சுய ஒழுங்கு சமூக வலைத்தளங்களுக்கு முக்கியமா? -

 

 

 

 

 


 

 

 

சுய ஒழுங்கு சமூக வலைத்தளங்களுக்கு முக்கியமா?


ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ இதழில் மூன்று வல்லுநர்கள் சமூக வலைத்தளங்கள் தங்களைத் தாங்களே ஒழுங்குமுறைபடுத்திக் கொள்ளவேண்டுமென கூறியுள்ளனர். அமெரிக்காவில் கேபிடல் ஹில் தாக்குதலுக்கு சமூக வலைத்தளங்களே காரணமாக இருந்தன. இச்சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்திற்குப் பிறகு சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை பிரதமர் மோடி உருவாக்கினார். இதற்கு வாட்ஸ்அப், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்துள்ளன. இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம்.


உலகிலுள்ள 33 சதவீத நாடுகள் சமூக வலைத்தளங்களை கட்டுப்பாடுகளுடன் இயங்க வலியுறுத்தியுள்ளன.


மூன்றில் ஒரு நாடு சமூக வலைத்தளங்களை சட்ட ரீதியாக கட்டுப்படுத்தியுள்ளது.


உலகில் 13 சதவீத நாடுகள் சமூக வலைத்தளங்களை முழுமையாக தடுத்துள்ளன. வட அமெரிக்காவில் கட்டுப்பாட்டு சட்டங்கள் கிடையாது. ஆனால் தென் அமெரிக்காவில் சட்டங்கள் உள்ளன.


2015ஆம் ஆண்டு தொடங்கி முப்பது நாடுகளில் நான்கு நாடுகள் சமூக வலைத்தளங்களை தடுக்கத் தொடங்கியுள்ளன.


54 நாடுகளில் 29 நாடுகள் சமூக வலைத்தளங்களை மக்கள் அணுகாதவாறு தடுத்துள்ளன.


16 நாடுகள் தேர்தல் சமயத்தில் மட்டு்ம சமூக வலைத்தளங்களை முடக்கி வைக்கின்றன.


7 நாடுகள் நாட்டில் நடக்கும் போராட்டங்களின்போது மட்டும் சமூக வலைத்தளங்களை முடக்குகின்றன.


ஐரோப்பாவிலுள்ள 46 நாடுகளில் 4 நாடுகளில் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


துருக்கியில் ஏப்ரல் 2021 அன்று, சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் விதிகளை உருவாக்கினர். இதன்படி சர்ச்சைக்குரிய செய்திகளை நீக்குவதற்கான பிரதிநிதிகளை நியமிக்க துருக்கி அரசு வலியுறுத்தியது. வாடிக்கையாளர்களை இழக்க விரும்பாத கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் பிரதிநிதிகளை ஒன்றாக இணைந்து நியமித்துள்ளன.


நைஜீரியாவில சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை உருவாக்கியது. விமர்சனங்களை பதிவுகள் வழியாக கூறுபவர்களுக்கு சிறை தண்டனையோடு, பத்தாயிரம் டாலர்கள் அபராதமும் விதிக்கப்படும் என அச்சுறுத்தல்கள் இருந்தன. ஆனால் பொதுமக்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் புதிய சட்டத்தை அரசு கைவிட்டது.


வெறுப்பு பேச்சு, போலிச்செய்திகளை கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் சட்டத்தைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.


வங்கதேசத்தில் பிரதமர் மோடி வருகை வந்தபோது சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்பட்டபிறகு அங்கு சமூகவலைத்தள தொடர்பு முடக்கப்பட்டது.


ஆசியாவில் உள்ள நான்கு நாடுகள் அடுத்து சமூகவலைத்தளங்களின் மீது கட்டுப்பாடுகளை ஏற்படுத்த உள்ளன. சமூக வலைத்தளங்களை முடக்கும் நாடுகள் அதனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும் நிலையில்தான் தடைபடுத்துகின்றன.


2015 முதல் 22 நாடுகள் சமூக வலைத்தளங்களை முடக்கியுள்ளன. இதில் 20 நாடுகள் தடைக்கு எந்த வித ஆதாரங்களையும் காட்டாமல் முயற்சிகளை செய்து வருகின்றன.


தற்போது சீனா, வடகொரியா, சிரியா ஆகிய நாடுகளில் சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக தடைபட்டுள்ளன. சீனாவில் வெளிநாட்டு சமூக வலைத்தளங்களுக்கு அனுமதி கிடையாது. அங்கு வீசாட், வெய்போ, க்யூக்யூ, க்யூஸோன் ஆகிய சமூகவலைத்தள நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவை அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையி்ல்தான் இயங்குகின்றன.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்