இந்தியாவின் அனைத்து முக்கியமான ஏஜென்சிகளும் தோற்றுவிட்டன! டாக்டர் டி ஜேக்கப் ஜான்
இந்தியாவின் அனைத்து முக்கியமான ஏஜென்சிகளும் தோற்றுவிட்டன!
நேர்காணல்
டாக்டர் டி ஜேக்கப் ஜான்
இரண்டாவது அலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறதா?
நோய்ப்பரவலின் வேகமும், அளவும் எனக்கு ்ஆச்சரியத்தை அளிக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு பாதித்த கொரோனா வைரஸிற்கு மாற்றாக டி614ஜி எனும் புதிய வகை மாறியுள்ளது. இந்த மாறியுள்ள வைரஸ் இரண்டாவது அலைக்கு காரணமா என்று தெரியவில்லை. மாறியுள்ள கொரோனா வைரஸ் இங்கிலாந்து, பிரேசில் , தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். நோய்த்தொற்றை கண்டுபிடித்து தடுக்கும் பொறுப்பில் உள்ள ஐசிஎம்ஆர், ஐஎன்எஸ்ஏ, சிஓஜி ஆகிய மூன்று அமைப்புகளும் இதில் தோல்வியைத் தழுவியுள்ளன. வைரஸ்களை கண்டுபிடிக்கும் ஆரா்ய்ச்சி அமைப்புகளையும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கத் தவறிவிட்டோம். அதற்காகத்தான் இப்போது விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனைக் கொடுக்கவே நாம் தடுமாறி வருகிறோம். மருத்துவ அடிப்படைக் கட்டமைப்பில் எங்கு நாம் தவறு செய்துள்ளோம்?
இயல்பாக இருக்கும்போது மருத்துவக் கட்டமைப்பை அதிகம் நீட்டித்துதான் பயன்படுத்தி வந்தோம். ஆறில் ஒரு பங்கு படுக்கைகள், மூன்றில் இருபங்கு மருத்துவர்கள், நான்கில் மூன்று பங்கு செவிலியர்கள் என்றுதான் நமது அமைப்பு செயல்பட்டு வந்தது. இதனால்தான் கோரக்பூரில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆக்சிஊன் வாயு இல்லாமல் நிறைய குழந்தைகள் இறந்துபோனார்கள். இதற்கு மருத்துவர்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது. கொரோனா முதல் அலையின்போது நம்முடைய பற்றாக்குறையான மருத்துவக் கட்டமைப்பு அழுத்தி வேலை வாங்கப்பட்டது. இங்கு நிறைய பற்றாக்குறை உள்ளது.
கொரோனா இறப்புகள் 1.2 சதவீதம் என்று கூறப்பட்டாலும் கூட செய்திகளைப் பார்த்தால் பெருமளவு இறப்புகள் என்பதை உணர முடியும். இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
நீங்கள் சொல்வது போல இறப்புகளில் எண்ணிக்கை துல்லியமானால் என்ன நடக்கப்போகிறது? நாம் இதுவரை நோயை தடுப்பது பற்றிய முறைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அப்படியேதான் இருக்கிறோம். இறப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருக்க சில முக்கிய காரணங்கள் உண்டு. களத்தில் இறந்தவர்ளள் பற்றிய தகவல்கள் கிடைப்பதில்லை. தொற்றுநோய்கள் தொடர்பாக மக்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு இறக்கும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் உருவாக்க்ப்படவில்லை. இந்த நிலையில் வெறும் தகவல்களை வைத்துக்கொண்டு ஒருவர் என்ன செய்யமுடியும்?
அரசின் தடுப்பூசி திட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நாடு முழுக்க எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த உடனே தடுப்பூசி திட்டத்தை அனைவருக்கும் விரிவுபடுத்தவேண்டும். இந்திய அரசு, தடுப்பூசி திட்டத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இதனால் நோய்ப்பரவலை தடுக்கும் நோக்கத்தில் வேகமாக செயல்படவில்லை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
சுமி சுகன்யா தத்தா
கருத்துகள்
கருத்துரையிடுக