சிம்பன்சிகளைப் பற்றிய ஆய்வுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்! - ஜேன் குட்டால்






Jane Goodall Keeps Going, With a Lot of Hope (and a Bit of Whiskey ...






ஜேன் குட்டால்

ஜேன், சிம்பன்சிகள் பற்றிய ஆராய்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்து பணி செய்தவர். நான் அவரது பணியை பெரிதும் மதிக்கிறேன். அவரை சந்திக்கும் முன்னரே நான் அவர் எழுதிய நூல்கள், கட்டுரைகளை படித்திருந்தேன். அதன்பிறகு, அவரை சில ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரைச் சந்தித்து பேசியவுடனே எனக்கு தெரிந்தது உலகிலேயே பெரும் தாக்கம் கொண்ட தலைவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று. தான்சானியா காடுகளில் சிம்பன்சிகளை ஆராய ஜேன் சென்றபோது அவரின் வயது 26. அதன்பிறகு நடத்தை உளவியல் துறையில் நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்றன. இன்று தன்னுடைய 85 வயதிலும் கூட சூழல் பாதுகாப்பு பற்றி இடையறாது விழிப்புணர்வு செய்துவருகிறார். உலகிலுள்ள ஒவ்வொரு உயிரையும் பாதுகாக்கவேண்டி நேர்மறையாக இவர் தெரிவிக்கும் செய்திகள் ஆச்சரியமூட்டுகின்றன. இவரின் சூழல் பற்றிய பேச்சைக் கேட்டால் அவரின் திட்டங்களுக்கு உடன்படாமல் இருக்கமுடியாது. எதிரிலுள்ளவர்கள் என்ன மனநிலையில் இருந்தாலும் அவர்களை தனக்கு இணக்கமான தன்மைக்கு கொண்டுவரும் உண்மை அவரது பேச்சில் உள்ளது.

இன்று அவர் எனக்கு மிகச்சிறந்த நண்பராக திகழ்கிறார். நாங்கள் பலரும் ஒன்றாக சேர்ந்த உலகை மாற்றும் விஷயங்களை செய்ய முயன்று வருகிறோம்.

லியனார்டோ டிகாப்ரியோ


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்