திருமண ஏற்பாடுகளை செய்வதற்கான ஆப்கள்!

 















பல்வேறு ஆப்களை எழுதியிருக்கிறோம். ஆனால் இப்போது கல்யாணம் செய்வதற்கான அமைப்புகள், சேவைகளைப் பற்றியும் எழுதுகிறோம் என்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? இதை ஆங்கில இதழ்கள் எழுதிவிட்டன என்பதல்ல. கல்யாண வேலைகளை கூட செய்வதற்கான ஆட்கள் கிடைப்பதில்லை. உறவுகள் நெருக்கமில்லாமல் தூரமாகிவிட்டன என்பதை நாம் மறைமுகமாக புரிந்துகொள்ளவேண்டியதுதான். சீரியசாக பேசிவிட்டோமே... ஒகே சில்லுகா உண்டன்டி.. ஆப்களை சூஸ்தம்.....

வெட்மீகுட்

2014ஆம் ஆண்டு தொடங்கிய ஆப் இது. இதில் கல்யாண கார்ட் வடிவமைப்பு முதல் எந்த பொருட்களுக்கு எந்த வியாபாரிகளை அணுக வேண்டும் என்பது வரையிலான தகவல்கள் கிடைக்கின்றன. மாதத்திற்கு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவது போல ஆப்பை தரவிறக்கி வருகிறார்கள். 75 ஆயிரத்திற்கும் மேலான முறை தரவிறக்கி 30 லட்சத்திற்கு மேல் பயன்படுத்தி வருகிறார்கள். 

அப்பி கப்புள்

2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சேவை. இதைப் பயன்படுத்தி திருமணமாகும் தம்பதிகள் தங்களுக்கென தனி ஆப் , வலைத்தளத்தை தொடங்கலாம். அப்புறம் என்ன செய்வது என்கிறீர்களா? கல்யாணம் செய்யவேண்டியதுதான். விருந்து சோறு சாப்பிட வேண்டியது தான். 

ஆர்எஸ்விபி மேனேஜர்

2020ஆம் ஆண்டு தொடங்கிய நிறுவனம் இது. கல்யாணத்திற்கு வரும் விருந்தினர்களை எளிதாக கையாள முடியும். அவர்கள் விசேஷத்திற்கு வந்தார்களா, மொய் வைத்தார்களா, அதற்குப் பிறகுதான் சோற்றில் கைவைத்தார்களா என கண்காணிக்க முடியுமாம். திருமணத்திற்கு வாங்க வேண்டிய தேவையில்லாத பொருட்களைப் பற்றியும் பட்டியல் போட்டு வைத்து பட்ஜெட்டை ஒதுக்க முடியும். வினோதமாக நினைக்கும் அனைத்து விஷயங்களையும் செஞ்சுரலாம் ப்ரோ என சொல்லும் ஆப்பை ஆயிரம் பேர்களுக்கு மேல் பயன்படுத்துகிறார்கள். 

வெட்டிங் பிளானர் பை வெட்டிங் வயர்

2017ஆம் ஆண்டு தொடங்கிய சேவை நிறுவனம் இது. கல்யாணம் செய்துகொள்பவர்கள், அவர்களின் குடும்பம் ஆகியவற்றை கல்யாண பொருட்களை விற்பவர்களிடம் சேர்க்கிறது. அதாவது, இவர்களை இணைக்கும் இடைமுகம் என கூற வருகிறோம். கல்யாணத்தை ஆஹா கல்யாணம் என செய்விக்கும ஆப்பை 5 லட்சம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். பத்து லட்சத்திற்கும் மேல் தரவிறக்கப்பட்டிருக்கிறது. 

இந்தியா டுடே 





கருத்துகள்