ரஷ்யாவின் பெருமைக்குரிய ஹீரோ! - யூரி ககாரின்
யூரி ககாரின் |
யூரி ககாரின்
பலரும் அமெரிக்க வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்ததைப் பற்றி பேசுகிறார்கள். அவ்வளவு ஏன் பாடல் கூட எழுதிவிட்டார்கள். ஆனால் யூகி க காரின் அவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விண்வெளிக்கு சென்று சாதித்தவர். அவர் ரஷ்யாவில் பிறந்தார் என்பதற்காகவே ஒதுக்குகிறார்களோ எனும்படி இருக்கிறது ஊடகங்களின் செய்திகள்.
விண்வெளி காலம் என்பது நீல் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்த காலத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. ரஷ்ய விண்வெளி வீரர் யூரி, 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று 9.07 மணிக்கு வோஸ்டாக் 1 என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார்.
சோவியத் யூனியனின் குளுசினோ எனும் நகரில் 1934ஆம் ஆண்டு பிறந்தவர் யூரி. இவரது பெற்றோர்கள் அன்றைய நடைமுறையான கூட்டுப்பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் யூரி மூன்றாவது ஆள்.
இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. அதில் ஜெர்மனி சோவியத்திற்குள் முன்னேறி வந்தது. அவர்களிடம் குளுசினோ நகரம் பிடிபட்டது. இதனால் குடும்பத்தின் பண்ணையும் அவர்களின் கைக்கு போய்விட்டது. வீர ர்களுக்கு உணவிட யூரியின் பெற்றோர் வற்புறுத்தப்பட்டனர். யூரியின் சகோதர ர்களை அடிமை வேலைக்காக போலந்துக்கு அனுப்பி வைத்தது நாஜி ராணுவம். யூரியை அடித்து பட்டினி போட்டனர். ராணுவ வீர ர்கள் அடித்ததில் அவரது அம்மா மருத்துவமனையில் சிகிச்சை செய்துகொள்ள வேண்டியிருந்தது.
போர் முடிந்தபிறகுதான், யூரி பள்ளியில் சேர்ந்தார். யூரிக்கு தொடக்க காலத்திலிருந்தே கணிதம், அறிவியல் சார்ந்த படிப்பு பிடித்திருந்தது. கூடுதலாக விமானங்களின் மீது பித்தேறி கிடந்தார். அப்போது தொழில்நுட்ப பள்ளியில் படித்துக்கொண்டிருந்தர். உள்ளூரில் உள்ள விமான கிளப் ஒன்றில் தன்னார்வலராக சேர்ந்திருந்தார். அதில் காட்டிய ஆர்வம் காரணமாக விமான சேவைக்கான பள்ளியில் சேர அழைப்பு விடுத்தனர். பிறகுதான் விண்வெளி சேவைக்கான வாய்ப்பு கிடைத்தது.
ஏராளமான தேர்வு நடைமுறைகள், கடுமையான பயிற்சிகள் ஆகியவற்றுக்குப் பிறகு வோஸ்டாக் என்ற விண்கலத்தில் செல்ல யூரியை டிக் அடித்தனர். அங்கு விண்வெளிக்கு சென்றதும் போயேகாலி என்ற ரஷ்ய வார்த்தையை சொன்னார்.
விண்கலத்தில் சென்று வந்தபிறகு யூரி ரஷ்யாவில் நாயகனாகவே போற்றப்பட்டார். உலகளவிலும் கவனிக்கப்பட்டார். யூரி அடுத்தும் விண்வெளி திட்டங்களில் சேர, தேர்ந்தெடுக்கப்பட விரும்பினார். ஆனால் சோவியத் அரசு விண்வெளி சாதனைக்கு உயிருள்ள சாட்சியாக உள்ள யூரியை இழக்க விரும்பவில்லை. எனவே, அவரை எந்த திட்டங்களிலும் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனாலும் யூரியை எதுவும் காப்பாற்ற முடியவில்லை. அவர் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற விமான பயிற்சியில் விபத்தாகி இறந்துபோனார்.
அவர் இறந்துபோன கிராமமான ஸாட்டிஸ்கின் பெயரை மாற்றி ககாரின் என வைத்துவிட்டனர். விண்வெளிக்கு பயணம் சென்று சாதித்த சம்பவம் நடந்து 2022 ஆம் ஆண்டோடு 61 ஆண்டுகள் ஆகிறது.
tell me why
கருத்துகள்
கருத்துரையிடுக