கல்வி, பொருளாதாரத்தில் கவனம் செலுத்தினால் தற்கொலைகளைத் தடுக்கலாம்! - சௌமித்ரா பதாரே
உளவியலாளர் சௌமித்ர பதாரே
சௌமித்ர பதாரே
மனநல சட்டம் மற்றும் கொள்கை மைய இயக்குநர்
உலகளவில் நடைபெறும் தற்கொலைகளில் 20 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. பதாரே, இதுபற்றி லைஃப் இன்டரப்டட் அண்டர்ஸ்டாண்டிங் இண்டியாஸ் சூசைட் கிரிசிஸ் என்ற நூலை எழுதியுள்ளார். இதில் அம்ரிதா திரிபாதி, அமிஜித் நட்கர்னி ஆகிய எழுத்தாளர்களும் பங்களித்துள்ளனர்.
இளைஞர்கள், பெண்கள், எழுபது வயதானவர்கள் ஆகிய பிரிவுகளில் தற்கொலைகள் அதிகமாகியுள்ளன என கூறியுள்ளீர்கள். இந்தியாவில் தற்கொலைகள் இப்படி அதிகரிக்க என்ன காரணம்?
வயதானவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு அவர்கள் தனியாக இருப்பதுதான் காரணம். மேலும் அவர்கள் தங்கள் துணையை இழந்திருப்பார்கள். சமூகத்தில் புறக்கணிப்பையும் எதிர்கொண்டிருப்பார்கள். இதைப் பற்றிய தகவல் பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இளைஞர்கள் ஏன் அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி.
குடும்ப பிரச்னைகள், உறவு சார்ந்த சிடுக்குகள் இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. பிற நாடுகளில் நேரும் தற்கொலைகளுக்கு வேலைவாய்ப்பின்மை முக்கியமான காரணமாக உள்ளது. இளம் வயதில் கர்ப்பிணியாவது, பொருளாதார பற்றாக்குறை, பொருளாதார சுதந்திரம் இல்லாதது ஆகியவை முக்கியமான காரணங்களாக உள்ளன. இதில் பெண்களின் தற்கொலைக்கு குடும்ப வன்முறை முக்கியமான காரணம்.
இப்படி குடும்பத்தில் வன்முறை நடக்க மதுப்பழக்கம் அதிகரித்ததைக் கூறலாம். குடிநோய்க்கு அடிமையானவர்கள் அதிகளவு தற்கொலை செய்கிறார்கள். குடிநோய், குடும்ப வன்முறை, தற்கொலை என்பவை மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டவையாக உள்ளன. இதனை பலரும் இணைத்துப் பார்ப்பதில்லை.
2020 ஆம் ஆண்டில் தற்கொலைகள் பத்து சதவீதம் அதிகரித்துள்ளன. 2019ஆம் ஆண்டை விட இது அதிகம். இதைப்பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.
தொடக்கத்தில் பலரும் பொதுமுடக்கம்தான் பலரது தற்கொலைக்கு காரணம் என்று கூறினார்கள். கடந்த காலத்தில் பொருளாதார பிரச்னைகள் தற்கொலைக்கு காரணமாக இருந்திருக்கின்றன. எ.கா 2008 ஆம் ஆண்டு க்ரீஸ் நாடு.
கொரானோ பெருந்தொற்று காரணமாக பல்லாயிரம் பேருக்கு வேலை போய்விட்டது. இதன் காரணமாக குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. பெருந்தொற்று காரணமாக வீட்டில் அடைந்து கிடக்க நேரிட்டுள்ள சூழலில் குடும்ப வன்முறை தொடர்பான அழைப்புகள் 100 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் தற்கொலைகள் செய்துகொள்வதும் கூடியுள்ளது. அதேசமயம் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், இதுதொடர்பான மாணவர்களின் மரணம் 24 சதவீதமாக குறைந்துள்ளது என என்சிஆர்பி ஆவணக் காப்பக தகவல் கூறியுள்ளது.
இலங்கையில் பூச்சிக்கொல்லிகளை தடை செய்த சிறிது காலத்திற்குள் 70 சதவீத தற்கொலைகள் குறைந்துள்ளன. இதை எப்படி பார்க்கிறீர்கள்? இந்தியா இதிலிருந்து கற்றுக்கொள்ள ஏதேனும் உள்ளதா?
இலங்கையைப் போலவே பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொள்வது இந்தியாவில் நடைமுறையில் இருக்கிறதுதான். சிலர் கூறுவார்கள், எப்படி இருந்தாலும் தற்கொலை செய்பவர்கள் செய்துகொள்ளத்தானே போகிறார்கள் என்று. அபாயகரமான எளிதாக கிடைக்கும் பூச்சிக்கொல்லிகளை தடுத்தால், தற்கொலை முயற்சிகள் குறையாது. ஆனால் மரணங்களை கணிசமாக குறைக்கலாம்.
தற்கொலை செய்வதற்கு வேகமாக முடிவெடுத்தாலும், அவர்கள் உயிர் பிழைத்தவுடன் தாங்கள் உயிருடன் இருப்பதற்கு பெரிதும் நன்றி உடையவர்களாக உள்ளார்கள். பிரேசில் நாட்டில் வேலையில்லாதவர்களுக்கு யுனிவர்சல் பேசிக் இன்கம் எனும் திட்டத்தை அமல்படுத்தினார்கள். இதன்மூலம், அங்கு 60 சதவீதம் தற்கொலை பிரச்னை குறைந்தது. வேறு எந்த வகையிலும் தற்கொலையை தடுக்க முடியாது. இந்தோனேஷியாவிலும் இதேபோலத்தான் தற்கொலை எண்ணிக்கை குறைந்தது.
அரசு கொடுக்கும் பணத்தில் நாகரிகமா ன வாழ்க்கையை வாழ்பவர்கள் தற்கொலையை தேர்ந்தெடுக்கமாட்டார்கள். தமிழ்நாட்டில் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு சப்ளிமெண்ட் தேர்வு நடத்த உத்தரவாகியுள்ளது. இதன்மூலம் தேர்வில் தோல்வியடைந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது. இதன்மூலம் அவர்களின் கல்வியாண்டும் பிரச்னைக்குரியதாக இருக்காது.
தற்கொலையை நீங்கள் தடுக்கவேண்டுமெனில் கல்வி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் கவனம் செலுத்தவேண்டும்.
தற்கொலை பற்றிய எண்ணம் வந்தால் தொடர்பு கொள்ளவேண்டிய எண்
ஐகால் 915298987821
தகவல்
டைம்ஸ் ஆப் இந்தியா
கருத்துகள்
கருத்துரையிடுக