மரண தண்டனை கைதிகளுக்கு உதவும் வழக்குரைஞர்! அனுப் சுரேந்திரநாத்
வழக்குரைஞர் அனுப் சுரேந்திரநாத் |
இந்தியா போன்ற பல்வேறு கலாசாரம், பண்பாடு கொண்ட நாட்டை ஒழுங்குபடுத்துவது சாதாரண காரியமல்ல. இதைத்தான் பல்வேறு முன்மாதிரிகளை கொண்டு பி ஆர் அம்பேத்கர் சாத்தியப்படுத்தினார். அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றினார். இதன் வழியாகவே எது குற்றம் என்பதையும், உரிமைகள் என்னென்ன என்பதையும் அறிய முடிகிறது.
மாநில, மத்திய அரசுகளைப் பொறுத்தவரை சட்டம், வழக்கு என்பதெல்லாம் மக்களுக்குத்தான். தங்களுக்கும் தங்கள் அதிகாரத்திற்கும் அல்ல என்ற முடிவுக்கு வந்து செயல்பட்டு வருகிறார்கள். இதனால் செல்வாக்கு, அதிகாரம் கொண்டவர்களை நீதிமன்றத்தால் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வரமுடிவதில்லை.
வழக்குரைஞர் அனுப் சுரேந்திரநாத் |
அனுப் சுரேந்திரநாத் சட்டத்தை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டு வருகிறார். நாட்டில் சட்டம் செயல்பாட்டில் இருந்தாலும் கூட அதனை செயல்படுத்தும் நீதிமன்றம் போதுமான வேகத்தில் செயல்படுவது இல்லை. இதற்கு பல்வேறு அரசியல், சூழல் காரணங்கள் உண்டு. இதன் நேரடி பாதிப்பாக, சிறையில் 70 சதவீத த்திற்கும் அதிகமான கைதிகள் விசாரணை கைதிகளாகவே சிறைபட்டுள்ளனர். இவர்களை வெளியே கொண்டு வர வழக்கு முடிவுக்கு வரவேண்டும். ஆனால் அது எப்போது நடக்கும் என அதனை உருவாக்கிய அம்பேத்கர் கூட சொல்லமுடியாது. அந்தளவு நிதானமாக வழக்குகளை ஆய்வு செய்து நடத்துகிறது நீதிமன்றங்கள்.
2012இல் டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் வல்லுறவு செய்யப்பட்டு , பாலுறுப்புகள் சிதைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். தலைநகரில் நடைபெற்ற இந்த கொலை அரசுகளுக்கு கௌரவ பிரச்னையாக மாறியது. அப்போது மக்களைப் பொறுத்தவரை உணர்ச்சி பீறிடலான முகமாக மாறினார்கள். சட்டம் என்பதைத் தாண்டி குற்றம் செய்தவர்களை கொல்ல வேண்டும் என்ற உணர்வுநிலைக்கு பலரும் வந்துவிட்டனர். தண்டனை செய்தவர்களில் சிலர் மைனர் என்றாலும் கூட அவர்களைக் கொல்லவேண்டும் என பலரும் ஊடகங்களில் கருத்துகளை தெரிவித்தனர். இப்படிப்பட்டவர்களுக்கு குற்றவாளிகளின் சார்பாக ஆஜராகி சட்டத்தின் உரிமையைப் பயன்படுத்தி அவர்களின் நியாயத்தைப் பேசவேண்டும் என்ற சொல்லும் அனுப், வினோதமாக தெரிவார்கள்.
2012ஆம் ஆண்டு அனுப் ஆக்ஸ்போர்டு பல்கலையிலிருந்து இந்தியாவுக்கு திரும்பினார். டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிக்காக வந்தார். அப்போதுதான் தீவிரவாத செயல்பாடுகளுக்காக அப்சல் குருவுக்கு மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் நடத்தப்பட்டதற்காக இத்தண்டனை அப்சலுக்கு கொடுக்கப்பட்டது. அப்சலின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி மறுத்துவிட்டார்.
இப்படி மரணத்தை எதிர்நோக்கும் கைதிகளை காப்பாற்றவே அனுப் சுரேந்திரன் 39 ஏ என்ற திட்டத்தை உருவாக்கினார். இதற்கு அடிப்படையாக 2016இல் வெளியான இந்திய மரண தண்டனை அறிக்கை இருந்தது.
2004 ஆம் ஆண்டு தொடங்கி அனுப் தனது பணியைத் தொடங்கினார். இதன்படி பல்வேறு சிறைகளில் உள்ள மரண தண்டனைக் கைதிகளை நேர்காணல் செய்தார். 500 பேருக்கும் மேல் நீண்ட நேர்காணல்களின் மூலம், குடும்பத்தினர்களிடையேயும் பேசி வழக்கின் தன்மையையும் புரிந்துகொண்டார். இப்படி மரண தண்டனை பெற்றவர்கள் பலரும் ஏழையான பின்புலம் கொண்டவர்கள். இவர்களால் வழக்குரைஞர்களை வைத்து நீதிமன்றத்தில் வாதாடி தங்களை நிரூபிக்க முடியாத நிலை.
குடும்பத்தில் சம்பாரிப்பவர்களாகவும் இவர்களே இருந்ததால், குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் குடும்பமும் சிதைந்துபோய்விட்டது. சாதாரணமாக காவல்துறை, அரசால் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டால் மக்களும் ஊடகங்களும் அவர்களை ராட்சதர்கள் என பெரிதுபடுத்தி பேசுவார்கள். அதுதானே இயல்பு. இதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதங்களை நியாயங்களை யாருமே கேட்பதில்லை. இதனைத்தான் சட்டத்திற்குட்பட்டு 39 ஏ திட்டம் செய்கிறது. அனுப் இதனை கவனப்படுத்தி செயல்படுகிறார்.
தேசிய உளவியல் மற்றும் நரம்பியல் மையத்தின் ஆலோசனைகளைப் பெற்று மரண தண்டனை கைதிகளை ஆராய்ந்தார் அனுப் சுரேந்திரன். இப்படித்தான் அவர்களில் 60 சதவீதம் பேர் மனநல பிரச்னைகளைக் கொண்டிருப்பதும், 11 சதவீதம் பேர் அறிவுசார் குறைபாடு கொண்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
அண்மையில் 39 ஏ திட்டத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் அணி முக்கியமான சாதனை வெற்றியை சுவைத்தது. இவர்கள், தனது குடும்ப உறுப்பினர்களைக் கொன்றதாக கூறப்பட்ட 52 வயதானவரை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றியுள்ளனர். இவர் மரண தண்டனை விதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார்.
தவறை சரி செய்துகொள்ளவும் வாய்ப்பிருப்பது நல்ல விஷயம்தானே? அதனைத்தான் சட்டத்தின் மூலம் அனுப் சுரேந்திரன் செய்துகொண்டு இருக்கிறார்.
ரீடர்ஸ் டைஜெஸ்ட்
சோமக் கோஷல்
கருத்துகள்
கருத்துரையிடுக