திருமணம் பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய நூல்! புத்தக அறிமுகம்

 

 

 

 

Beyond Bad cover

 

 

 

 

புத்தகம் புதுசு!


பியாண்ட் பேட்


கிறிஸ்பே


ஹாசெட்


ரூ.699



அறம் என்பது நமது வாழ்க்கையில் எந்த விதமான பங்கை வகிக்கிறது, நாம் பேசுவதில் செயல்படுவதில் ஆற்றும் பங்கை இந்த நூல் விவரிக்கிறது. அலுவலக வேலை, தனிப்பட்ட வாழ்க்கை, சமூக வலைத்தளங்களில் எழுதுகிற பதிவுகள் என அனைத்திலும் அறத்தின் பங்கு உண்டு. இது ஒரு வகையில் கண்ணாடி போலத்தான். நாம் பார்க்கிறதைவிட நம்மை நம்முடைய கருத்துகள் பிறருக்கு அடையாளம் காட்டும் நூலைப் படித்தால் நீங்கள் அதனை உணரலாம்

 





    •  

       

       

       

       

       

       

      ஃபோர்த் லயன்


      வேணு மாதவ், கோவிந்த் ஶ்ரீநாத்


      ஆலெப்


      .312 ரூ.699


      எழுத்தாளர் கோபால கிருஷ்ண காந்தியின் அருமை பெருமைகளை பல்வேறு கட்டுரையாளர்கள் கட்டுரையாக எழுதியிருக்கிறார்கள். மொத்தம் 26 கட்டுரைகள் உள்ளன. இதன்மூலம் அவரின் ஆளுமையை பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ளமுடியும்.


      ஏஜ் ஆப் ஆங்க்சைட்டி


      அம்ரிதா திரிபாதி, காம்னா சிப்பர்


      சைமன் ஸ்ஹஸ்டர்


      ரூ139


      கொரோனா காலத்தில் அனைவருக்குள்ளும் வேலை, குடும்பம், எதிர்காலம் பற்றிய உறுதியின்மை என நிறைய பிரச்னைகள் உள்ளன. இதனை எதிர்கொள்வது எப்படி என இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. உடல்நலனைவிட இக்காலகட்டத்தில் மனநலனைக் காப்பாற்றிக்கொள்வது முக்கியம் என்கிறர் ஆசிரியர்.


      சீனா ரூம்


      சஞ்சீவ் சகோதா


      பெங்குவின் ராண்டம் ஹவுஸ்


      ரூ.699


      பல தலைமுறையாக தொடரும் காதல், எதிர்ப்பு, சுதந்திர வேட்கை என செல்லும் நாவல் இது. அரை நூற்றாண்டாக பிரிந்திருக்கும் ஆண், பெண் இருவரின் கதை. இவர்கள் பிரிந்திருந்தாலும் கூட ரத்தம் மூலம் இணைந்திருக்கிறார்கள். எப்படி என்பவர்கள் நூலை ஆர்டர் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


      https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c4/Devdutt_Pattanaik_02.jpg/1200px-Devdutt_Pattanaik_02.jpg


      மேரேஜ்


      தேவ்தத் பட்நாயக்


      ரூபா


      ரூ. 295


      கல்யாணம் என்றால் சும்மாவா? எத்தனை சடங்குகள், மரபுகள், சந்தோஷம், துக்கம் என அனைத்துமே திருமணத்தில் நடக்கும். மனமொத்த இருவரோடு அவர்களின் பெற்றோரும் இணைவதுதான் சிறப்பம்சம். இந்தியாவில் புராண, வேத காலம் தொடங்கி நவீன காலம் வரை திருமணம் பற்றிய பல்வேறு விஷயங்களை நூல் பேசுகிறது. திருமணம் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு தாராளமாக பரிந்துரைக்கலாம்.


      இங்கு எழுதியுள்ள அனைத்து புத்தகங்களும் ஆன்லைன் தளங்களில் இபுக்காகவும் கிடைக்கிறது.

       


      பினான்ஷியல் எக்ஸ்பிரஸ்


      https://www.alephbookcompany.com/book/the-fourth-lion-a-festschrift-for-gopalkrishna-gandhi/

      கருத்துகள்

      பிரபலமான இடுகைகள்