வம்ச பெருமையைக் காப்பாற்ற தன்னையே தியாகம் செய்யும் அப்பாவியின் கதை! - ஷனாரா குரோனிக்கிள் 1&2

 

 

 https://screenrant.com/wp-content/uploads/2017/05/The-Shannara-Chronicles-TV-Show-Cast.jpg

 

 

 

 

 

ஷனாரா குரோனிக்கிள்


அமெரிக்க வெப் தொடர்


20 எபிசோடுகள்


ஆக்லாந்து, நியூசிலாந்தில் படமாக்கப்பட்டுள்ளது.


எம்எக்ஸ் பிளேயர்


Watch The Shannara Chronicles Full Episodes - Pubfilm Online


எல்வின் என்ற நாட்டு மக்களுக்கு தெய்வமாக ஒரு மரம் இருக்கிறது. அந்த மரம்தான் அங்குள்ள நான்கு நாட்டு மக்களையும் காப்பாற்றி வருகிறது. எல்கிரிஸ் என்ற மரத்தை காப்பாற்ற ஏழுபேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பட்டியலில் இளவரசியும் கூட தேர்வாகிறார். உண்மையில் அந்த மரம்தான் மக்களை காக்கிறதா? கருப்பு மந்திரத்தை பயன்படுத்தும் சாத்தான்களை அந்த மரம் இலையாக தன்னுடன் கட்டி வைத்திருக்கிறது என்று கூறப்படும் கதை உண்மையா என்பதை தொடர் விரிவாக பேசுகிறது.


இதனுடன் கிளைக்கதையாக பில் என்பவனின் அம்மா, மரணப்படுக்கையில் இருந்து இறந்துபோகிறார். அப்பாவின் சொத்தாக அவனுக்கு எல்ஸ் ஸ்டோன் எனு்ம் நீலநிற கற்கள் கிடைக்கின்றன. அதைப் பெற்று வேறிடம் நோக்கி சென்று வாழலாம் என நினைக்கிறான் பில். அப்போது அவனது முயற்சியை அவனது மாமா பிலிப் தடுக்கிறார். வெளியுலகம் நேர்மையானது அல்ல என்று எச்சரிக்கிறார். அவனது அப்பாவை எல்லோருமே பழித்து பேசுகிறார்கள். அதனைக்கூட அவன் நம்பத்தொடங்குகிறான். அவனது அப்பா மாவீரன் என்று சொல்லும்போது, கூடவே குடிகாரன் என்று சிலர் கூறுகிறார்கள் இதில் எது உண்மை என தனது பயணத்தில் பில் கண்டுபிடித்தானா என்பது மற்றொரு கிளைக்கதை.


டெரி ப்ரூக்ஸின் தி ஷனாரா ஸ்வோர்டு ட்ரைலாஜி நூலைத் தழுவி டிவி தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஷனாரா என்பது பில் என்பவரை மையமாக கொண்டது என்றாலும் ட்ரூய்டு பாத்திரமாக வரும் ஆலனோன் என்ற பாத்திரமே பார்ப்பவர்களின் மனதைக் கவருவதாக உள்ளது. இவர்தான் தொடரின் பாத்திரங்களின் விதிகளைத் தெரிந்தவராக உலகின் நன்மைக்காக அனைத்து பழிகளையும் ஏற்றுக்கொள்பவராக இருக்கிறார். இதனால் இறுதிப்பகுதியில் தனது மகளுக்கு கொடுக்க வேண்டிய மந்திர பயிற்சியைக் கூட சாத்தானின் உதவியாளருக்கு வழங்கி, விதியின் கையில் சிக்கிக்கொள்கிறார்.


Shannara Chronicles TV Series Trailer Reveals MTV Fantasy ...


பில் பாத்திரத்தைப் பொறுத்தவரை அவருக்கு அப்பாவின் அன்பு கிடைக்காத காரணத்தால் யார் நல்லவர், கெட்டவர் என்பதைப் பற்றியெல்லாம் தெரிவதில்லை. அனைவரிடமும் இயல்பாக பழகுகிறான். ஆனால் அப்பாவிடம் இருந்த திறமை அணுவளவும் கிடையாது. இவரை நேசிக்கும் ஆம்பர்லி, எரிட்டீரியா, மெரத் என மூன்று பெண்கள்தான் இவரது உயிரை இறுதிவரை காப்பாற்றுகின்றனர். இந்த மூன்று பெண்களும் பில்லின் வாழ்க்கையில் மூன்று பருவங்களில் வருகின்றனர். அந்த நேரத்திற்கான வாய்ப்பு என்பதால் பில் மூன்று பேரையும் நேசிக்கிறார். ஆம்பர்லி, எரிட்டீரியா என இரண்டு பேருடன் காதலித்ததோடு கூடுதலாக கிடைத்த நேரத்தில் உறவும் கொள்கிறார்.


போர் லேண்ட்ஸ் எனும் தேசத்தில் எல்ப், நோம்ஸ், ட்ரூய்ட், கிரிம்சன் என பன்மைத்துவ கலாசாரம் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் எல்லோருமே ஒருவரையொருவர் கொல்வதற்கு துடிக்கின்றனர். இவர்களில் பலருக்கும் பொது எதிரி, மந்திரங்களைப் பயன்படுத்தும் ட்ரூய்டு எனும் இனம்தான். இவர்கள் எளிதாக சாத்தான் வசம் செல்வதால், மக்களை கொன்று தின்பவர்களாக சுற்றித் திரிகிறார்கள். இவர்களில் ஒரே ஒரு நல்லவராக ஆலனோன் இருக்கிறார். ஆனால் அவரையும் எல்வின் நாட்டு மன்னர் மட்டுமே நம்புகிறார் வேறு யாரும் ஆலனோனை நம்புவதில்லை

 

Weekly TV Guide: Supergirl Returns, Shannara Premieres ...

300 வயதாகும் ஆலனோன் அப்போதுதான் தனது குகையில் தூங்கி எழுந்திருக்கிறார். அதேசமயம் நாட்டில் குழப்பங்கள் எழத்தொடங்கியுள்ளன, எல்கிரிஸ் மரம் மெல்ல இறக்கத் தொடங்குகிறது. அதனைக் காப்பாற்ற ஆலனோன் நினைக்கிறார். அந்த மரத்தின் இலைகள் உதிர்வதற்குள், மரத்தைக் காப்பதற்கு தேர்ந்தெடுத்த வீ ர்களில் ஒருவர் அதன் விதையை ரத்த தீயில் கொண்டு சென்றுவிட்டு வந்து நடவேண்டும். இல்லையெனில் நாட்டில் தீய சக்திகள் ஆதிக்கம் வளர்ந்துவிடும். இதற்கு ஆலனோன் திரட்டும் படையில் பில் எனும் பாதி எல்ப் இன தோற்றத்தைக் கொண்ட ஷனாரா வம்சத்தைச் சேர்ந்தவன், தேர்ந்தெடுக்கப்பட்டவளான எல்ப் இன இளவரசி ஆம்பர்லி, மனிதப் பெண்ணான எரிட்டீரியா ஆகியோர் இடம்பெறுகிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களது லட்சியத்தை சாதித்தார்களா என்பதுதான் முதல் சீசன் கதை.


இரண்டாவது சீசனில், பிராண்டன் எனும் எதிர்காலத்தை முன்னதாகவே உணர்பவன் சாத்தானின் அடிமையாகிறான். அவன் சாத்தானை பூமிக்கு வரவைக்க மண்டையோடு ஒன்றைத் தேடுகிறான். அதனை தேடித்தர பில்லைத் தேடுகிறான். அவன் இப்போது மருத்துவனாக மாற முயன்று கொண்டிருக்கிறான். கூடவே ஆலனோனின் மகள் மெரத் பில்லுக்கு ஆபத்திலிருந்து தப்பிக்க உதவுகிறாள். அவளும் பில்லும் சேர்ந்து மீண்டும் ஒருமுறை நாட்டை காப்பாற்ற முயலும் பயணம்தான் இறுதிப்பகுதி.


Shannara Chronicles TV Series Trailer Reveals MTV Fantasy ...

இறுதிப்பகுதியில் காதலை தியாகம் செய்வதை விட கவனம் ஈர்ப்பது அப்பா/மகன்/மகள் பாசம்தான். இதிலும் அதிகம் ஸ்கோர் செய்வது ஆலனோன்தான். பில்லைப் பொறுத்தவரை இந்த முறையும் பெரிதாக சோபிக்கவில்லை. நிறைய வசனம் பேசுகிறார். ஆனால் சண்டை என வரும்போது, அவரிடம் வேகமில்லை. மன உறுதி இல்லாதவராக வந்து இறுதியில் கத்தியில் குத்துபட்டு சாகும்போடு கூட பார்வையாளர்களுக்கு அவர் மீது பரிதாபமோ, அடப்பாவமே என இரக்கமோ வருவதில்லை.


இறுதிப்பகுதியை ஆலனோன் தனது நெகிழ்ச்சியான பக்குவப்பட்ட நடிப்பில் செழுமைபடுத்துகிறார் என்றால, சாகச வீரரான வந்து பின்னியெடுக்கும் பவுண்டி ஹன்டரான ஜாக்ஸ் அசத்தல். எரிட்டீரியா, லிரியா ஆகியோருடனான காட்சி தொடங்கி இவர் வரும் காட்சிகள் அனைத்திலும் ஆக்சன் பொறி பறக்கிறது. இவரின் வாழும் செம ஸ்டைலாக இருக்கிறது. சண்டைபோடும் காட்சிகளிலும் வேகம் பறக்கிறது

 

 

yaaaasss | Shannara chronicles, Shannara chronicles season 2

தேசப்பக்திக்காக உயிரைத் தியாகம் செய்யவேண்டும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பங்கு என்கிறார்கள். ஆனால் அப்படி தியாகம் செய்தவர்களை நாடு எப்படி நடத்தியது என்பதை எங்குமே சொல்லவில்லை. இதனால் பில் நான் எதற்கு தேசத்தை காப்பாற்றவேண்டும் என ஆலனோனை கேட்கும்போது, அவரும் அதற்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார். உண்மையில் இதற்கு இயக்குநர் பதில் சொல்லியிருக்கலாம். ஆனால் எங்குமே இதற்கு பதில் இல்லை. பில்லைப் பொறுத்தவரை மருத்துவனாகவே முயல்பவன் என்பதால் யாரையும் கொலை செய்வதை எப்போதுமே ஏற்பதில்லை. முடிந்தவரை நேர்மையாகவே இருக்கிறான். தொடர் முழுக்க கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவனது அப்பாவித் தன்மைக்காகவே அவனை சந்திக்கும் பெண்கள் அனைவருமே நேசிக்கிறார்கள். இயல்பாகவே நாட்டைக் காக்கும் தீரம் கொண்ட பரம்பரை என்றால் வாள் பயிற்சி எடுக்க கூட யோசிப்பது ஏன் என்று புரியவில்லை.


ஆம்பர்லியை விரும்புவதாக வாய் வார்த்தையாக சொன்னாலும் கூட எரிட்டீரியாவுடனான உறவு அளவுக்கு கூட ஆம்பர்லியின் உறவு வலுவாக இல்லை. ஆம்பர்லி தனது பால்யத் தோழன் லாரனுடன் கொண்ட உறவு உண்மையில்லை என்று தெரிந்தே காதல் உறவில் இருக்கிறாள். அந்த உறவும் பில், எரிட்டீரியாவின் நெருக்கமான உறவும் அவளை காயப்படுத்துகிறது என்றே இருவரின் இன்ஸ்டன்ட் காதலுக்கு காரணம் சொல்ல முடியும். மற்றபடி இது முதல் சீசன். இரண்டாவது சீசனில் லிரியா, எரிட்டீரியா என இரண்டுபேரும் தன்பாலின உறவு கொண்டவர்களாக மாறியிருக்கிறார்கள். புராணக்கதையில் இப்படி பாத்திரங்களை அமைக்க நெஞ்சுரம் அதிகம் தேவை. இவர்களின் உறவை ட்ரூயிட்டாக எரிட்டீரியாவின் தந்தையுமே ஆதரிக்கிறார் என்பதை கவனிக்கவேண்டும்

 

The Shannara Chronicles: Season 2-Episode 7 Openload Watch ...

இரண்டாவது சீசனின் வரும் மெரத்தின் காதல் முதிர்ச்சியானது. தேசபக்திக்காக தன்னையே இழக்கவேண்டும் என பாடமெடுப்பதால் இதில் பில்லுக்கு மெரத்தை கட்டிப்பிடிக்கும் காட்சி மட்டும்தான் உள்ளது. தியாகமே உன்னை உயர்த்தும் என்பதற்காக அவரது அப்பாவே அவரது மகனுக்கு குடும்பம் இல்லை என்று சொல்லுவது சங்கடமான காட்சிதான். நான் தைரியமாக முடிவெடுக்கவில்லை. ஆனால் நீ எடுக்கலாம் என்று அவர் சொல்லுவது தந்தை மகனுக்கு சொல்லும் அறிவுறுத்தலாக எடுபடவில்லை. இந்த வகையில் ஆலனோன் என்ன நடக்கும் என்று தெரிந்தாலும் கூட தனது நண்பன் சேவின் மகன் பில் என்ன முடிவெடுக்கவேண்டுமோ அதனை அவன்தான் எடுக்கவேண்டும் என அமைதியாக நிற்பது சிறப்பானது. இதனால் தனது பழைய நண்பர் பிலிப், மகள் மெரத், நண்பரின் மகன் பில், சாத்தானின் அடிமை, கிரிம்சன் தளபதி என பலரிடமும் அவமானப்பட்டாலும் உறுதியான மனம் கொண்டவராக ஆலனோன் மட்டுமே தொடர் முழுக்க கவனம் பெறுகிறார்.


தேசபக்தி பாடம்!


கோமாளிமேடை டீம்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்