நண்பன், காதலி தூரம் தள்ளிப்போக இசைவாழ்க்கையை தக்க வைக்க போராடும் கலைஞனின் கதை! டிக் டிக் பூம்

 












டிக் டிக் பூம்

ஆண்ட்ரூ கார்பீல்ட்


படம் அமெரிக்க இசைக்கலைஞரான ஜொனாதன் லார்சன், வாழ்க்கையைப் பேசுகிறது. 

ஜொனாதன் லார்சனாக ஆண்ட்ரூ கார்பீல்ட் நிறைய பயிற்சி எடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் காட்சி தொடங்கி படம் முடியும் வரை அவரின் அர்ப்பணிப்பு உணர்வு அசத்தலாக இருக்கிறது., 








ஜொனாதனுக்கு சில நாட்களில் 30 வயது தொடங்கவிருக்கிறது. அதுநாள் வரை அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என அவருக்கே கேள்வி எழுகிறது. எனவே, அவர் இத்தனை நாட்களும் பிராட்வே நாடகங்களுக்கு இசையமைப்பும் வாய்ப்பை பெற முயன்று வந்தார். ஆனால் ஏதோ ஒரு விஷயம் இசையில் வேலை செய்யவில்லை. எனவே, வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் காதலியும் நடனம் சார்ந்த வேலைக்காக வேறு இடத்திற்கு போக நினைக்கிறாள். சிறுவயது நண்பன் நடிக்கும் வாய்ப்பு தேடி முயன்று தோற்று வேலை தேடி வேறு இடம் நோக்கி போகிறான். 

எனவே, தன் வாழ்க்கை சார்ந்து வேகமாக யோசிக்கும் நிலைக்கு ஜொனாதன் தள்ளப்படுகிறான். வாழ்க்கையை நடத்த இசை மட்டுமே போதாது அல்லவா? இதனால் துரித உணவகம் ஒன்றில் வெய்ட்டராக வேலை பார்க்கிறான். 

ஜொனாதனின் சிறப்பே, அவன் எழுதும் பாடல்கள் அனைத்துமே தினசரி வாழ்க்கையிலிருந்து உருவாகுபவைதான். இதனால் அவை அவனது நண்பர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் அங்கீகாரம் பெற அது மட்டும் போதாதே.... 

ஜொனாதன் தன் வாழ்க்கைக் கனவை முப்பது வயது எட்டுவதற்குள் அடைந்தானா இல்லையா என்பதுதான் இறுதிக்காட்சி. 

படத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து பாடல்களும் ஜொனாதனுடையதுதான். அதனை தற்போதைய தொழில்நுட்பத்திற்கேற்ப மேம்படுத்தியிருக்கிறார்கள். படத்திற்கென ஆண்ட்ரூ இசைப்பயிற்சி பெற்று பாடியிருக்கிறார். இவரது குரலில் வரும் க்ரீன் டிரெஸ் பாடல், போகோமியா பாடல் சிறப்பாக உள்ளது. 

படம் இசைப்பாடல் கொண்ட படம். எனவே, லாஜிக் பார்க்காமல் பாருங்கள். உயிரோட்டமான பாடல்கள் உங்களை வசீகரிக்கும். நெட்பிளிக்சில் படம் உள்ளது. 

உயிர்ப்பான இசை


நன்றி

த.சக்திவேல்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்