உயிருக்கு உயிரான காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் ஆல்பட்ரோஸ் பறவை! - டே ட்ரீமர் - துருக்கி தொடர்

 

 

 

 

 

 

 

 https://s2.dmcdn.net/v/ScpSm1VowJXL79M8n/x240

 

 

டே ட்ரீமர்


துருக்கி தொடர்


50 எபிசோடுகள்


எம்எக்ஸ் பிளேயர்


https://s2.dmcdn.net/v/Sboz11VtFzQVT6Apf/526x297

சனீம் என்ற பெண்தான் தொடரின் மையப் பாத்திரம். எப்போதும் புதிய தீவு ஒன்றுக்கு சென்று தனக்கு பிடித்த காதலனுடன் வாழவேண்டும். அதுவும் ஆல்பட்ரோஸ் பறவையைப் போலவே தன்னைக் கருதுகிறாள். தனக்கான ஆண் இணையைக் கண்டுபிடிப்பதே அவளது வாழ்க்கை லட்சியம்.


சனீமைப் பொறுத்தவரை தனக்கு தோன்றுவதை அப்படியே பேசிவிடுவாள். எதிரிலிருப்பவர்கள் யார், என்ன நினைத்து கேட்கிறார்கள் என்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படமாட்டாள். இதனால் அவளது குடும்பம், தோழி அய்ஹான், அக்கா லைலா என் எல்லோருமே அவளைப் பார்த்து மிரள்கிறார்கள்.


குடும்பத்தின் மளிகைக்கடையை பார்த்துக்கொண்டு பகல் கனவு காண்பதுதான் அவளது வேலை. குடும்பத்தின் கடன் வேறு அதிகமாகிக்கொண்டிருக்க, மகள் வேறு அதிக வருமானம் வரும் வேலைக்கு போனால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார்கள். அப்படி எந்த வேலைக்கு போக எனத் தேடும்போது அக்கா லைலா தனது நிறுவனத்திற்கு கூட்டிச்செல்கிறாள். விளம்பர நிறுவனமான அங்கு அவளுக்கு கிடைக்கும் அனுபவங்கள்தான் ஜவ்வாக இழுக்கும் ஏராளமான எபிசோடுகளின் கதை.

https://s2.dmcdn.net/v/Sb6rw1VtsydxhhMdG/526x297

தொடரில் குறிப்பிட்டுச்சொல்லும் சில அம்சங்கள் சான், சனீம் ஆகிய இருவருக்கும் இடையிலான மோதல், காதல், ஊடல் காட்சிகள் சிறப்பாக உள்ளன. இதுவும் கூட 50 எபிசோடுகள் வரைதான். அதற்குமேல் இருவருக்கும் இடையில் உள்ள பொய்கள் காணாமல் நல்ல உறவு மலருகிறது. ஆனாலும் கூட பொறாமை, ஊடல் எனவே காட்சிகளை இழு இழுவென இழுத்துவிட்டனர்.


சனீமின் பெற்றோர் வரும் காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன. அதில் அடிக்கடி கூறும் ஒரே வசனம், நாமெல்லாம் ஒரே குடும்பம் என்பதும், லைலாவும் சனீமும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன. மற்றபடி தொடரை காப்பாற்றுவது முசாபர் என்ற சனீமை ஒருதலையாக காதலிக்கும் காதலர்தான். இவருக்கான வசனங்கள் பொதுவாக பிறரை கிண்டலடித்துதான் உருவாக்குகிறார்கள் என்பதால் இறங்கி அடித்திருக்கிறார். இவரது நடிப்பும் வசனத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. அடுத்து உண்மையைச் சொன்னால் பதற்றமாகி அதனை அலுவலகம் முழுக்க சொல்லிக்கொண்டு அலையும் ஜேஜே என்ற பாத்திரம். முசாபரும், ஜேஜேவும் இல்லையென்றால் தொடரை சமாளித்துப் பார்ப்பது கடினமாகிவிடும்.

https://d.wattpad.com/story_parts/783455917/images/15c3dc43f5f86161801540024355.jpg

துருக்கியில் உள்ள இடங்களை முடிந்தளவு அழகாக காட்டியுள்ளனர். சனீமும், சானும் கடற்கரையில் பேசும் இடங்களில் ஆல்பட்ரோஸ் பறவைகளையும் பார்க்க முடிவது நன்றாக இருக்கிறது. சான் ஒருமுறை சனீமுக்கு பரிசு ஒன்றை அனுப்புகிறார். எழுதுவதை நிறுத்தாதே கனவுகளை தடுக்காதே என்று எழுதிபரிசளிக்கிறார். இதே வரிகளை பிந்தைய அத்தியாயங்களில் படிக்கும்போது அப்படியே மாறியிருக்கிறது. இதனை டப்பிங்கில் கவனித்திருக்க வேண்டும். தவறிவிட்டது.


https://kino-teka.ru/uploads/posts/2019-06/1560542053_erkenci44-1.jpg


தொடரில் பணக்காரன், ஏழை என வர்க்கவேறுபாடுகளையும் அது காதலர்களுக்கு இடையில் எப்படி வேறுபாடுகளை உணர்த்திக்கொண்டே இருக்கிறது என்பதையும் காட்சி, வசனம் மூலம் காட்சிபடுத்தியிருக்கிறார்கள்.


இதற்கிடையே விளம்பர நிறுவனத்தில் நடக்கும் அரசியல், சொந்த குடும்ப உறுப்பினர்கள் செய்யும் துரோகம், பழிவாங்குதல், கூடவே நிறைய துருக்கி கலாசார அம்சங்கள் என பார்க்க வண்ணமயமான காட்சிகளோடு மென்மையான உணர்வுகளையும் தொடரில் கொடுத்திருக்கிறார்கள்.


ஐம்பது எபிசோடுகளில் சனீம் முதல் காட்சியில் சானால் முத்தமிடப்படுவதும், யார் தன்னை முத்தமிட்டது என தேடுவதுமாக சுவாரசியமான காட்சிகளால் தொடங்குகிறது. பிறகு குடும்பத்திற்காக எம்ரே என்ற சானின் தம்பியிடம் கடன் வாங்கி அதற்காக நிறுவனத்திற்கு துரோகம் செய்யும் செயல்களை செய்கிறாள். அப்போதும் கூட அதனை முழுமையாக அறியாதவளாக இருக்கிறார். பின்னர் உண்மை தெரியும்போது சானால் காதலிக்கப்படுபவளாகவும், பொய் சொன்னதால் தன்னால் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாமல் தவிக்கிறாள். பிற பெண்களையும் சானை நெருங்க விட முடியவில்லை. உறவுக்கு இடையில் பொய்கள் நுழைந்தால் ஏற்படும் குற்றவுணர்ச்சியை சனீம் எப்படி எதிர்கொண்டு மீள்கிறாள் என்பதுதான் இத்தொடரின் முக்கியமான பகுதி.


கோமாளிமேடை டீம்




கருத்துகள்