குடும்ப வாழ்க்கை சோகத்தால், காதலியின் காதலுக்கு நோ சொல்லும் எழுத்தாளக் காதலன் - T&F

 

 

 

 https://spiderimg.amarujala.com/assets/images/2020/04/21/750x506/tuesday-and-friday-film-first-look_1587437942.jpeg

 

 

 

ட்யூஸ்டேஸ் அண்ட் ஃப்ரைடேஸ்

தரன்வீர் சிங்


https://i2.wp.com/happy2hub.net/wp-content/uploads/2021/04/Tuesdays-and-Fridays-Netflix-Movie-Download.jpg?resize=850%2C425&ssl=1

வாரத்தில் இரு நாட்கள் டேட்டிங் செல்லும் எழுத்தாளரும், வழக்குரைஞரும் தங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள காதலை உணர்ந்தார்களா என்பதுதான் கதை. 

இந்த கதையை முக்கியமானதாக கருதுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. பெண்கள்தான் காதலை இதில் முதலில் ஏற்றுக்கொண்டு அதனை ஆண்களிடம் தெரிவிக்கிறார்கள். அதற்கு பதிலாக ஆண்கள் பெண்களை தங்களுடைய வீட்டிற்கு வரவேற்கவில்லை. பெண்களின் இடத்திற்கே வந்து வசிக்கிறார்கள். https://img.republicworld.com/republic-prod/stories/promolarge/xxhdpi/qyy4ktveeltyucgk_1619681939.jpeg?tr=w-758,h-433

மும்பையில் வசிக்கும் சியா வழக்குரைஞர். அவர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார். தனது நிறுவனத்தில் வாடிக்கையாளரான நடிகருடன் கூட டேட்டிங் செல்கிறார். ஆனாலும் கூட இதயத்திற்கு நெருக்கமாக அந்த உறவு அமையவில்லை. அனைத்து உறவுகளிலும் கறாரான விதிமுறைகளை கையாளும் பழக்கம் கொண்டவர். அதன்மூலம் தான் காயப்படக்கூடாது என்பதாக நினைக்கிறார். 

நடிகருடனான பிரேக் நடந்த பிறகு அடுத்த காதலை நிச்சயம் தான் சந்திக்கும் பிற ஆண்களுடன் வைத்துக்கொள்ளலாம். நிறுவன வாடிக்கையாளர்களுடன் செய்யக்கூடாது என உறுதியாக நினைக்கிறார். ஆனால் சியாவிற்கு அடுத்த காதலும் லண்டனில் இருந்து வரும் எழுத்தாளர் வருண் மூலமாக நடக்கிறது. சியாவைப் பற்றி பழித்துப் பேசும் ஆன்டிகள் இருவரை வருண் சமயோசிதமாக மடக்குகிறான். இது சியாவிற்கு அவன் மீது ஈர்ப்பு ஏற்பட காரணமாக உள்ளது. ஆனால் அப்போதும் வருணுக்கு சியா மீது காதல் எல்லாம் கிடையாது. காபி குடிக்க மட்டுமே அழைத்திருக்கிறான். 

Tuesdays and Fridays 2021 Full Movie download 720p, 480p ...

சியா மும்பையில் தனியாக தோழியுடன் பிளாட்டில் தங்கியிருக்கிறாள். அவளது அம்மா, லண்டனில் இருக்கிறார். சியாவிற்கு கல்யாணம் செய்து வைப்பது பற்றி அவர் நச்சிக்கொண்டிருக்கிறார். இதனால் சியாவிற்கு அம்மா போன் செய்தாலே பிரச்னையாக இருக்கிறது. இந்த நேரத்தில் அம்மாவின் பிறந்த நாளுக்கு லண்டன் செல்கிறார். அங்கு வருண் தங்கியுள்ள ஹோட்டலுக்கு செல்கிறாள். அவனுடன் நேரத்தை செலவிடுகிறாள். சியாவின் தங்கை 18 வயதில் செக்ஸ் வைத்துக்கொள்ள தனது காதலனுடன் செல்லப்போவதாக சொல்ல அவளை சியா தடுக்க முயற்சிக்கிறாள். சியாவின் மனதை அறிந்து அவள் தங்கையின் மனதை மாற்ற வருண் உதவுகிறான். இதில் சியாவிற்கு வருண் மீது மாற்றமுடியாத ஈர்ப்பு ஏற்படுகிறது.

Bollywood Movies Archives - hdmediahub

வருணைப் பொறுத்தவரை கல்யாணம் என்பது உறவைக் கொலை செய்து விடுகிற விவகாரம். காதல், சில சந்திப்புகளுக்குப் பிறகு செக்ஸ் முடிந்தால் ஓகே. அதற்குள் ஏழு வாரங்கள் ஆகிவிட்டால் உறவுக்கு டாடா சொல்லிவிடுவான். இது சியாவிற்கு தெரியாது. அவள் அவனை சம்மதிக்க வைக்க வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சந்திக்க திட்டம் வகுக்கிறாள். இதன்மூலம் சியாவின் மனதிலிருந்த காதலை வருண் உணர முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் இறுதிக்காட்சி. 

படம் நாயகி சியாவை மையமாக கொண்டது. அவள் உருவாக்கும் காதல் திட்டத்தின்படிதான் கதையே நடக்கிறது. சியாவின் பாத்திரத்தில் நடித்த ஜட்டலேகா கண் சிமிட்டல், உதட்டுச்சுளிப்பில் ஆச்சரியம் நிகழ்த்துகிறார். உண்மையில் காட்சிகளில் இவருக்கு ஈடு கொடுக்க முடியாமல் வருண் தடுமாறுகிறார் என்றுதான் சொல்லவேண்டும். 

சியா தனது கல்யாணத்தைப் பற்றி அம்மா பேசுவாளோ என நினைக்கும்போது அவர் தனது கல்யாணத்தைப் பற்றி தயக்கத்துடன் பேசுவதும், சியா அதற்கு பதிலளிப்பதும் சிறப்பான காட்சி. அடுத்து வருண் படத்தின் இறுதிக்காட்சிக்கு முன்னதாக தான் ஏன் சியாவை மறுத்தேன் என தனது தோழியிடம் பேசுவது முக்கியமான காட்சி.

தெலுங்கில் படிபடி லேச்சே மனசு என்று படம் ஒன்று வெளியானது. அதில் நாயகன் காதல் ஓகே. ஆனால் கல்யாணம் வேண்டாம் என்பான். காதலி கேட்பதற்கு பதிலாக தனது குடும்ப வாழ்க்கையை காரணமாக சொல்லுவான். அவனது அம்மாவை விட்டு அப்பா பிரிந்துபோனதால் ஏற்பட்ட வலி அவனது மனதில் இருக்கும். இந்த படத்தின் நாயகனின் ஏழு வார டேட்டிங் வாழ்க்கைக்கும் பின்னணியில் இந்த வகையில் ஒரு கதை உள்ளது. 

கதையில் அதுதான் ட்விஸ்ட் என்று வைத்துக்கொள்ளலாம். 

பாடல்களை நேகா காக்கர், ஸ்ரேயா கோஷல் குரலில் கேட்கலாம் ரசிக்கலாம் கொண்டாடலாம். 

திருமணமானால் பெண்கள் எதற்கு தங்கள் வீட்டை விட்டு வரவேண்டும் என வலுவாகவே ஆண்களை வைத்து பேசியிருக்கிறார்கள். முக்கியமான சிந்தனைதான்.

 டேட்டிங் கொண்டாட்டம்

கோமாளிமேடை டீம் 











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்