இடுகைகள்

புகைப்படக்காரர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காட்டுயிர் புகைப்படக்காரர் செய்ய வேண்டியது, செய்யக்கூடாதவை`!

படம்
          காட்டுயிர் புகைப்படக்காரர் செய்ய வேண்டியது படம் எடுக்கும் விலங்கிடமிருந்து பாதுகாப்பான தொலைவில் தள்ளியிருக்கவேண்டும் . அமைதியாக இருக்கவேண்டும் . காட்டுக்கான விதிகளை கடைபிடியுங்கள் . நேர்மையான முறையில் படம்பிடியுங்கள் . படம்பிடிக்கும் விலங்கு பற்றி முதலில் ஆராய்ச்சி செய்து படியுங்கள் . பின்னர் அதனை அதுதொடர்பான ஆராய்ச்சியாளர்களிடம் பேசி அதன் பழக்கவழக்கங்களை கவனியுங்கள் . பத்திரிகையாளர் போல நிஜத்தை மட்டுமே புகைப்படமாக பதிவு செய்யவேண்டும் . உங்கள் வருகை விலங்கை எரிச்சல் ஊட்டினால் அந்த இடத்திலிருந்து பாதுகாப்பான தொலைவுக்கு சென்றுவிடுங்கள் . புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்வதற்கு அவசரப்படாதீர்கள் . புகைப்படங்களை முழுமையான தகவல்களுடன் சேகரித்து பிறருக்கு பகிருங்கள் . செய்யக்கூடாதவை . விலங்குகளுக்கு ஆபத்தான உணவுகளை வழங்க கூடாது . உணவிட்டு அதன் தன்மையை மாற்றி படம் பிடிப்பது தவறானது . விலங்குகளிடம் நெருங்க கூடாது . கூட்டமாக உள்ள விலங்குகளின் அருகில் செல்லக்கூடாது . விலங்குகளை காயப்படுத்தக்கூடாது