நவீன ஒலிம்பிக்ஸ் தொடங்கி 126 ஆண்டுகள் ஆகிறது!

 








நவீன ஒலிம்பிக் போட்டிகள் 


தொன்மையான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது கி மு 7766 ஆம் ஆண்டு தொடங்கியது பிறகு கி பி 393 வரை அப்படியே தொடர்ந்தது.  கிரீஸின் ஒலிம்பியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடைபெற்றன. 

நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896ஆம் ஆண்டு தொடங்கின. இந்த போட்டிகள் நடைபெற 1503 ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்கான ஐடியாவின் சூத்திரதாரி பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பாரோன் பியர் டி கூபெர்டின். இவர்தான் நவீன ஒலிம்பிக் போட்டிக்கான ஐடியாவை எடுத்து வந்தார். அந்த ஆண்டு, 1894. 1896ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 6 முதல் 15 வரை கிரீசின் ஏதேன்ஸில் நடைபெற்றது. 

14 நாடுகளைச் சேர்ந்த வீர ர்கள் இதில் பங்கேற்றனர். பெரும்பாலான வீர ர்கள் கிரீஸ், ஜெர்மனி, பிரான்ஸ்,  பிரிட்டிஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் கலந்துகொண்டனர். 

43 போட்டிகளில் பெரும்பாலான வீர ர்களாக கலந்துகொண்டது ஆண்கள்தான். நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், எடை தூக்குவது, மல்யுத்தம், டென்னிஸ், துப்பாக்கிச்சூடு ஆகிய போட்டிகள் இதில் உள்ளடங்கும். வெளிநாட்டு வீரர்களை வரவேற்க ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். ஏறத்தாழ 60 ஆயிரம் பேர். கிரீஸைச் சேர்ந்த அரச குடும்பம் விளையாட்டை நடத்துவதிலும் நிர்வாகம் செய்வதிலும் அதிக பங்களிப்பை செய்தது. 

தொடக்கத்தில் வெள்ளி, செம்பு மெடல்களை மட்டுமே கொடுத்தனர். இரண்டு பரிசுகள்தான். இன்று ஒலிம்பிக் கமிட்டி மூன்று பரிசுகளை கொடுக்கிறார்கள். தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பரிசுகள் உண்டு. 

பதினான்கு நாடுகளில் பத்து நாடுகள் அதிகளவிலான பதக்கங்களை வென்றன. இதிலும் அந்த காலத்திலேயே அமெரிக்காதான் அதிக தங்க பதக்கங்களைப் பெற்றது. மொத்தம் பதினொரு பதக்கங்கள். ஒட்டுமொத்தமாக கிரீஸ் நாடு 46 பதக்கங்களைப் பெற்றது. 

நவீன ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறத் தொடங்கி 2022 ஆம் ஆண்டோடு 126 ஆண்டுகள் ஆகிறது. 

டெல் மீ வொய் இதழ் 

pinterest

கருத்துகள்