அமெரிக்காவின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா!
இந்தியாவில் தற்போது 106 தேசியப் பூங்காக்கள் உள்ளன. இதன் மொத்த பரப்பு 40 ஆயிரம் சதுர கி.மீ. உலகின் முதல் தேசியப்பூங்கா எங்கு தொடங்கப்பட்டது தெரியுமா?
அமெரிக்காவில்தான் தொடங்கப்பட்டது. இதன் பெயர், யெல்லோஸ்டோன் என தலைப்பில் குறிப்பிட்டதுதான். இதன் பரப்பு, 8,104 சதுர கி.மீ.
இந்த தேசியப் பூங்கா வியோமிங் தொடங்கி மான்டனா, இடாகோ ஆகிய மாகாணங்கள் வரை நீண்டுள்ளது. இங்கு 67 வகை பாலூட்டிகள் வாழ்கின்றன. 322 இன பறவைகள். 16 வகை மீன்கள், 1,100 இயற்கை தாவரங்கள் உள்ளன. 400 வகையான வெப்பத்தை விரும்பும் நுண்ணுயிரி வகைகள் அறியப்பட்டுள்ளன.
இங்கு கால்டெரா எனும் எரிமலை உள்ளது. வெப்ப நீரூற்றுகளும் உண்டு. ஓல்ட் ஃபைத்ஃபுல் என்ற வெப்ப நீரூற்று இன்றும் இயக்கத்தில் உள்ளது. 60 அல்லது 90 நிமிடங்களுக்கு நீரை வேகமாக பீய்ச்சி அடித்து வருகிறது. 1870ஆம் ஆண்டு இதனை கண்டுபிடித்தனர். யெல்லோஸ்டோன் தேசியப் பூங்கா அமைந்துள்ள பகுதியில் முன்னர் எரிமலை இயக்கம் இருந்திருப்பதாக ஆய்வாளர்கள் தகவல் கூறுகின்றனர். புவித்தட்டுகளில் மோதல் இங்கு எரிமலை உருவாக காரணமாக இருந்திருக்கிறது. இதை ஏன் இப்போது நாம் வாசிக்கிறோம்? மார்ச் 1, 1872ஆம் ஆண்டுதான் அமெரிக்காவில் யெல்லோஸ்டோன் பூங்கா முதன்முறையாக தொடங்கிவைக்கப்பட்டது.
டெல் மீ வொய் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக