மருத்துவத்தை வணிகமயமாக்கும் சதியைத் தடுக்கும் மக்கள் மருத்துவரின் கடைசி முயற்சி! - டாக்டர் ரொமான்டிக் 2
டாக்டர் ரொமான்டிக்
சீசன் 2
பத்து எபிசோடுகள்
இந்த முறை தலைமை மருத்துவமனையின் பவுண்டேஷன் தலைவராக டாக்டர் டூ பதவியேற்கிறார். மூன்று ஆண்டுகள் அவமானப்பட்டபிறகு அதற்கு பழிவாங்க காத்திருக்கிறார். அதற்கான வாய்ப்பு அவருக்கு இருக்கிறது. டோல்டம் மருத்துவமனையை மூடிவிட்டு, அங்கு ஆடம்பர மருத்துவ சேவைகளை வழங்கும் மையத்தை கட்ட நினைக்கிறார். ஆனால் அதற்கு தடையாக அவரே நியமித்த பேராசிரியர் பார்க் இருக்கிறார். பார்க்கைப் பொறுத்தவரை அவர் நல்ல மனிதர் அல்ல. ஆனால் சிறந்த மருத்துவர். எந்த நோயாளியாக இருந்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை தீர்மானித்துதான் ஆபரேஷன் செய்வார். ஆனால் அவரது இந்த கொள்கை டோல்டம் வந்ததும் செமையாக அடிவாங்குகிறது. அங்கு சீப் டாக்டராக உள்ள டீச்சர் கிம் இவரை சிம்பிளாக தைரியமில்லாத துணிச்சல் இல்லாத கோழை என்று திட்டுவதோடு, பார்க்கும்போதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் கேலிசெய்து விடுகிறார். இதனால் பார்க்கின் ஈகோ கடுமையாக காயம்படுகிறது. முக்கியமாக அவர் டீச்சர் கிம்மை விட தகுதி குறைவானவர் கிடையாது. ஆனால் கடந்த காலத்தில் முடிவெடுக்க தடுமாறியபோது, நோயாளியைக் காப்பாற்ற மருத்துவர் செய்த முயற்சிகளை பார்த்து மனம் காயப்பட்டுவிட்டது.
அதுவும் டீச்சர் கிம்மை பார்க்கும்போதெல்லாம் அவருக்கு குற்றவுணர்ச்சியின் டெம்போ அதிகரிக்கிறது. இதனால் அவரை அவரது முயற்சிகளை எதிர்க்க நினைக்கிறார். தனது குழுவைச் சேர்ந்தவர்களைக் கூட தனது சுயநலத்திற்காக விட்டுக்கொடுக்கிறார். இதெல்லாம் எதற்கு? தனது பெயரைக் காப்பாற்றிக்கொள்ள.
சீசன் 2 வில் புதிய நடிகர்கள் வந்துவிட பழைய நடிகர்கள் வெளிநாட்டிற்கு படிக்க சென்றுவிடுகின்றனர். சியோன், சா, நர்ஸ் பார்க், ஆகியோர் முக்கியத்துவம் பெறுகிறார்கள். சியோனைப் பொறுத்தவரை அறுவைசிகிச்சையை சிறப்பாக செய்வான். ஆனால் அவன் டோல்டம் வந்ததற்கு கடன்தொல்லை முக்கியமான காரணம். அதன்காரணமாகவே அவனது குடும்பம் அழிந்துபோனது. அதில் மிஞ்சியவனும் தான் சம்பாதிப்பதை எல்லாம் கடனுக்கே கட்டிக்கொண்டிருக்கிறான். இதனால் டீச்சர் கிம்மிடம் பத்து லட்சம் கடன் வாங்குகிறான், அதற்காக பத்து மாதம் அங்கு வேலை செய்ய வேண்டும் என டீச்சர் கிம் விதிக்கும் விதியை ஏற்கிறான். டாக்டர் சா இரண்டாவது சீசனில் ஆபரேஷன் தியேட்டரில் மயங்கி விழும் ஸ்ட்ரெஸ் பிரச்சனையை மெல்ல கவனித்து சமாளித்துக்கொள்கிறாள். அவன் முன்பொருமுறை ஆபரேஷனில் தூங்கிய அதேபோல ஒரு நிலைமையில் சியோன் மீண்டும் அவளை அழைத்து பணிபுரிய வைக்கிறான். இதனால் அவளுக்கு நம்பிக்கை பிறக்கிறது. கூடவே இலவச இணைப்பாக காதலும்தான்.
லிமிட்டை கிராஸ் செய்யாத காதல் என சியோன் சொல்லு்ம்போதே டாக்டர் சா அவன் உதட்டுக்கு இதழால் ஒத்தடம் கொடுக்கிறாள். ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் காதலையும் இம்முறை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சா, தலைமை மருத்துவனனைக்கு போவதாக கூறுவதும், அதனை சியோன் அப்படியா என லைட்டாக எடுத்துக்கொள்வதாக நடிப்பதும், அதற்காக சா புலம்போ புலம்பென புலம்புவதும் பார்க்க அழகு.
நர்ஸ் பார்க் கூட இரண்டாம் ஆண்டு ரெசிடென்ட் படிக்கும் லாலிபாப் டாக்டரை விரும்புகிறார். அதில் வரும் சின்ன உரசல், முட்டல் மோதல்களையும் அழகாக எடுத்திருக்கிறார்கள் . நெகிழ்ச்சியான விஷயம் என்றால் முன்னாள் பிரசிடென்ட் யூ இறந்துபோவதும் அதற்காக டீச்சர் கிம் அழுவதும்தான்.
முதல் ஐந்து எபிசோடுகளில் எலும்பு டாக்டர் பேவை அதிகம் விளக்கி கூறவில்லை. இதில் அவரது பின்னணி பற்றிய மர்மத்தை சொல்லி அவர் சியோனின் கடன் பிரச்னைக்கு ஏன் உதவுகிறார் என்பதையும் கூறியிருக்கிறார்கள். இதெல்லாம் தாண்டி எமர்ஜென்சி வார்ட்டை மூடும் பார்க்கின் முயற்சியை முறியடித்து, அவரையும் டோல்டமின் அவசர சிகிச்சை மருத்துவராக வேலை செய்ய வைக்கும் டீச்சர் கிம்மின் அசாதாரண முயற்சிதான் இறுதிப்பகுதி.
எமர்ஜென்சி டாக்டர்!
கோமாளிமேடை டீம்
thanks
mxplayer
கருத்துகள்
கருத்துரையிடுக