ஆஸ்கருக்கு ஒரு படத்தை அனுப்ப ஓராண்டுக்கு வேலை பார்க்கவேண்டும்! - தயாரிப்பாளர் குனீத் மோங்கா
குனீத் மோங்கா
இந்தி திரைப்பட உலகத்தைச் சேர்ந்த குனீத் மோங்கா முக்கியமான தயாரிப்பாளர். இவர் தயாரிப்பில் வெளியான பல்வேறு படங்கள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன. வேறுபட்ட கதைக்களம் கொண்ட படங்களையும், புதிய இயக்குநர்களையும் அறிமுகப்படுத்த தயங்காதவர்.
எப்படி வேறுபட்ட மையப்பொருளைக் கொண்ட கதையைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?
எனது அம்மாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. அதற்காகவே அதை மையப்பொருளாக கொண்ட தஸ்விதனியா என்ற படத்தை தயாரித்தேன். எனது சிக்யா தயாரிப்பு நிறுவனத்தின் முக்கியமான பொருளே, அர்த்தமுள்ள கதைகள் என்பதுதான். நான் இதற்கு முன்னர் அனுராக் காஷ்யப்பின் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்துள்ளேன். அங்கு ஏராளமான மாறுபட்ட கதைகளைப் பார்த்துள்ளேன். பல படங்களை இப்படி தேர்ந்தெடுத்து தயாரித்துள்ளோம். இப்படித்தான் பெட்லர்ஸ், ஹராம்கோர், லன்ச்பாக்ஸ் ஆகியவை உருவாயின. இதில் தோல்விகளும் உண்டு. எனக்கு இத்துறையில் வழிகாட்டவென எந்த குழுவும் கிடையாது.
உதவிக்காகத்தான் சிறிய இடைவெளியை எடுத்துக்கொண்டீர்களா?
மூன்று ஆண்டுகள் என்னை நானே என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதைக் கேட்டுக்கொள்ள தேவைப்பட்டது. பிறகுதான் கேப்டன் கோபிநாத்தின் நூலை உரிமை பெற்று சூர்ரைப் போற்று படத்தை உருவாக்கினோம். பின்னர் பாகலெய்ட் என்ற படத்தை தயாரித்தோம். நான் எனது பெற்றோரை 24 வயதில் இழந்தேன். அவர்களது இறுதிச்சடங்களில் நான் குடிக்க லிம்கா கேட்டவள். கதைகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. அவைதான் நம்மை தேர்ந்தெடுக்கின்றன. நாம் அதற்கு நம் பெயரை கொடுத்துக்கொள்கிறோம். 2019இல் வந்த மலையாளப்படமான ஜல்லிக்கட்டிற்கு லிஜோபெல்லிச்சேரிக்கு உதவினோம். ஒரு திரைக்கதை நம்முடன் பேசவேண்டும். என்னை தூங்கவிடாமல் செய்யவேண்டும் என்பதை முக்கியமான கதையாக நினைக்கிறேன்.
அரசு ஓடிடி தளங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கடந்த ஆண்டுதான் இந்த வகை பொழுதுபோக்கு இடம் பிரபலமானது. வாரம்தோறும் பல்வேறு படங்களை வெளியிட்டுவருகிறார்கள். ஆனால் சுயமான தணிக்கை என்பது கதை சொல்லுபவர்களை தடுக்கும் முக்கியமான காரணி என்று நினைக்கிறேன்.
திரைப்பட சான்றிதழ் முறையீட்டு ஆணையம் நீக்கப்பட்டு இருப்பதைப் பற்றி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறீர்கள்?
எனக்கு மிகவும் குழப்பமாக இருக்கிறது. எதற்கு திரைத்துறையினரின் கருத்துகளை கேட்காமல் இப்படி செய்கிறார்கள். ஏற்கெனவே பல்வேறு முரண்பாடுகள் உள்ள நிலையில் முறையீட்டு ஆணையம் மூடப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் மெல்ல தொடங்கியுள்ளன. இதனை எப்படி அறிந்துகொண்டீர்கள்?
2016ஆம் ஆண்டு வெளியான வெற்றிமாறனின் விசாரணை படம் மூலம்தான் ஆஸ்கருக்கு படத்தை எப்படி எடுத்துச்செல்வது என தெரிந்துகொண்டோம். நானும் வெற்றியும் படத்தை வெனிஸ் திரைப்பட விழாவுக்கு கொண்டு சென்றோம். இங்குதான் எப்படி படத்தை திரையிடுவது, எப்படி விளம்பரம் செய்வது, யார் படத்திற்கு வாக்களிப்பார்கள் என்பதை அறிந்தோம். லன்ச்பாக்ஸ் படத்தை விசாரணை படத்துடன் ஆஸ்கருக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மேலும் படத்தை ஆஸ்கருக்கு கொண்டு செல்வதற்கு ஓராண்டு தேவை. இரண்டு மாதங்களில் அதனை செயல்படுத்துவது கடினம். இந்தியாவிற்கு உலக திரைப்பட விருதுகள் தேவைப்படுகின்றன. ஆனால் அதனை எப்படி பெறுவது என்று தெரியவில்லை.
பெண்களுக்கான இயக்கம் ஒன்றை எதற்காக தொடங்கியுள்ளீர்கள்?
இந்தியாவில் 5 சதவீத இயக்குநர்கள்தான் திரைத்துறையில் உள்ளனர். இதுதான் எங்களை யோசிக்க வைத்தது. எனவே, தாகிரா, ஏக்தா, நான் என மூவரும் இணைந்து இந்த முயற்சியை எடுத்தோம். மூன்று பேரின் உழைப்பும், பொருளும் சேரும்போது முயற்சியை எளிதாக செய்யமுடியும் என நினைத்தேன். கரிஷ்மா தேவ் துபேயின் பிட்டு என்ற படத்தை கடந்த ஆண்டு பார்த்தேன். இந்தப்படம் மாணவர் அகாடமி விருது வென்ற குறும்படம். இதுபோன்ற படங்களை உருவாக்கி அதனை சந்தைப்படுத்த உதவலாம் என்றுதான் நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஏக்தா மாலிக்
கருத்துகள்
கருத்துரையிடுக