இடுகைகள்

டைம் இளம் தலைவர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏமனில் நடைபெறு்ம் போர்களை ஆவணப்படுத்தும் பெண்மணி! ராத்யா அல்முடாவாக்கல்

படம்
        ராத்யா அல்முடவாக்கல்       ராத்யா அல்முடவாக்கல் கடந்த ஆண்டு நான் ஏமனில் மனித உரிமைக்காக பாடுபடும் ராத்யாவைச் சந்தித்தேன் . அப்போது அமெரிக்கா அந்நாட்டிற்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்ப பெறும் முடிவில் இருந்தது . ஏமன் நாட்டு மக்கள் பசியோடு இல்லை பசியோடு இருக்கவைக்கடடுகிறார்கள் என்று ராத்யா கூறியது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது . இயற்கை பேரிடர் இல்லாமல் மனிதர்களால் உருவான போரால் ஏமனில் மக்களின் வாழ்க்கை பாதாளத்திற்கு போய்விட்டது . நான்கு ஆண்டுகளாக சௌதி அரேபியா , அமெரிக்க அரசின் உதவியுடன் ஏமன் மீது போர் செய்து வருகிறது . இங்குள்ள ஹூதி புரட்சியாளர்களை அழிப்பதாக சொல்லி போரிடுகிறது . இதனால் அழிந்தவர்களும் , காயமுற்றவர்களும் மக்கள்தான் . சௌதியின் வருமானத்தில் பாதிக்கும் மேல் அமெரிக்காவுக்கு செல்கிறது . அமெரிக்க ஆயுத சப்பளை மூலமே முன்னுக்கு வந்துவிடும் போல . ராத்யா தனது வடானா அமைப்பு மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்துவருகிறார் . கூடவே போரால் பாதிக்கப்படும் மக்களின் இழப்பை ஆவணப்படுத்தி வருகிறார் . அவரும் அவரது சகாக்களும் உயிரை பணயம் வைத்துதான் இ

மனிதநேயமிக்க பெண்மணி! - மிச்செல் ஒபாமா

படம்
          மிச்செல் ஓபாமா         மிச்செல் ஓபாமா முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி . இவரை நீங்கள் விரும்புவது கொடுக்கப்பட்டு நான்கு வாய்ப்புகளில் ஒன்றாக இருக்கவே முடியாது . பல்லாயிரம் ஆப்ரோ அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டிருக்கிறார் . இவரை நான் முதன்முதலில் ஒபாமாவின் பதவியேற்பு விழாவின்போதுதான் பார்த்தேன் . அடக்கமான தன்மையில் பார்ப்பவர்களை ஈர்க்கும் தன்மையுடன் எளிமையாக காணப்பட்டார் . மிச்செலிடம் உரையாடுவது என்பது தலைமை ஆசிரியரிடம் உரையாடுவது போன்ற கண்டிப்புடன் இருக்காது . நமது அம்மா , அக்கா , தங்கைகளுடன் எப்படி உரையாடுவோமோ அந்த தன்மையில் உரையாடுவார் . அதிகாரத்தின் தொனி சிறிது கூட இல்லாமல் அவர் பேசுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான் . முதல் ஆப்ரோ அமெரிக்க பெண்மணி வெள்ளை மாளிகையில் இருக்கிறார் என்பது நிச்சயம் வரலாற்றில் முக்கியமானதுதான் . ரீச் ஹையர் என்ற பெயரில் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தி பள்ளி செல்லுவதற்கு அவர்களை ஊக்குவிக்கும் திட்டம் அபாரமானது . பியான்ஸ் நோலெஸ் கார்டர்  

உலகம் மொத்தமும் விரும்பும் குரல்! லேடி காகா

படம்
பாடகி லேடி காகா லேடி காகா நான் லேடி காகாவை விரும்புகிறேன் . அவரின் குரல் இந்த உலகம் மொத்தமும் விரும்பும் கவர்ச்சி , வசீகரம் , உற்சாகம் , ஊக்கத்தூண்டல் கொண்டது என நம்புகிறேன் . லேடி காகா , தனது பாடல்களை வரம்புகள் இன்றி கட்டற்றதாக உருவாக்கி வருகிறார் . தனது உள்ளத்தின் வலிமையை பாடல்களில் பிறர் ரசிக்கும்படி செய்கிறார் . இதனால் அவரது பாடல்களைக் கேட்கும் யாருக்கும் அதிலுள்ள தனித்துவத்தை புரிந்துகொள்ள முடியும் . லேடி காகா மட்டுமல்ல அவரது ரசிகர்களும் தாங்கள் நம்பும் நம்பிக்கை , மதிப்புகளுக்கு எழுந்து நின்று போராடும் தன்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் . அவர் இணையத்தில் ட்ரோல்களுக்கு உள்ளாகும் நபர்களுக்கு ஆதரவாகவும் , எல்ஜிடிபிடியினருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார் . அதனை எப்போதும் அவர் பிறருக்காக மாற்றிக்கொள்ளவில்லை . சிறந்த பாடகர் , இசையமைப்பாளர் , நடனக் கலைஞர் என அத்தனை அம்சங்களையும் கொண்டவர் . எ ஸ்டார் இஸ் பார்ன் படத்தில் தன்னை சிறந்த நடிகையாகவும ்நிரூபித்தார் . அவர் திரைக்கு முன்னால் செய்வதை விட திரைக்கும் பின்னால் செய்யும் பல்வேறு செயல்பாடுகளை அவரை தனித்

அகதிப் பெற்றோருக்கு நிம்மதி தேடி தந்தவர், புலனாய்வு செய்திகளில் சாதனை படைத்தவர்

படம்
      மரியா ரெஸ்ஸா         மிரியன் ஜி பிரிந்த குடும்பங்களை ஒன்றாக சேர்க்க பாடுபட்டவர் 2018 ஆம் ஆண்டு மெக்சிகோ - அமெரிக்கா எல்லையில் 2700 க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஆதரவற்று நின்றனர் . அரசு பெற்றோர்களையும் குழந்தைகளையும் பலவந்தமாக பிடித்து தனி முகாம்களின் அடைத்து விசாரணை செய்து வந்தது . அதில் மாட்டியவர்தன் மிரியன் . இவர் வைத்திருந்த 18 மாத குழந்தையை அமெரிக்க குடிமைத்துறை அதிகாரிகள் பிடிங்கிக்கொண்டனர் . அ்ந்த குழந்தைக்கும் தனது அம்மாவிடமிருந்து தன்னை எதற்கு பிரிக்கிறார்கள் என்று தெரியவில்லை . மிரியன் , தனது வாழ்க்கை அமெரிக்காவில் நன்றாக இருக்கும் என்று நம்பி வந்தவர் . ஒரு மாதம் 11 நாட்கள் கழித்து அவருக்கு , அவருடைய குழந்தை வழங்கப்பட்டது . அத்தோடு அவர் நின்றிருந்தால் நாம் அவரைப் பற்றி பேசவேண்டி வந்திருக்காது . அமெரிக்க அரசு குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்துவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் . சிஎன்என் டிவியிலும் இதுபற்றி பேசினார் . பல்வேறு பிரபலங்கள் இதுபற்றி தங்களது கண்டனங்களை தெரிவித்தனர் . நீதிமன்றம் அமெரிக்க அரசின் நடவடிக்கையை கண்டித்து குழந்தைகள

மக்களின் உரிமை காத்த சட்ட வல்லுநர், வல்லுறவு தகவல்களை வெளிப்படுத்தி உளவியல் பேராசிரியர்!- டெஸ்மாண்ட், கிறிஸ்டைன்

படம்
      டெஸ்மாண்ட் மீடே                 டாக்டர் கிறிஸ்டைன் பிளாசி போர்டு     டைம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் டெஸ்மாண்ட் மீடே டெஸ்மாண்ட் மீடெ , அமெரிக்காவில் 1967 ஆம் ஆண்டு ஜூலை 22 அன்று பிறந்தார் . சட்டத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளார் . அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கு வேலை அவசியமானது . அப்போதுதான் கல்விக்காக வாங்கிய கடனை முழுமையாக அடைக்க முடியும் . தங்கும் இடத்திற்கான வாடகையை தர முடியும் . இப்படி தர முடியாமல் பலர் தெருவில் வசிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் . இவர்களுக்காகத்தான் டெஸ்மாண்ட் போராடி வருகிறார் . புளோரிடாவில் வாழும் மக்களின் வாழ்வுக்காக போராடி அரசுடன் வாதிட்டு வருகிறார் . இங்கு வாழும் பலரும் மேற்சொன்னபடி கடன் வாங்கி அதனை கட்டமுடியாமல் திணறுபவர்கள் , தற்கொலை செய்துகொள்ள முயல்பவர்கள் ஆகியவர்களுக்காக உழைத்து வருகிறார் . கடனை கட்ட முடியாதவர்கள் மீது அரசியலமைப்புச் சட்டப்படி மோசடி வழக்கு பதியப்படும் . இதனை சட்டப்படி மாற்றுவதற்கு 60 சதவீத மக்களின் வாக்க்குகள் தேவை . 2018 ஆம் ஆண்டுப்படி 65 சதவீத வாக்குகள் டெஸ்மாண்டின் உழைப்புக்கு கிடைத்துள்ளன . பாதிக்கப்பட்ட மக்கள் வ

அயர்லாந்தில் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பேசும் பெண்கள்! - மூன்று பெண்கள்

படம்
              கிரைனே கிரிஃபின் , ஆர்லா ஓ கானர் , அய்ல்பி ஸ்மித் அயர்லாந்து மாறிக்கொண்டே வருகிறது . அண்மையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மணம் செய்துகொள்வதற்கான அனுமதியை அரசு அளித்துள்ளது . அதேசமயம் 35 ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள் உரிமை கோரி போராடும் கருக்கலைப்பு தடையை நீக்கும் விவகாரம் முடிவுக்கு வரவில்லை அரசின் முடிவுகளில் கத்தோலிக்க தேவாலயம் தடையிட்டு பெண்களின் உடல் மீது அரசியல் செய்து வருகிறது . கிரைனே கிரிஃபின் , ஆர்லா ஓ கானர் , அய்ல்பி ஸ்மித் ஆகியோர் 2018 ஆம் ஆண்டு மக்களை திரட்டி இச்சட்டத்திற்கு எதிராக போராடினர் . இதன் காரணமாக புதிய தலைமுறையினருக்கு இவ்விவகாரத்தின் தெளிவு கிடைத்துள்ளது . ரூத் நெக்கா

ஆப்ரோ அமெரிக்கர்களுக்கு ஆதரவாக திரைப்படங்கள் மூலம் போராடும் இயக்குநர்! - ஸ்பைக் லீ

படம்
  இயக்குநர் ஸ்பைக்லீ         ஸ்பைக்லீ இயக்குநர் ஸ்பைக்லீ பற்றி ஒற்றை வார்த்தையில் என்ன சொல்லுவது ? அவர் ஒரு டஜன் படங்களுக்கு மேல் இயக்கிவிட்டார் . அனைத்து படங்களும் வெவ்வேறு விதமான வகைகளைச் சேர்ந்தவை . எனக்கு அவர் நேரத்தை மிகச்சரியாக பயன்படுத்தி வேலை செய்வது பிடித்தமானது . 1992 ஆம் ஆண்டு மால்கம் எக்ஸ் என்ற படம் வெளியானது . படம் வெளியான சில மாதங்களுக்குப் பிறகு இனவெறி சார்ந்த தாக்குதல் ஆப்ரோ அமெரிக்கர்கள் மீது அதிகரித்தது . ஸ்பைக் லீ எடுத்த பிளாக் கிளான்ஸ்மேன் படம் , சார்லட்ஸ்வில்லே பகுதியில் நடந்த இனவெறி தாக்குதலை மையப்படுத்தியது . நியூயார்க்கில் வர்த்தக மையத்தில் ந டந்த தீவிரவாத தாக்குதலை இவரின் 25 ஹவர் என்ற படம் மையப்படுத்தி பேசியது . அப்போது அப்படி ஒரு படத்தை உருவாக்க யாருக்குமே தோன்றவில்லை என்பதுதான் உண்மை . வெள்ளையர்களுக்கு ஆப்ரோ அமெரிக்கர்கள் மீதுள்ள இனவெறி வெறுப்பிற்கு எதிராக தனது படங்களின் மூலம் ஸ்பைக்லீ போராடுகிறார் என்றே சொல்லவேண்டும் . அதன் வழியாக வரலாற்றிலும் தாக்கம் செலுத்துகிறார் ஸ்பைக் லீ . ஜோர்டன் பீலே

உலக மக்களை அன்பால் இணைத்த பாடகி டெய்லர் ஷிப்ட், டிஸ்னியை உயர்த்திய இயக்குநர், சௌதி புரட்சித்தலைவி! - டைம் 2019

படம்
  taylor swift டைம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் ! 2019 பாக் ஐகர் வால்ட் டிஸ்னி இன்றும் மிகப்பெரிய திரைப்பட , பொழுதுபோக்கு நிறுவனமாக இருக்க காரணம் நான்கு விஷயங்கள்தான் . புதிய விஷயங்கள் மீதான ஆர்வம் , நிலையான தன்மை , நம்பிக்கை , துணிச்சல் . இந்த நான்கையும் பிறர் கடைபிடிக்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை . ஆனால் பாப் ஐகர் அதனை உறுதியாக கடைபிடிக்கிறார் என்பது டிஸ்னி நிறுவனம் பெறும் அடுக்கடுக்கான வெற்றி வழியாகவே தெரிகிறது . தொழில்நுட்பங்களின் மீதான பாப்பின் ஆர்வம் பாராட்டுக்குரிய ஒன்று . அதனால்தான் இன்று டிஸ்னி ஓடிடி தளங்களில் வெற்றிமேல் வெற்றி பெற்று வருகிறது . நீண்டகால நோக்கில் இது பயன்தரும் திட்டம் . அடுத்து செஞ்சுரி பாக்ஸ் , பிக்சார் ஆகிய நிறுவனங்களை கையகப்படுத்திய செயல்பாடுகளைச் சொல்லலாம் . இதுவரை வெளியான டிஸ்னியின் இருபது படங்களில் 11 படங்கள் டிஸ்னியின் பெயரைச் சொல்லும் படங்களாக உருவாகியுள்ளன . இதற்கு காரணம் பாப் ஐகரின் தொலைநோக்கான முயற்சிகள்தான் . வால்ட் டிஸ்னியைப் போலவே சிந்தித்து நிறுவனத்தை லாபகரமாகவும் , வெற்றிகரமாகவும் நடத்திச

கடும் போராட்டத்திற்கு பிறகு மீண்டு வந்த கோல்ஃப் புலி! - டைகர் உட்ஸ்

படம்
டைகர் உட்ஸ் டைகர் உட்ஸ் கடந்த ஆண்டு டைகர் உட்ஸோடு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். இருவரும் எங்கள் குழந்தைகள் உலகை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றிப் பேசினோம். அப்போது எனது நான்கு வயது மகன் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதைக் கவனிப்பதாக கூறினேன். அதற்கு டைகர் உட்ஸ், தனது பிள்ளைகள் தான் கோல்ஃப் விளையாட்டில் வெல்வதை அவர்கள் பார்ப்பார்கள் என்று கூறினார். பதினொரு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உட்ஸ், தனது 15 வது பட்டத்தை வென்று சாதித்தார். அவரின் போராட்டம் எனக்கு பெருமையாக இருந்தது. சில ஆண்டுகளாகவே அவர் பல்வேறு அறுவைசிகிச்சைகளால் ஓய்வில் இருந்தார். பலமணி நேரங்களை உடற்பயிற்சி நிலையத்திலும், கோல்ஃப் மைதானத்திலும் செலவழித்தார். எங்கு 15 வது பட்டம் வென்றாரோ அதே மைதானத்தில் அவர் தனது அப்பாவை 22 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டித்தழுவினார். ஆனால் இன்று அவர் வெற்றி பெற்றாலும் தனது பிள்ளைகளை கட்டித்தழுவ யாரும் அனுமதிக்கவில்லை. அவர் திரும்ப விளையாடி வெற்றி பெறுவது கடினம் என விளையாட்டு விமர்சகர்கள் கூறிய நிலையில் அவரது வெற்றி மகத்தானது. போராட்டங்கள் நிறைந்தவை. வலி நிறைந்தவை. தனது வெற்றி மூலம்

அமெரிக்க சாசர் விளையாட்டை உயரத்துக்கு கொண்டுபோன வீராங்கனை! - அலெக்ஸ் மோர்கன்

படம்
அலெக்ஸ் மோர்கன்  அலெக்ஸ் மோர்கன் சாசர் விளையாட்டில் மோர்கன் காட்டும் வேகமும், துணிச்சலும், புத்திசாலித்தனமும் அவரது விளையாட்டு மீதான காதலை அனைவருக்கும் சொல்லும். அவரின் சிறப்பான ஆட்டத்திறனும், அணிவீரர்களுக்கு இடையிலான உறவும்தான் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவரது அணி கோப்பை வெல்ல முக்கியமான காரணம். 31 வயதாகும் மோர்கன், தனது அணிக்கு அளிக்கும் உழைப்பும், பிற வீரர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்போடு விளையாடும் விளையாட்டு அற்புதமானது. மோர்கன் இதே வேகத்தில் விளையாடினால் அவர் நிறைய வெற்றிகளை அணிக்கு பெற்றுத்தர வாய்ப்புள்ளது. பனிரெண்டு வயதாகு இரட்டையர்களை பெற்றவர், நிச்சயம் அடுத்த தலைமுறைக்கு முக்கியமான ஊக்கமூட்டியாக இருப்பார் என்று நிச்சயம். அமெரிக்க அணியின் வெற்றிக்கு மோர்கன் அளிக்கும் உற்சாகம் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறேன். மியா ஹாம்       முகேஷ் அம்பானி முகேஷ் அம்பானி திருபாய் அம்பானி, இந்தியாவில் தொழில் குழுமத்தை நிறுவனர். அவரின் மூத்த மகன் முகேஷ் அம்பானி அதனை தன் தந்தையின் ஆசிர்வாதத்துடன் பிரமாண்டமாக வளர்த்து செல்கிறார். பல்வேறு துறைகளிலும் தனது காலடியை பதித்துள்ளார். இ

இணையம் வழியாக மக்களை இணைத்தவர்! - மார்க் ஸூக்கர்பெர்க்

படம்
மார்க் ஸூக்கர்பெர்க் மார்க் ஸூக்கர்பெர்க் உலகையே இன்று தனது நிறுவனத்தின் மூலம் மாற்றியமைத்துள்ள மார்க்கை, நான் 2004ஆம் ஆண்டு சந்தித்தேன். அப்போது அவர் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை வாங்கியிருந்தார். ஃபேஸ்புக்கிலும் கூட ஏராளமான நல்ல அம்சங்களை சேர்த்துக்கொண்டிருந்தார். தனது நிறுவனத்தின் மூலம் மக்களை எப்போதும் இணைந்திருக்க செய்தவர் மார்க். 15 ஆண்டுகளுக்கு முன்னர் அவரை நான் சந்தித்தபோது எப்படி அடக்கமாகவும் கூச்சம் கொண்டவராகவும் இருந்தாரே அப்படியேதான் இப்போதும் இருக்கிறார். கலிஃபோர்னியாவில் அவரது நவீனமான இல்லம் அமைந்துள்ளது. அவரது வாழ்க்கை எளிமையானது. நான் சமூக வலைத்தளத்தை கடுமையாக விமர்சிப்பவன். காரணம் அது மனித உறவுகளுக்கு இடையில் உள்ள பலவீனமான புள்ளிகளைப் பயன்படுத்தி லாபத்தில் கொழிக்கின்றன. இன்று ஃபேஸ்புக் ஏராளமான தகவல் கசிவு, அரசியல் சீர்குலைவு பதிவுகள், வெறுப்பு அரசியல், போலி செய்திகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்நிறுவனம் மீது ஏராளமான வழக்குகள் உலகமெங்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் கடந்து நாகரிகமான முறையில் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த அவர் உதவுவார்

மத்திய வங்கிக்கு ஏராளமான யோசனைகளை வழங்கி மக்களைக் காத்தவர்! - ஜெரோம் போவெல்

படம்
ஜெரோம் போவெல் ஜெரோம் போவெல் பொருளாதாரத்துறையில் முக்கியமான சாதனையாளர். தனியார் துறையில் சாதனைகளை செய்துவிட்டு பொதுத்துறைக்கு வந்தவர். அமெரிக்க அரசின் மத்திய வாரி உறுப்பினராக இவர் பதவிவேற்று ஏழு ஆண்டுகள் ஆகின்றன. கருவூலத்துறையிலும் ஜெரோம் அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார். மத்திய வங்கியின் பணியாளர்கள் நடைமுறை, நிதியை சேகரித்து வைக்கும் விதிகள், செயல்பாடு ஆகியவற்றை திறம்பட அறிந்தவர் ஜெரோம். தனது திறமை காரணமாக பணமதிப்பு கொள்கையை வகுத்து மக்கள் அவையில் உறுப்பினர்களுக்கு நிலையை தெளிவாக புரியவைத்துள்ளார். பணவீக்கத்தையும் கூட எளிதாக சமாளித்து அதனை கடந்து செல்ல உதவியுள்ளார். இவரது தலைமையின் கீழ் மத்திய வங்கி சிறப்பான நிலையை எட்டிப்பிடிக்கும். இது அமெரிக்காவில் உள்ள அனைத்து மக்களுக்கும் வணிகங்களுக்கும் உதவும். ஜேனட் யெல்லன்

விளையாட்டும் சமூக அர்ப்பணிப்பும் கொண்ட மகத்தான வீரர்! - லீப்ரோன் ஜேம்ஸ்

படம்
லீப்ரோன் ஜேம்ஸ் - யூடியூப் லீப்ரோன் ஜேம்ஸ் நான் ஜேம்ஸை பத்தாண்டுகளுக்கு முன்னர் சந்தித்தேன். அப்போது நாங்கள் பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனத்தின் ஆண்டுக்கூட்டத்தை நடத்தும் முனைப்பில் இருந்தோம். அவருடன் நடந்த விளையாட்டில் நாங்கள் வென்றோம். அதற்கு முழு காரணம், அன்று எங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்ததுதான். அப்போட்டியில் அவரது தலைமைத்துவ திறன்கள் எனக்கு நன்கு தெரிந்தன. புத்திசாலித்தனமான சிந்தனைகள் கொண்ட துடிப்பான வீரர். அவரின் திறமைக்கு நிச்சயம் வேகமாக செயல்படுபவர்களாக இருந்தால் ஆபத்தான வேறு முடிவுகளை எடுத்திருப்பார்கள். ஆனால் ஜேம்ஸ், தன்னை கட்டுக்குள் கொண்டு   வந்திருந்தார். அவர் தனது செயல்பாடுகளால் பல லட்சம் இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்து   வந்தார். தன்னை பெரிய பிரபலமாகவே எப்போதும் அவர் அடையாளம் காணவில்லை. என்னை அவர் பார்க்கும்போது அவரது ஊரிலுள்ள ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளி கட்டுவது பற்றி பேசினார். அதனை நான் ஏற்றேன். ஜேம்ஸிடம் என்னை ஈர்ப்பது, போட்டி இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எப்போதும் முதலிலிருந்து தொடங்கலாம் என்ற வேட்கைதான். வாரன் பஃபட்

மக்களின் தகவல்களை பாதுகாக்க முயலும் பெண்! - வேரா ஜொரோவா

படம்
வேரா ஜொராவா - ரேடியா பிராக் வேரா ஜொரோவா 2006ஆம் ஆண்டு தவறான குற்றச்சாட்டுக்கு உள்ளாகி ஒருமாதம் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்திருந்தார் வேரா. அப்போதுதான் எப்படி சரியான தகவல்கள் இன்றி பல்லாயிரம் மக்களுக்கு அநீதி வழங்கப்படுகிறது என்பதை அறிந்தார். பின்னாளில் ஐரோப்பிய யூனியனின் நீதித்துறைக்கு தலைவர் ஆனார்..   அதனால் விதிமுறைகளை மீறிய டெக் நிறுவனங்களுக்கு அதிர்ச்சியூட்டும் பல்வேறு விதிகளைக் கொண்டுவந்தார். அதில் முக்கியமானது தகவல் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தல் விதி. இதன்மூலம் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்களின் தகவல்களை பாதுகாக்க முடியும். இதனால் டெக் நிறுவனங்கள் பயனர்களின் அனுமதி இன்றி அவர்தம் தகவல்களை வியாபார நிறுவனங்களுக்கு விற்க முடியாது. இந்த வகையில் இவரின் செயல்பாடு முக்கியமானது. நாம் அனைவரும் அதனை பின்பற்றவேண்டியதும் கூட. 2014 முதல் 2019 வரை நீதித்துறை கமிஷனராக வேரா பதவி வகித்தார்.  மார்க்கரேட் வெஸ்டாகர்

ஃபேஷன் துறையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய புரட்சிக்காரி! - ஜெனிபர் ஹைமன்

படம்
ஜெனிபர் ஹைமன் - சிஎன்பிசி ஜெனிபர் ஹைமன் 2008ஆம்ஆண்டு நவம்பர் மாதம் என்னை ஒரு இளம்பெண் சந்திக்க வந்தார். அவர் ஃபேஷன் உடைகளை இணையம் மூலம் வாடகைக்கு வழங்கலாம் என்று சொன்னார். எனக்கு அந்த ஐடியா புதுமையாக இருந்தது. சரி என்றதும் அவர் ரென்ட் ஆன் தி ரன்வே என்ற நிறுவனத்தை தொடங்கினார். நிறுவனத்தில் 20 பெண்களை இணைத்துக்கொண்டு நூறு கோடி மதிப்புள்ள நிறுவனமாக அதனை மாற்றியுள்ளார். வெறும் உடைகளை வணிகமாக பார்க்காமல் அதிக உடைகளை பயனர்களை வாங்கச்செய்யாமல் விழிப்புணர்வு செய்வது, சூழலுக்கு உகந்த உடைகளை உருவாக்குவது என அவரின் பல செயல்பாடுகள் நமக்கு பெரும் ஆச்சரியம் தருவன. அவர் இன்னும் என்ன ஆச்சரியங்களை செய்வார் என்று காண காத்திருக்கிறேன். ஜெனிபர் ஹைமன், 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். ரென்ட் தி ரன்வே என்ற ஃபேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். டைனே வோன் பர்ஸ்டன்பர்க்

சிறப்பான கதாபாத்திரங்களை உருவாக்கும் எழுத்தாளர்! - ரியான் மர்பி

படம்
ரியான் மர்பி இ ஆன்லைன்  ரியான் மர்பி என்னுடைய தொலைபேசி அலறுகிறது. எடுத்து பேசினால் மறுமுனையில் குரல் நான் ரியான் மர்பி பேசுகிறேன் என்கிறது. எனக்கு ரியான் மர்பியை அறிமுகம் கிடையாது என்று உறுதியாக சொல்லுவேன். அவர் டிவியில் பல்வேறு புதுமைகளைச் செய்தவர். டிவி நிகழ்ச்சி ஒன்றைச் சொல்லுபவர், அதுபோன்ற நிகழ்ச்சி டிவிகளில் எப்போதும் வந்தது இல்லை என்று சொன்னார். அந்த கதாபாத்திரம் எனக்கு பெரும் புகழைப் பெற்றுத்தரும் என்று அவர் கூறிக்கொண்டே சென்றார். இதுபோன்ற வாக்குறுதிகளை நான் நிறைய கேட்டுவிட்டேன் என்பதால் அதனை பெரிதுபடுத்தவில்லை. ஆனால் அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்றதும், அவர் போனில் சொன்ன அத்தனை விஷயங்களும் தப்பாமல் நடந்தன. உண்மையில் அதனை நான் நிச்சயமாக எதிர்பார்க்கவில்லைதான். ரியான் மர்பி அப்படிப்பட்டவர்தான். குழந்தை போல தனது சந்தோஷத்தை வெளிப்படுத்துவார். யாரும் யோசிக்காத முறையில் யோசித்து ஐடியாக்களை சொல்லுவார். நம்மை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தும் நகைச்சுவை உணர்வைக் கொண்டவர் அவர். இவற்றை அனைத்தையும் தாண்டிய நட்புணர்வான இதயம் கொண்டவர். தான் நினைத்த கதாபாத்திரங

நேர்மையான உண்மைகளை வெளிப்படையாக பேசும் பத்திரிகையாளர் ! கெய்ல் கிங்

படம்
டைம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள் 2019 கெய்ல் கிங் - சிபிஎஸ் நியூஸ் கெய்ல் கிங் 1954ஆம் ஆண்டு அமெரிக்காவில் மேரிலாண்டில் பிறந்த பத்திரிகையாளர் கெய்ல்கிங். தற்போது 62 ஆகும் இவர் சிபிஎஸ் டிவியின் காலை நிகழ்ச்சிகளை நடத்தியவர். ஓப்ரா வின்ப்ரேவின் இதழின் ஆசிரியரும் இவரே. துருக்கியில் அன்காரா பகுதியில் தனது சிறுவயதை கழித்தவர், பின்னாளில் குடும்பத்தோடு அமெரிக்கா வந்து சேர்ந்தார். கெய்ல், உளவியல் பட்டதாரி. பால்டிமோரில் உள்ள தனியார் டிவியில் தொகுப்பாளராக பணிக்குச்சேர்ந்தார். பின்னாளில் தொகுப்பாளர் பணியைவிட்டுவிட்டு அதே டிவியில் செய்தியாளரானார். தி கெய்ல் கிங் ஷோ என்ற நிகழ்ச்சியை டிவியில் தொடங்கினாலும் முதலில் அது வெற்றிபெறவில்லை. இதேபெயரில் ரேடியோவிலும் கூட நிகழ்ச்சியை செய்தார். இவருக்கு புகழ் தேடி தந்தது சிபிஎஸ் டிவியில் செய்த காலை நிகழ்ச்சிதான். பல்வேறு பிரபலங்களை நேர்காணல் செய்த முக்கியமான பத்திரிகையாளர், ஊடகவியலாளர் என்று இவரைக் கூறலாம். கெய்ல் கிங்கை வெறும் பத்திரிகையாளர் என்று கூறிவிடமுடியாது. அவரது நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அவரை மிகவும் நெருங்கிய நண்பராகவே உணருவார்கள். அந்தள

ஏழைகளைக் காக்க முயலும் மக்களின் பிரதிநிதி! - அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ கார்டெஸ்

படம்
அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ கார்டெஸ் - யாஹூ நியூஸ்  அலெக்ஸாண்ட்ரியா ஒக்காசியோ கார்டெஸ் 1989ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள பிராங்க்ஸ் நகரில் பிறந்தவர். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி. இவர், 14ஆவது மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டுவருகிறார். 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் பல்லாயிரம் மக்கள் வால்ஸ்ட்ரீட் பொருளாதார சிக்கலால் வாழ்க்கையை இழந்தனர். அதில் கார்டெஸின் குடும்பமும் தடுமாறி வீழ்ந்தது. அவரின் தந்தை நுரையீரலில் ஏற்பட்ட புற்றுநோயால் காலமானார். வால்ஸ்ட்ரீட்டை அமெரிக்க அரசு பின்னாளில் மீட்டு எடுத்தது. ஆனால் அதனால் வாழ்க்கையை இழந்த குடும்பங்களை அரசு கவனிக்கவே இல்லை. வாஷிங்க்டன் நகரம் எப்படி சக்தியுள்ளவர்களை பாதுகாத்து உழைக்கும் தன்மையுள்ள மக்களை கைவிடுகிறது என்பதை தெரிந்துகொண்டார் கார்டெஸ். அவர் தனக்கு எதிரான விஷயங்களுக்கு முன்னே போராளியாக தெரிந்தார். படிப்பிற்கு வாங்கிய கடன் கண்முன்னே மலையாக தெரிந்தது. தங்களிடம் அதிகாரம் இருந்தால்தான் பிழைத்திருக்க முடியும் என்று கார்டெஸ் நம்பினார். அதற்காக உழைக்கத் தொடங்கினார். மது விடுதியில் பணத்திற்காக வேலை செய்து வந