத்தானே சுய எள்ளல் செய்வது என பல காட்சிகள் புத்திசாலித்தனமாக பொழுதுபோக்குத்தன்மையுடன் நினைத்து சிரிக்கும்படி எடுக்கப்பட்டுள்ளது.
அந்த நீலக்குரங்கு நீங்கள்தான்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக