நோ சொன்னால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!
நோ சொல்லிப்பழகுவது கடினமாக இருக்கிறதா?
எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது எப்போதும் சாத்தியமில்லை. ஆனால் அப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் உண்டு. இதனால் பிறருக்காக நிறைய விஷயங்களை ஓகே சொல்லி மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள் அனேகம். நோ என்று சொல்லுவது குழந்தையாக, சிறுவனாக இருக்கும்வரை ஓகேதான். பிடிவாதக்காரன் என்று விட்டுவிடுவார்கள். ஆனால் வேலையில் இதனை சொல்லும்போது அதனை எளிதானதாக பார்க்க மாட்டார்கள்.
ஆம், இல்லை என்று சொல்லப்படும்போது அது எப்படி மக்களிடம் விளைவுகளை உருவாக்குகிறது என்பதை அனைவருமே உணர்ந்திருப்பார்கள். இதுபற்றி உளவியலாளர் டாக்டர் ஹாரியட் பிரைக்கர் தி டிசீஸ் டு ப்ளீஸ் க்யூரிங் தி பீப்பிள் ப்ளீசிங் சிண்ட்ரோம் என்ற நூலில் விளக்கியுள்ளார்.
பொதுவாக அனைவருக்குமான நன்மையாக அனுசரித்து செல்வதாக ஒருவர் அனைத்து விஷயங்களுக்கும் சரி, ஆம் என்று சொல்வது முதலில் சரியாக செல்வது போலவே தோன்றும். ஆனால் பிறருக்காக இப்படி செயல்படும் தன்மை, ஒருவருக்கு உடல்நலம், மனநலத்தை அழித்து பல்வேறு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்.
அலுவலகத்தில் முடியும் முடியாது என்று ஏதும் சொல்லாமல் அனைத்து வேலைகளையும் ஒருவர் ஏற்றால் முதலில் உடல்நிலை பாதிக்கப்படும். அடுத்து, உணர்வுரீதியாக பாரத்தை ஒருவர் உணர்வார். பிறருக்கு இது உதவினாலும் வேலையை செய்பவருக்கு மனநலரீதியான சிக்கல்களை ஏற்படுத்தும். அதேசமயம் நிறைய சந்தர்ப்பங்களில் ஒருவர் மறுத்து சொல்லு முடியாதபடி சூழல் உள்ளது என்பதையும் மறுக்கமுடியாது. கடன் கேட்கும்போது, உடன் பணிபுரியும் நண்பர் வெளியே செல்லும்போது அவரின் வேலைகளை நாம் பார்க்கும் சூழலில், கூடுதலாக உள்ள வேலைகளை நேரமே அலுவலகத்தில் வந்து பார்க்கும்போது, குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்க முடியாதபோது என நிறைய சிக்கல்கள் நோ என்று சொல்ல முடியாதபோது ஏற்படும். உங்களால் ஆம் என்பதை திறந்த மனதுடன் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். இல்லை என்பதை பயமின்றி சொல்ல முடியுமென்றால் சொல்லுங்கள் என பிரேசில் எழுத்தாளர் பாப்லோ கொய்லோ கூறுவார். இதனை மனதில் கொண்டு செயல்பட்டால் சரியாக இருக்கும்.
பிபிசி
சாரா நிவென்
கருத்துகள்
கருத்துரையிடுக