தொழில்நுட்பம், தகவல்பாதுகாப்பு, வங்கித்துறை, சமூக செயல்பாடு ஆகியவற்றில் சாதனை செய்யும் பெண்கள்!

 

 

 

 

 

Abroad Education | Overseas Educational Consultants in ...

 

 

 

சாதனைப் பெண்கள்


புருகல்ப சங்கர்


துணை நிறுவனர், அட்லான்



Prukalpa Sankar and Varun Banka 2 - TechCrunch

இவர் பெரு நிறுவனங்கள் தங்கள் தகவல்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை கற்றுக்கொடுத்து வருகிறார். சிங்கப்பூரிலுள்ள நான்யாங் டெக்னிகல் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம்பெற்றவர் இவர். அங்கே இவரோடு படித்த வருண் பங்கா என்பவரோடு இணைந்து சோசியல் காப்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதன் மூலம் அரசு, தனியார் நிறுவனங்களின் தகவல்களைப் பாதுகாக்க விரும்பினார். பல்வேறு நாடுகளில் இதுதொடர்பாக ஆலோசனைகளை வழங்கி செயல்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள அரசு அமைப்புகளுக்கான தகவல் தளமான திஷா என்பதை உருவாக்கியது இவர்கள்தான். இதனை அட்லான் என்ற தகவல் பாதுகாப்பு நிறுவனம் மூலம் சாத்தியப்படுத்தினர். இவர்கள் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்திற்கான அமைப்பை உருவாக்கியதுதான் முக்கியமானது. இப்போது கிட்அப், மைக்ரோசாப்ட் அசூர், அமேசான் வெப் சர்வீஸ் ஆகிய சேவைகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வருகின்றனர்.


சோனல் சிங்


இயக்குநர், துணை நிறுவனர் ஃபிட்டர் ஆப்


கையில் இருநூறு பவுண்டுகள்தான் இருக்கி்ன்றன. முப்பது நாட்களில் வேலை தேடவேண்டும் என்ற நெருக்கடி நிலை. அந்த நிலையில் சோனல் சிங் எடுத்த முடிவுதான் அவரை இன்று அனைவரும் கவனிக்க வைத்துள்ளது. அவர் டெலாய்ட் நிறுவனத்தில் ஆலோசகராக பணிக்கு சேர்ந்தார். பிறகு மெல்ல ஃபிட்டர் எனும் ஆரோக்கியம் தொடர்பான ஆப்பை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். இந்த ஆப்பில் 250க்கு மேற்பட்ட ஆலோசகர்கள் உள்ளனர். இவர்களின் மூலம் 4500 வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது இந்த ஃபிட்டர் நிறுவனம். நான் எப்போதெல்லாம் மனம் தளர்கிறேனோ அப்போதெல்லாம் லண்டனில் பணம் குறைவாக கையில் வைத்துக்கொண்டு வேலை தேடிய சூழலை நினைத்துக்கொள்வேன் என்றார் சோனல். இன்று பல்வேறு திரைப்பட பிரபலங்கள் இவரின் ஆப்பில் முதலீடு செய்து வருகி்ன்றனர். ஆலோசனைகளைப் பெற்றுவருகின்றனர். அதேசமயம் இத்துறையில் போட்டியும் இல்லாமலில்லை. ஆனால் அதனை சமாளிக்க வும் சோனல் தயாராக இருக்கிறார்.


அன்சுலா கான்ட்


உலக வங்கி குழும செயல் தலைவர்


உத்தரப்ப்பிரதேசத்தில் பிறந்த அன்சுலா வங்கிப்பணியில் இருந்தவர். பின்னாளில்தான் உலகவங்கியில் முக்கியமான பதவிக்கு இடம்பெயர்ந்தார். தற்போது ஆபத்து காலத்தில் நாடுகளுக்கு நிதியுதவி அளிக்கும் பணிகளை கவனிக்கிறார். நன்கொடையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோரின் நலன்களை முதலீட்டு சந்தையில் கவனித்து வருகிறார்.


பெருந்தொற்று காலத்தில் உலக வங்கி நூற்றுக்கும் மேலான நாடுகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. 160 பில்லியன் டாலர்களை நாடுகளுக்கு நிதியுதவியாக வழங்கும் என்று தெரிகிறது. முன்னெப்போதையும் விட உலக வங்கியின் பயன் இப்போது தேவைப்படுகிறது என்பவர், ்வங்கியில் இருபதாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ளார்.


Zoom Chief Legal Officer joins CM-Law for virtual event ...


அபர்ணா பாவா


செயல்தலைவர் ஜூம் நிறுவனம்


இன்று அனைவருமே பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறோம். மேலும் அலுவலக சந்திப்புகள் அனைத்தும் ஜூம் சந்திப்பால் நடத்தப்பட்டு வருகிறது. பெருந்தொற்று காலத்தால் ஜூம் நிறுவனம் பிற நிறுவனங்களை விட சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. 300 பில்லியனுக்கு மேலான சந்தாதார ர்களைக் கொண்டுள்ள நிறுவனமாக உள்ளது. கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்துமே ஜூம் மென்பொருளை நம்பியே நடந்து வருகின்றன.


2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதனை பாதுகாப்பு பிரச்னையை காரணம் காட்டி சிலர் முடக்க முயன்றாலும் இதன் நகல்கள் கூட ஜூம் அளவுக்கு மக்களிடையே வெற்றி பெறவில்லை. இதன் பாதுகாப்பை வலிமைப்படுத்தியதில் அபர்ணாவுக்கு முக்கிய பங்குண்டு. வாடிக்கையாளர்கள்தான் எங்களுக்கு ஊக்கம் தருகிறார்கள். அதனால்தான் விர்ச்சுவலாக மக்களை இயங்க வைப்பதற்கான ஆற்றலை எங்களுக்கு கொடுக்கிறது என்றார் அபர்ணா. 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் நிறுவனத்தின் பங்கு வெளியிடப்பட்டு நிதி திரட்டப்பட்டது.


25 நாடுகளிலுள்ள ஒரு லட்சம் பள்ளிகளுக்கு ஜூம் வசதி இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 25 பள்ளிகளில் இலவச வசதி வழங்கப்பட்டுள்ளது. மும்பை ஹைதரபாத்தில் ஜூம் நிறுவனத்தின் தகவல் மையம் அமைந்துள்ளது. இப்போது நிறுவனம் கூடுதலாக பெங்களூருவிலும் கூட தகவல் மையம் ஒன்றை அமைக்கவுள்ளது. மும்பையில் ஜூமின் தலைமையகம் அமைந்துள்ளது.


திவ்யா சூர்யதேவரா


முன்னாள் தலைமை நிதி ஆலோசகர், ஜெனரல் மோட்டார்ஸ்


வட அமெரிக்காவில் இயங்கிய ஜெனரல் நிறுவனத்தின் மூன்று தொழிற்சாலைகளை மூடி நிறுவனத்திற்கு இருநூறு கோடிரூபாயை மிச்சம் செய்துகொடுத்தார். இவரது உதவியால் எங்கள் நிறுவனத்தின் வருவாய் உறுதியானது என இவரது பதவி விலகலின் போது நிறுவன இயக்குநர் மேரி பாரா பத்திரிகையாளர்களிடம் கூறினார்.


இப்போது ஆன்லைன் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஸ்ட்ரைப்பில் பணியாற்றி வருகிறார். ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனத்திலிருந்து விலகி ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் சேர்வது என்பது ஹராகிரி எனும் தற்கொலை செய்துகொள்ளும் பழக்கம் போன்றதுதான். இன்று இந்த நிறுவனத்தின் மதிப்பு 36 பில்லியனாக உள்ளது. 2018ஆம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பதவியேற்றபோது, முக்கியமான சாதனை படைத்தார். அவர்தான் அங்கு முதல் நிதிநிலை அமைப்பின் பெண் தலைவர. 2004ஆம் ஆண்டு தொடங்கி அங்கு பணியாற்றி வந்தார். இவர் தொழிற்சாலைகளை மூடும் முடிவை எடுத்த காரணத்தால்தான் போர்டு, பியட் நிறுவனங்களை விட பெருந்தொற்றை எளிதாக சமாளிக்க முடிந்திருக்கிறது. முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இவர் சென்னைக்காரர் என்பதைத்தான்.


கார்க்கி கோஷ்


பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனின் தலைவர்(கொள்கைப் பிரிவு)


புதிய ஆண்டில்தான் கொள்கை வகுப்பு பிரிவின் தலைவராக இவரை பதவி உயர்த்தினார்கள். இவரது வேலை பல்வேறு அரசு, தனியார், தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து தடுப்பூசிகளை ஆராய்ச்சி செய்து உருவாக்குவதுதான். அரசுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பில், மெலிண்டா ஆகியோர் தொடக்கத்திலிருந்தே புதிய மருந்துகளை உருவாக்குவது தொடர்பாக செயல்பட்டு வந்தனர். சமூகத்தில் எழும் சவால்களை சமாளிக்க அனைவரும் ஒன்றுதிரண்டு உழைப்பது மகிழ்ச்சியானது என்றார் கார்க்கி.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்