அனைத்து தொழில் நுணுக்கங்களையும் கற்று சாதித்த திருபாய் அம்பானி மற்றும் அவரது மகன்களின் கதை! - முகேஷ் அம்பானி - என் . சொக்கன்

 

 

 

 

 https://www.forbesindia.com/media/images/2018/Nov/img_110691_mukesh_ambani_sm.jpg

 

 

முகேஷ் அம்பானி


என் சொக்கன்


கிழக்கு



திருபாய் அம்பானி, முகேஷ், அனில் ஆகியோரின் வாழ்க்கை பற்றி நூலில் சுருக்கமாக கூறியிருக்கிறார்கள். நூலின் தலைப்பு முகேஷ் அம்பானி என்றாலும் திருபாய் அம்பானிதான் படிக்க சுவாரசியம் தருபவராக இருக்கிறார். ஒப்பீட்டளவில் நூல் முகேஷ் அம்பானிக்கானதுதான் என்றாலும் நூல் முழுமையாக அவரைப்பற்றிய விளக்கங்களை கூறவில்லை.

https://www.relianceada.com/documents/97361/1133426/RGroup-Businesses.jpg/4b7f04c8-199e-646d-3320-acb446db2410?t=1499766153227&version=1.0&t=1492260601170

1932இல் பிறந்த திருபாய் அம்பானி பற்றிய தொடக்கம். அவர் ஏடனுக்கு சென்று வேலை தேடுவது, அதில் சம்பாதிப்பது, பின் மும்பைக்கு வந்து புறாக்கூண்டு வீடுகளில் குடும்பம் நடத்துவது, தன் குழந்தைகளுக்கு வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொடுக்க நினைத்து என அனைத்துமே சிறப்பாக உள்ளது. மக்களைப் புரிந்துகொள்ள தனி ஆசிரியரை நியமித்து எளிய வாழ்க்கை பற்றி பாடங்களை சொன்னது அனைத்து தொழிலதிபர்களும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்தான்.


திருபாய் அம்பானி தனது சாதுரியத்தால் அனைத்து விஷயங்களை செய்தாலும் கல்வி பற்றிய அவரது ஏக்கம் உண்மையானது. அதேசமயம் வெறும் படிப்பும் எல்லாம் தெரியும் என்ற மனோபாவமும் ஒருவருக்கு வெற்றியைத் தராது என்பதை தெரிந்துகொண்டு இரண்டு மகன்களையும் தொழிலில் ஈடுபடுத்துகிறார். அண்ணன் முகேஷிற்கு உழைப்பும் அதிர்ஷ்டமும் கைகொடுக்க படல்கங்கா பாலியஸ்டர் தொழிற்சாலை பணி கிடைக்கிறது. இந்த வகையில் அனில் மிகவும் பின்தங்கியவராகவே காட்டப்படுகிறார். முகேஷ், அனில் பகுதிகள் வில்லன் , நாயகன் ரேஞ்சுக்கு மாறிவிடுகிறது. தனது தம்பியை கையாள்வதிலும் அவருக்கு சொத்துகளை அளிக்க கூடாது என்பதிலும் முகேஷ் கவனமாக இருந்தது, உண்மையில் அவருடைய மற்ற திறன்களையும் பின்னுக்கு தள்ளிவிடுகிறது.

https://qph.fs.quoracdn.net/main-qimg-e2255630500dea360dd4a1c4bea04813

முகேஷ் அம்பானியின் தொழில் திறமை என்ன, அவரது நம்பிக்கைக்குரிய ஆட்கள், சந்தித்த சோதனைகள், மனைவி நீதாவின் உதவி, இருவருக்குமான புரிந்துணர்வு, பொழுதுபோக்கு ஆகியவை நூலில் கூறப்படுவதில்லை. அவருக்கு அனைத்துமே தொழில்தான் என்று அழுத்திக் கூறப்படுவது நூலுக்கு பொருத்தமாக இல்லை.

http://cachitchat.com/wp-content/uploads/2020/05/Anil-Ambani-Family.jpg

வணிகர்கள் நூலில் கற்கவேண்டிய விஷயம், பேக்வேர்ட் இன்டெகிரேஷன் உத்தியை ரிலையன்ஸ் எப்படி கடைபிடித்தது, படல்கங்காவில் தொழிலாளர்கள் எப்படி டு பான்ட் வல்லுநர்களிடம் ஐயந்தெளிவுபட தொழில்நுட்பங்களை கற்று அதனை அனைவருக்கும் புரியும்படி எழுதி வைத்தனர் என்பதையும்தான். மற்றொன்று தனிப்பட்ட ரீதியிலானது. ஆனாலும் முக்கியம். சொத்துக்களை யாருக்கு என்ன திறமை உள்ளது என்பதைப் பார்த்து உயில் எழுதி வைத்துவிடுவது.


கருணையில்லாத வியாபாரம்


கோமாளிமேடை டீம்



கருத்துகள்