திருச்சியில் மறுசுழற்சி பொருட்களை விற்கும் மருத்துவர் பாரதி பவாதரன்!

 








நாம் பயன்படுத்தும் பல்வேறு பொருட்களை மறுசுழற்சி செய்வது கடினமானது. பிளாஸ்டிக் பிரஷ்ஷை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் முதன்முதலில் சிறுவனாக இருந்தபோது என்ன நிறத்திலான பிரஷ்ஷைப் பயன்படுத்தினோம் என்பதை மறந்திருப்போம். ஆனால் அந்த பிரஷ் இன்னும்  மக்கிப்போகாமல் மண்ணுக்குள்தான் இருக்கும். காரணம், அது முழுக்க மட்கிப் போக 400 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். 

இதுபோல ஏராளமான தகவல்களை படித்த மருத்துவர் பாரதி, நம்மைப்போல அடுத்த செய்திக்கு போகவில்லை. ஃபார்ம்வில்லே வேதா பிஸ்கெட்டையும் கூட தொடாமல் யோசித்தார். இதன் விளைவாக ஈகோடோபியா என்ற கடையைத் திறந்தார். அதில் மறுசுழற்சி செய்யப்பட்ட பைகள், பொருட்களை விற்று வருகிறார். இவரிடம் மூங்கில் பிரஷ்கள் கிடைக்கின்றன. வீட்டை சுத்தம் செய்ய அல்ல. பற்களை சுத்தம் செய்ய என்பதுதான் இதில் விசேஷம். நாம் என்ன மாதிரியான உலகை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்கிறோம் என்ற கேள்வி எனக்குள் வந்தது. அதனால்தான் நான் இயற்கையை, சூழலை பாதிக்கும் விஷயங்களை நோக்கி நகர்ந்தேன் என்கிறார் பாரதி. 

மறுசுழற்சி காகிதம், விதைகளைக் கொண்ட குண்டு ஆகியவற்றையும் விற்கிறார். உணவுப்பொருட்களை வாங்குபவர்களுக்கு சூழலை பாதிக்காத கவர்களில் போட்டுக் கொடுக்கிறார். இவரது கடையில் இன்னொரு சிறப்பு விஷயமும் இருக்கிறது. இங்கு பழங்களை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுத்து, ஜூசரில் போட்டு சைக்கிள் பெடலை மிதித்து பழச்சாறு குடிக்கலாம். குடித்துவிட்டு காசை உறுதியாக பாரதியிடம் தரவேண்டும். அத்தனை வேலைகளையும் நாமே செய்துவிட்டு பழச்சாறுக்கு காசு வேறு கொடுக்க வேண்டுமா என நிறையப் பேர் யோசிக்கலாம். திருச்சி அப்படிப்பட்ட ஊர்தானே? 

pinterest

கருத்துகள்