யுனைடெட் வே மும்பையின் தூய்மைப்பணி
கடற்கரைகளை சுத்தம் செய்யும் குழு!
மும்பையில் கடந்த செப்டம்பர் மாதம், 40 கல்லூரி மாணவர்கள் குழு, மஹிம் கடற்கரையிலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இக்கழிவுகள், மறுசுழற்சி செய்யும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. யுனைடெட் வே மும்பை என்ற தன்னார்வ நிறுவனத்தின் பெயரில் தூய்மை பணிகளை மாணவிகள் செய்தனர்.
2017ஆம் ஆண்டு யுனைடெட் வே மும்பை தன்னார்வ நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் யுனைடெட் வே வேர்ல்ட் என்ற உலகளாவிய அமைப்பின் இந்திய பிரிவு ஆகும். முமைபையிலுள்ள தன்னார்வ அமைப்பு, 11 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டுள்ளது. கடற்கரைகளை சுத்தம் செய்து 98 ஆயிரம் கிலோ கழிவுகளை மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பியுள்ளது. ஒன்பது கடற்கரைப் பகுதிகளை இந்த அமைப்பு சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்றுள்ளது. ”கடலில் வந்து சேரும் ஆறுகளில் ஏகப்பட்ட கழிவுகள் உள்ளன. அவற்றைக் குறைத்தாலே கடற்கரையில் ஒதுங்கும் கழிவுகளை குறைக்கலாம். நாங்கள் மும்பை மாநகராட்சிக்கு தூய்மைப் பணியில் உதவுகிறோம்” என்றார் யுனைடெட் வே மும்பை அமைப்பின் துணைத்தலைவர் அஜய் கோவலே.
கடற்கரையைச் சுற்றியுள்ள சுவர்களில் வண்ணம் தீட்டுவது, குப்பைகளை போடக்கூடாது என அறிவிப்பு பலகைகள் வைப்பது என பல்வேறு முயற்சிகளை இந்த தன்னார்வ நிறுவனம் செய்து வருகிறது. கடந்த ஆண்டில் யுனைடெட் வே மும்பை நிறுவனம், அதிகம் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்ட கடற்கரைப் பகுதியை கண்டறிய ஆய்வு நடத்தியது. அதில் சிம்பை என்ற கடற்கரை கண்டறியப்பட்டு அதில் 115க்கும் மேற்பட்ட தாவர, விலங்கு இனங்கள் வாழ்வது அறியப்பட்டது. குறிப்பிட்ட கடற்கரைகளைப் பற்றி அறிவதற்கான வழிகாட்டி நூல்களையும் இந்த அமைப்பு உருவாக்கியுள்ளது. இதன்மூலம் பார்வையாளர்களுக்கு பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறார்கள்.
தகவல்
Indiatoday
The way forward
kiran d tare
---------------------
கருத்துகள்
கருத்துரையிடுக