இடுகைகள்

கைதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அளவற்ற அதிகாரம் தரப்படும்போது ஏற்படும் தனிநபரின் நடத்தை மாறுதல்கள்!

படம்
  பிலிப் ஸிம்பார்டோ philip zimbardo 1933ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சிசிலிய அமெரிக்க குடும்பத்தில் பிறந்தார். பிரான்க்ஸில் உள்ள ஜேம்ஸ் மன்றோ பள்ளியில் படித்தார். இவரது நண்பராக உளவியலாளர் ஸ்டான்லி மில்கிராம் இருந்தார். நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளின் கல்லூரியில், பிஏ பட்டம் பெற படித்தார். யேல் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். 1968ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் செல்லும்வரை ஏராளமான பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தார். 1980ஆம் ஆண்டு, மக்களுக்கு உளவியலை அறிமுகம் செய்யும் நோக்கத்தில் டிவியில் டிஸ்கவரிங் சைக்காலஜி என்ற தொடரை தயாரித்தார். 2000ஆம் ஆண்டு, அமெரிக்க உளவியல் பவுண்டேஷன், வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க உளவியல் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  முக்கிய படைப்புகள் 1972 தி ஸ்டான்ஃபோர்ட் பிரிசன் எக்ஸ்பரிமென்ட்  2007 தி லூசிஃபர் எஃபக்ட் 2008 தி டைம் பாரடாக்ஸ்  2010 சைக்காலஜி அண்ட் லைஃப்  நல்ல மனிதர்கள் என்று அறியப்பட்டவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அதிகாரம் வழங்கப்படுகிறது. அதை அவர்கள் தங்கள் கீழுள்ளவர்கள் மீ

சிறையில் கிடைக்கும் கைதிகளைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தும் தொழில் நிறுவனங்கள்!

படம்
              உலகமெங்கும் உள்ள ஏஐ நிறுவனங்கள், தங்கள் எல்எல்எம் மென்பொருளுக்கு பல்வேறு தகவல்களை உள்ளீடு செய்ய, தகவல்களை அளிக்க பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்கள். இதை செய்வதற்கு ஒருவருக்கு வழங்கப்படும் சம்பளத்தை மிகவும் குறைவு. பொதுவாக பெரிய நிறுவனங்களை வைத்து தகவல் பயிற்சிகளை செய்தால் அதற்கு ஏராளமான தொகையை செலவிட வேண்டியிருக்கும். இதே பணிக்கு சிறைக்கைதிகளைப் பயன்படுத்தினால் எப்படி? சிறைக் கைதிகளுக்கு வேலைவாய்ப்பு என அரசுக்கு உதவியது போலவும், சம்பளத்தை குறைவாக கொடுத்து எளிதாக வேலையை முடிக்கலாமே? இப்படித்தான் ஃபின்லாந்து கம்பெனி மெட்ராக் நினைத்தது. தனது யோசனையை சிறைத்துறை மறுவாழ்வு திட்ட தலைவரிடம் கூறியது. அவருக்கு பெரிய சந்தோஷம். கைதிகளுக்கு ஏஐ தொடர்பாக வேலை என நினைத்து மகிழ்ந்திருக்கிறார். மெட்ராக்கின் லட்சியம், குறைந்த கூலி. அதேசமயம் ஃபின்னிஷ் மொழியில் எந்திரவழி கற்றலை அமைப்பது. இதற்காகவே கைதிகளைப் பயன்படுத்துகிறது குறைவான கூலியை வழங்குகிறது. ஒரு மணிநேரத்திற்கு 1.54 யூரோக்களை கூலியாக கைதிகளுக்கு வழங்குகிறது. இப்படி இருபது கைதிகளை தனது வேலைக்கு பயன்படுத்துகிறது. ஃபின்லாந்து நாட்டில

மரண தண்டனை கைதிகளுக்கு உதவும் வழக்குரைஞர்! அனுப் சுரேந்திரநாத்

படம்
  வழக்குரைஞர் அனுப் சுரேந்திரநாத் இந்தியா போன்ற பல்வேறு கலாசாரம், பண்பாடு கொண்ட நாட்டை ஒழுங்குபடுத்துவது சாதாரண காரியமல்ல. இதைத்தான் பல்வேறு முன்மாதிரிகளை கொண்டு பி ஆர் அம்பேத்கர் சாத்தியப்படுத்தினார். அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றினார். இதன் வழியாகவே எது குற்றம் என்பதையும், உரிமைகள் என்னென்ன என்பதையும் அறிய முடிகிறது.  மாநில, மத்திய அரசுகளைப் பொறுத்தவரை சட்டம், வழக்கு என்பதெல்லாம் மக்களுக்குத்தான். தங்களுக்கும் தங்கள் அதிகாரத்திற்கும் அல்ல என்ற முடிவுக்கு வந்து செயல்பட்டு வருகிறார்கள். இதனால் செல்வாக்கு, அதிகாரம் கொண்டவர்களை நீதிமன்றத்தால் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வரமுடிவதில்லை.  வழக்குரைஞர் அனுப் சுரேந்திரநாத் அனுப் சுரேந்திரநாத் சட்டத்தை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டு வருகிறார். நாட்டில் சட்டம் செயல்பாட்டில் இருந்தாலும் கூட அதனை செயல்படுத்தும் நீதிமன்றம் போதுமான  வேகத்தில் செயல்படுவது இல்லை. இதற்கு பல்வேறு அரசியல், சூழல் காரணங்கள் உண்டு. இதன் நேரடி பாதிப்பாக, சிறையில் 70 சதவீத த்திற்கும் அதிகமான கைதிகள் விசாரணை கைதிகளாகவே சிறைபட்டுள்ளனர். இவர்களை வெளியே கொண்டு வர வழக்கு முடிவ

கைதிகளுக்கு மறுவாழ்க்கை தருகிறது பின்லாந்து!

படம்
சிறைவாசிகளுக்கு ஏ.ஐ. பயிற்சி! செய்தி: பின்லாந்து நாட்டிலுள்ள சிறைக்கைதிகளுக்கு அரசு, செயற்கை நுண்ணறிவு பற்றிய பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளுக்கு தயார் செய்கிறது. பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்சிங்கி பல்கலைக்கழகம் ஏ.ஐ. பற்றிய முன்மாதிரி பாடத்திட்டத்தை தயாரித்தது. இதன் நோக்கம், செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை மக்களுக்கு ஏற்படுத்துவதே ஆகும். அம்முயற்சிக்காகத்தான் சிறைவாசிகளுக்கு டேப்லட், கணினிகளை கொடுத்து பயிற்சி அளித்து வருகின்றனர். தகவல் யுகத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான கணினி திறன் திட்டமாக அமையவேண்டும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. இந்த நோக்கத்தின்படி மாணவர்களுக்கான திட்டமாகவே ஏ.ஐ.பயிற்சி முறை உருவானது. குற்றத்துறை மேலாளரான பியா புலாலகாவின் முயற்சியால் அரசு, ஏ.ஐ. பயிற்சிகளை சிறைக்கைதிகளுக்கு வழங்க இசைந்துள்ளது. “இப்பாடத்திட்டத்தை ரியாக்டர் என்ற நிறுவனம் செயல்படுத்தியது. கைதிகளின் முகவரிகளை கருப்பு பட்டியலில் வைத்திருப்பதால், இணைய இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்தது. சிறை முகவரியில் அவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி வசதி உட்பட செய்துகொடுத்திருக்கிறோம். சிறையிலிருந்து வ

சிறையில் உளவியலாளர் பணி - ஹரே என்ன செய்தார்?

படம்
அசுரகுலம் உளவியலாளர் ராபர்ட் ஹரே ராபர்ட் ஹரே நம் ஆட்கள் போல படித்தால் டாக்டர் இல்லைனா எஞ்சினியர் என பிளான் போட்டு படிக்கவில்லை. அல்பெர்டாவின் கால்கேரியில் பிறந்து வளர்ந்தவர் பள்ளியில் சேர்ந்தார். ஆனால் எந்த இலக்கும் இல்லை. அவருக்கு கணிதம், அறிவியல், தொல்லியல் ஆகிய துறைகளில் ஈடுபாடு இருந்தது. ஆனால் அல்பெர்டா பல்கலையில் ஏதேனும் படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது உளவியலும் சேர்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்தார். 1950 ஆம் ஆண்டு உளவியல் படிப்பில் பட்டம் பெற்றார். அதை நினைவுகூர்ந்தவர், எனக்கு அப்போது நான் படித்த விஷயங்களை ஆய்வு அடிப்படையில் சோதித்தப் பார்க்க விரும்பினேன். ஏனெனில் கல்லூரியில் படித்தது முழுக்க தியரிதானே ஒழிய அதற்கான எடுத்துக்காட்டுகளை நாங்கள் பார்க்கவேயில்லை என்றார். காலம் நீங்கள் விரும்புகிற விஷயங்களை வழங்காமல் போகுமா? அவருக்கும் வழங்கியது. அப்போது உளவியல் வகுப்பில் ஒரு பெண்ணைப் பார்த்தார். அவெரில் என்ற அந்தப் பெண்ணுடன் டேட்டிங் போய் பிறகு அந்த உறவை சுபமாக திருமணத்தில் முடித்தார்.  1959 ஆம் ஆண்டு திருமணமானவர்கள் படிப்பிலும் இல்லறத்திலும் அதீத ஆர்வம் காட்டி, செரில் பிற