கிரிப்டோகரன்சியை எப்படி வாங்குவது?

 










கிரிப்டோகரன்சியை இரண்டு வழிகளில் வாங்கலாம். ஒன்று, அதனை விற்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்கலாம். அல்லது புதிய கரன்சிகளை நாமே உருவாக்குவது. 

இதில் எளிதானது பரிவர்த்தனை மூலம் வாங்குவதுதான். இந்த முறையில் இந்தியாவில் வாசிர்எக்ஸ், காயின்டிசிஎக்ஸ், காயின்ஸ்விட்ச் கியூபர், ஸெப்பிளே, பிட்பிஎன்எஸ், ஜியோட்டஸ் ஆகிய நிறுவனங்களைப் பயன்படுத்தி கரன்சிகளை வாங்கலாம். 

இதில் வணிகம் செய்ய அல்லது முதலீடு செய்ய ஏதேனும் ஒரு நிறுவனத்தில் உங்களைப் பற்றி நோ யுவர் கஸ்டமர் தகவல்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். ரூபாயைப் பயன்படுத்தி கரன்சிகளை வாங்கலாம். முதன்முதலில் கரன்சிகளை வாங்குபவர் ஐஎன்ஆர் ரூபாய்களை வாலட்டில் நிரப்பி வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் கிரிப்டோகரன்சியை எளிதாக வாங்க முடியும். 

கிரிப்டோகரன்சி வாலட்டில் ஒருவருக்கு தனித்துவமான எண்கள் வழங்கப்படும். இ வாலட், ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை முறையில் ஒருவர் வாலட்டில் பணத்தை  நிரப்பலாம். 

இந்திய அரசு கிரிப்டோவை மறைமுகமாக அங்கீகரித்து வரி போட்டாலும் கூட நேரடியான அனுமதியை வழங்கவில்லை. எனவே வங்கி மூலம் நீங்கள் பணத்தை இ வாலட்டில் நிரப்ப முடியாது. இப்போதைக்கு மொபிவிக் எனும் நிறுவனம் இ வாலட்டை நிரப்பும் வசதியை அளிக்கிறது. வாசிர் எக்ஸ், காயின்டிசிஎக்ஸ் ஆகிய நிறுவனங்களில் உள்ள இ வாலட்டை நிரப்ப முடியும். 

இந்திய பரிவர்த்தனை நிறுவனங்கள் கிரிப்டோகரன்சிகளை விற்கும் வாய்ப்பை அளிக்கின்றன. இதனை செய்வதற்கு நிறைய சிறு வங்கிகள் உள்ளன. இதற்கென தனியான கட்டமைப்பு இல்லை. எனவே, அடிக்கடி இதில் தடங்கல் ஏற்பட்டு வருகிறது.

அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளை அரசு தடை செய்யும் திட்டம் உள்ளதா?

இதுபற்றிய முழுமையான விஷயங்கள் தெரியவில்லை. அரசு அதனை அங்கீகரிக்காத போது தடை செய்யப்பட வாய்ப்புள்ளது. 

இந்தியன் எக்ஸ்பிரஸ்



கருத்துகள்