மனதிலுள்ள விரக்தியை இசையாக மாற்றுவதுதான் பலம்! இசையமைப்பாளர் அங்கூர் திவாரி
அங்கூர் திவாரி
இசையமைப்பாளர்
இசைக்கலைஞராக இருப்பதன் நல்ல அம்சம் என்ன?
உங்கள் மனதிலுள்ள அனைத்து விரக்திகளையும் இசையாக மாற்றிவிட முடியும்.
தனியிசை பாடல்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பயமின்மை.
உங்களை நீங்களே கிண்டல் செய்துகொள்வதாக ஏதாவது சம்பவத்தை கூறுங்கள்.
கோல்கத்தாவில் ஹலோ சென்னை என்ற இசைப்பயணத்தை தொடங்கினோம். பின்னாளில் இந்த திட்டம் தனது கான்செப்டை இழந்துவிட்டதாக உணர்ந்த அந்த நேரத்தை இப்படி சொல்லலாம்.
தூங்கப்போகும் முன்பு என்ன புத்தகத்தை படிப்பீர்கள்?
புத்தகத்தின் இடத்தை இப்போது பாட்காஸ்ட் பிடித்துக்கொண்டுவிட்டது. அரியா கோட் என்ற பாட்காஸ்டை இரவுகளில் கேட்டு வருகிறேன்.
முதல் டேட்டில் கடைப்பிடி ஏதாவது யோசனை சொல்லுங்கள்.
சிறப்பான உரையாடல் நேரத்தை மறக்க வைக்கும்.
உறவுகளை கையாள்வதற்காக எந்த விதியை பின்பற்றுகிறார்கள்?
அவரவருக்கான இடத்தை இருவரும் புரிந்துகொள்ளவேண்டு்ம்.
ஆரோக்கியத்திற்காக எந்த விஷயத்தை கடைப்பிடிக்கிறீர்கள்?
நீரையும் தூக்கத்தையும் எப்போதும் விடாமல் கடைப்பிடிக்கிறேன்.
உங்களைப் பற்றி பிறருக்கு தெரியாத மூன்று விஷயங்களைச் சொல்லுங்கள்?
எனக்கு பிரேக் டான்ஸ் ஆடத்தெரியும். டார்க் சாக்லெட்டில் உள்ள இனிப்பு மட்டுமே பிடிக்கும். போபாலில் கல்யாண கச்சேரிகளில் பங்கேற்றிருக்கிறேன்.
இந்துஸ்தான் டைம்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக