குழந்தைகள் உணவுப்பொருட்களை அடிக்கடி துப்பிவிடுவது ஏன்? - பதில் சொல்லுங்க ப்ரோ?

 








பதில் சொல்லுங்க ப்ரோ?








விண்வெளியில் கண்டுபிடித்த ஏதாவது பொருட்களை நாம் தினசரி வாழ்க்கையில் பயன்படுத்துகிறோமா?

நேரடியாக அறிவியலின் பயன்பாடு என்றால் வானியல் விஷயத்தில் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். இந்த துறையில் உருவாகும் விஷயங்கள் எல்லாமே கோட்பாடு, கலாசார ரீதியான தன்மை கொண்டவை. விண்வெளியில் நாம் ஆய்வு செய்யும் விஷயங்கள் தொடர்பான அனைத்தையும் நாம் நிஜ வாழ்க்கையில் பயன்படுத்த முடியுமா என்றால் முடியாது. ஆனால், அணு தொடர்பான ஆராய்ச்சிகள் மூலம் நான் அணு ஆற்றலை எப்படி தினசரி வாழ்க்கைக்கு பயன்படுத்துவது என அறிந்துகொண்டோம். மேலும் டிஜிட்டல் கேமரா, எம்ஆர்ஐ  ஸ்கேனர் ஆகியவற்றை நாம் இந்த வகையில் வானியல் ஆராய்ச்சி மூலமே மேம்படுத்தினோம். இப்போது இதனை படிக்கும்போது, சற்றே கழுத்தை சாய்த்து மணிக்கட்டில் உள்ள கேசியோ வாட்சை பார்த்தீர்கள் அல்லவா? அதுவும் கூட இப்படிப்பட்ட வானியல் ஆராய்ச்சி முன்னேற்றம் காரணமாக உருவானதுதான். 



குழந்தைகள் உணவுப் பொருட்களை பெரும்பாலும் துப்பிவிடுகிறார்களே அது ஏன்?

குழந்தைகள் தாய்ப்பால் வழியாகவே தங்களுக்கு தேவையான ஆற்றலைப் பெறுகிறார்கள். முதல் ஆறுமாதம் தாய்ப்பால் எந்தளவு முக்கியம் என ஆரம்ப சுகாதார நிலையம், பால்வாடி என அனைத்து இடங்களிலும் சொல்லியிருக்கிறார்கள். இதனைக் கவனித்திருப்பீர்கள். தாய்ப்பாலை குடிக்கும்போது காற்று உள்ளே போய்விடும். எனவே, அவர்களுக்கு உள்ளே போன காற்று வெளியே வரவேண்டுமே? எனவே, இந்த வகையில் உணவுப்பொருட்களை காற்றோடு சேர்த்து வெளியே துப்பிவிடுவார்கள். 

குழந்தைகளுக்கு செரிமான உறுப்புகள் அந்தளவு சிறப்பாக வளர்ச்சி பெற்றிருக்காது. எனவே, உணவை அடிக்கடி துப்புவது, வாந்தி எடுப்பதை செய்வார்கள். சிலசமயம் உணவு நச்சாவதைக் கூட இப்படி வெளியேற்றுவது உண்டு. அப்படியே உணவு நச்சானால் உடல்நிலை பாதிக்கப்படுவது குழந்தைகள்தானே? அதனால் அவர்கள் அதனை வாந்தி எடுத்தாலும் நல்லதுதான். சிறிது நேரத்தில் உடல் நல்ல நிலைக்கு திரும்பிவிடும். 


பிபிசி சயின்ஸ்போகஸ் 



கருத்துகள்