மூளையில் நினைவுகள் எப்படி பதிவாகின்றன?
நீண்டகால நினைவுகள்
நமது மூளையில் நீண்ட காலத்திற்கு நினைவுகள் எப்படி சேமிக்கப்படுகின்றன என்பதை விளக்கமாக பார்க்கலாம்.
கவன ஈர்ப்பு
பொதுவாக ஒரு இடத்திற்கு செல்லும்போது நம்மை கவனிக்க வைக்கும் சில அம்சங்கள் இருக்கும். பெண்களின் லோஹிப் ஜீன்ஸ், தொட்டிச்செடி கட்டிங், உடைகள், ஒருவர் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றை சொல்லலாம். இவற்றின் ஆயுள் காலம் 0.2 நொடிகள்தான். இவை முக்கியம் என நீங்கள் நினைத்தால், அது மூளையிலுள்ள நியூரான்களை தூண்டுகிறது. தொடர்ச்சியாக இந்த தூண்டுதல் நடந்தால் அதுவே நீண்டகால நினைவாக சேகரிக்கப்படுகிறது.
உணர்ச்சிகர ஈர்ப்பு
உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்கள் உணர்ச்சிகளோடு தொடர்புடையதாக இருந்தால்அது மூளையிலுள்ள அமிக்டலாவில் பதிவாகி நீ்ண்டகால நினைவாக வாய்ப்புள்ளது. நீங்கள் சோகமாக இருக்கும்போது இசைக்கப்படும் இளையராஜாவின் ஆறுதல் பாட்டு, தந்தையைப் போன்ற ஒருவரிடமிருந்து கிடைக்கும் பாராட்டு, நம்மைச் சார்ந்தவர்களிடமிருந்து கிடைக்கும் அங்கீகாரம், மகிழ்ச்சியாக இருக்கும்போது பெய்யும் மழை என பலவிஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
தொடுதல் சார்ந்த நினைவுகள்
காதலியை முதன்முதலாக பார்த்தபோது மலையிலிருந்து கீழே குதிப்பது போன்ற அனுபவம் ஏற்பட்டதா, மணி அடித்து மின் விளக்கு எரிந்ததா என்பது போன்ற பல்வேறு அம்சங்களை இப்படி சொல்லலாம். குறிப்பாக ஒருவர் உங்களை தொட்டபோது வானின் பெரு ஒளி உங்களை தீண்டியது மாதிரி உணர்ந்தீர்கள் என்றால் இந்த நினைவுகள் மறக்காது. இதனை எந்தளவு முக்கியமாக நினைக்கிறீர்கள் என்பதை பொறுத்து மூளையில் சேமிக்கப்படும்.
உறுதியான நிகழ்ச்சி
குறிப்பிட்ட துண்டான ஒரு நிகழ்ச்சி, உங்களுக்கு வருத்தம் அல்லது மகிழ்ச்சி, விரக்தி, கோபம் என எதை வேண்டுமானாலும் தூண்டலாம். இப்படி அடிக்கடி நினைவில் வரும் சம்பவங்கள் மூளையில் சப்பணமிட்டு உட்கார்ந்துகொள்ளும். இதன் ஆயுள்காலம் இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகம்.
ஹிப்போகாம்பல் புரோசஸ்
குறுகியகால நினைவுகளிலிருந்து செய்தி ஹிப்போகாம்பல் பகுதிக்கு சென்றால் நீண்ட கால நினைவு பகுதிக்கு சென்றுவிட்டது என்று பொருள்.
செயல்பாட்டில் உள்ள நினைவு
பேருந்தில் அல்லது ரயிலில் போகும்போது வேலைபற்றிய எதிர்காலம் பற்றிய நினைவுகள் என்று வைத்துக்கொள்ளலாம். அடுத்து செய்யவேண்டிய விஷயங்கள் பற்றிக்கூட யோசனைகள் இருக்கலாம். இதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து குறுகிய அல்லது நீண்டகால நினைவாக மாற வாய்ப்புள்ளது.
பிபிசி
கருத்துகள்
கருத்துரையிடுக