இஸ்லாமிய நாடுகளில் முகத்திரை அணியும் சட்டங்கள்!

 






சௌதி அரேபியா 

பொதுவாக இங்கு ஹிஜாப், நிகாப், பர்கா என்ற உடைகள் சாதாரணமானவை. இங்கு பெண்கள் இந்த  உடைகளில் எது தங்களுக்கு பிடித்ததோ அதை அணிகிறார்கள். 2018ஆம் ஆண்டு, சௌதி இளவரசர் முகமது பின் சல்மான், நாகரிகமாக பொறுப்புடன் உடை அணிந்தால் போதுமானது என கூறிவிட்டார். 

ஈரான்

1979ஆம் ஆண்டு நாட்டில் ஈரான் புரட்சி நடைபெற்றபிறகு, ஹிஜாப்பை பெண்கள் அணியவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. 1995ஆம் ஆண்டு ஒரு சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பொதுஇடத்தில் முகத்திற்கு மறைப்பின்றி ஒரு பெண் வந்தால், அவர்களை அறுபது நாட்கள் சிறையில் அடைக்க முடியும். 

பாகிஸ்தான் 

2019ஆம் ஆண்டு  பெஷாவர், ஹமீர்புர் ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு சுற்றறிக்கை  வந்தது. அதில், அனைத்து பெண் மாணவிகளும் அபயா எனும் உடையை அணிய வேண்டும் என கூறியிருந்தது. ஆனால் இதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றதால் சட்டம் திரும்ப பெறப்பட்டது. 

இந்தோனேஷியா

2021ஆம் ஆண்டு பள்ளிகளில் மத ரீதியான உடைக்கட்டுப்பாடு இருக்காது என கூறப்பட்டு, முந்தைய சட்டங்கள் மாற்றப்பட்டன. 

இந்தியா டுடே 

பின்டிரெஸ்ட் 




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்