நேர்மையான உண்மைகளை வெளிப்படையாக பேசும் பத்திரிகையாளர் ! கெய்ல் கிங்
டைம் செல்வாக்கு பெற்ற தலைவர்கள்
2019
கெய்ல் கிங் - சிபிஎஸ் நியூஸ் |
கெய்ல் கிங்
1954ஆம் ஆண்டு அமெரிக்காவில்
மேரிலாண்டில் பிறந்த பத்திரிகையாளர் கெய்ல்கிங். தற்போது 62 ஆகும் இவர் சிபிஎஸ் டிவியின்
காலை நிகழ்ச்சிகளை நடத்தியவர். ஓப்ரா வின்ப்ரேவின் இதழின் ஆசிரியரும் இவரே.
துருக்கியில் அன்காரா பகுதியில்
தனது சிறுவயதை கழித்தவர், பின்னாளில் குடும்பத்தோடு அமெரிக்கா வந்து சேர்ந்தார். கெய்ல்,
உளவியல் பட்டதாரி. பால்டிமோரில் உள்ள தனியார் டிவியில் தொகுப்பாளராக பணிக்குச்சேர்ந்தார்.
பின்னாளில் தொகுப்பாளர் பணியைவிட்டுவிட்டு அதே டிவியில் செய்தியாளரானார்.
தி கெய்ல் கிங் ஷோ என்ற
நிகழ்ச்சியை டிவியில் தொடங்கினாலும் முதலில் அது வெற்றிபெறவில்லை. இதேபெயரில் ரேடியோவிலும்
கூட நிகழ்ச்சியை செய்தார். இவருக்கு புகழ் தேடி தந்தது சிபிஎஸ் டிவியில் செய்த காலை
நிகழ்ச்சிதான். பல்வேறு பிரபலங்களை நேர்காணல் செய்த முக்கியமான பத்திரிகையாளர், ஊடகவியலாளர்
என்று இவரைக் கூறலாம்.
கெய்ல் கிங்கை வெறும் பத்திரிகையாளர்
என்று கூறிவிடமுடியாது. அவரது நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அவரை மிகவும் நெருங்கிய
நண்பராகவே உணருவார்கள். அந்தளவு தனது பேச்சு மூலம் அவர்களை நெருக்கமாக உணரச்செய்யும்
திறனை கெய்ல் கிங் கொண்டிருந்தார். இவர் தனது தொழில் வாழ்க்கை முழுவதிலும் உண்மையைக்
கண்டறிவதில் ஆர்வமாக இருந்தார்.
அவா துவர்னாய்
கருத்துகள்
கருத்துரையிடுக