ஜனநாயக இந்தியா - நேருவின் உரைகள் தமிழில் - புதிய மின்னூல் வெளியீடு


 

இந்தியாவின் நவீன சிற்பிகளில் ஒருவரான நேரு, மேற்குலகில் மிகச்சிறந்த நிர்வாகி என்பதை விட சிந்தனையாளராகவே அறியப்படுகிறார். தனது வாழ்நாளில் நேரு ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவரளவுக்கு உலக வரலாற்றை ஆய்வு நோக்கில் அணுகி இந்தியாவின் நிலை என்ன எப்படி வளரவேண்டும் என்று கனவுகண்ட தலைவர் யாருமில்லை எனலாம். இந்த நூலில் மொத்தம் 24  உரைகள் உள்ளன. இவை மதவாதம், தேசியவாதம், ஹைதரபாத்தை இந்தியாவுடன் இணைத்தது, கலவரங்கள், தேசியகீதம் உருவாக்கம் பல்வேறு விஷயங்களைப் பற்றிய தனது கருத்துகளை கூறுகிறார். 

உலகம், இந்தியா, இந்திய மாநிலங்கள் பற்றி பிரதமர் ஒருவர் வெளிப்படையாக பேசுவது ஆச்சரியமான ஒன்று. இதில் அரசியல் கலக்காமல் தனது சிந்தனைகளை பேசியுள்ளார். பிரதமரின் பெருமை குலையும்போது நாட்டின் பெருமையும் குலைந்துவிடும் என்று பிரனாப் முகர்ஜி கூறிய கூற்றை நினைவுபடுத்திக்கொண்டால் நேரு சிறப்பாகவே அனைத்து விவகாரங்களையும் கையாண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும். 

 காஷ்மீர் விவகாரம், இந்து முஸ்லீம் ஒற்றுமை பற்றி பேசும்போதும் இரு தரப்பினருக்குமான யோசனைகளை முன்வைத்து பேசியுள்ளார். ராணுவ தரப்பிலும் ஆதரவாக பேசவில்லை. மக்களின் எந்த தரப்பிற்கும் ஆதரவு தருவதாக அவரது கூற்று இல்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.நிர்வாகத்திறனும், மேலாண்மையும் குறைந்த பட்ச மனிதநேயமும் ஒரு தலைவரிடம் இருந்தால் அவர் எப்படி சிந்திப்பார் என்பதை இந்த நூலை வாசிப்பதன் மூலம் அறியலாம்.

78 பக்கங்களைக் கொண்ட இந்த சிறு நூலை நீங்கள் வேகமாக வாசித்துவிட முடியும்.

 நூலைப் பெற

https://www.amazon.in/dp/B094RCBBLD


ஸ்கேன் செய்து வாங்க




 

 

கருத்துகள்