நாட்டைக் காப்பாற்ற போரத் செய்யும் காமெடி களேபரங்கள்! போரத் 2

 

 

 


 

 

 


போரத்


கஜக்ஸ்தான் நாட்டில் தண்டனை வழங்கப்பட்டு குவாரியில் வேலை செய்யும் போரத் இம்முறை சர்வாதிகார அரசின் அனுமதி பெற்று, அமெரிக்காவிற்கு அனுப்ப ப்படுகிறார். அங்கு அவர் அதிபருக்கு பரிசு ஒன்றை வழங்கி நாட்டின் மீதான தடைகளை நீ்க்கவேண்டும். எப்போதும் போல போரத் தனது கோமாளித்தனங்களோடு அமெரிக்கா செல்கிறார். புத்திசாலித்தனம் கொண்ட குரங்கை பரிசாக கொடுக்க நினைக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த கூண்டில் அவரது மகள்தான் இருக்கிறாள். ஆம் குரங்கை கொன்று தின்றுவிட்டு அவள்தான் அமெரிக்கா வந்திருக்கிறாள். அதுவும் தனது மரப்பெட்டியில். இதனால் அரசின் மரணதண்டனையிலிருந்து தப்பிக்க தனது மகளை பரிசாக கொடுத்துவிடலாம் என நினைக்கிறார். மகளை கூண்டில் அடைத்து அழைத்துச்செல்கிறார்.


உண்மையில் அவர் செய்யும் விஷயம் பற்றி அவருக்குத் தெரிந்ததா? உண்மையில் பரிசை டிரம்புக்கு தர முடிந்த்தா அல்லது குறைந்தபட்சம் அவரது நெருங்கிய வட்டத்தினருக்கு அளிக்க முடிந்ததா? என்பதுதான் இறுதிப்பகுதி..


அமெரிக்கா மற்றும் முஸ்லீம் நாடுகளை மையப்படுத்திய காமெடிதான். ஆனால் நடப்பு நிகழ்வுகள், ஆணாதிக்கம், டிரம்பின் பல்வேறு முட்டாள்தனமான கோட்பாடுகள், சர்வாதிகார நாடுகளில் உள்ள பழக்கங்கள், பெண்கள் மீதான மூடநம்பிக்கை, செக்ஸ் பற்றிய விஷயங்கள் என படத்தில் ஏராளமான விஷயங்களை பேசியிருக்கறார்கள். இதனை ஒருவர் காட்சிகளாக பார்க்கும்போது உண்மையில் சிரிக்காமல் இருக்க முடியாது.


பகடி, நக்கல், நையாண்டி, அங்கதம் என பலவிதமாக நாடுகளிலுள்ள பழக்க வழக்கங்கள், கலாசாரம், முட்டாள்தனங்களை அடித்து நொறுக்கியிருக்கிறார் சச்சோ பாரோன். இவரது துணிச்சலான முட்டாள்தனங்கள்தான் படத்தின் பெரும்பலம். பெரும்பாலும் அடிக்கடி மனம் புண்படும் மனம் கொண்டவர்களுக்கு படம் கசப்பாகவே இருக்கும். இதுபோல ஒரு வெர்ஷனை இந்தியாவில் எடுத்தால் எப்படியிருக்கும் என தோன்றியது. ஆனால் படம் வெளியாவது கடினம் அல்லவா?


முடியை சீரமைக்க வேண்டும் என்றதும் போரத்தின் மகள் செய்யும் காரியம், கேக்கிலுள்ள பொம்மை ஒன்றை சாப்பிட்டபிறகு, அதனை வெளியே எடுக்க டாக்டரிடம் பேசும் காட்சி, கொரோனா காலத்தில் இருவரோடு தங்கி அமெரிக்க அரசியலை விவாதிப்பது என ரசனையாக காட்சிகள் படத்தில் நிறைய உண்டு. சில காட்சிகளை பார்த்தும். சிலவற்றை வசனங்களாகவும் ரசிக்கலாம்.


நையாண்டி மேடை


கோமாளிமேடை டீம்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்