சூழலைக் காக்க உலக நாடுகளை தூண்டிய சிறுமி! - கிரேட்டா துன்பெர்க்
பொல்சனாரோ -பத்திரிகை |
ஜெய்ர் பொல்சனாரோ
பிரேசிலைச் சேர்ந்த வலதுசாரி
கருத்தியலைக் கொண்ட தலைவர். தனது முதல் மூன்று மாதங்களில் ஊழல்களை ஒழிப்பதற்கான முயற்சிகளை
செய்துள்ளார். வாங்கியுள்ள கடன்களை அடைப்பதற்காக பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.
முன்னாள் ராணுவ வீரரான இவர் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றுக்கு எதிரான கருத்துகளைக்
கொண்டவர். எப்போதும் மக்களின் கருத்துக்கு எதிரான கருத்துகளை பேசும் குழப்பமான குணங்களைக்
கொண்டவர்.
பிரேசில் ஜனநாயக நாடாக இதுவரை
இருந்துள்ளது. இனிமேலும் அப்படி இருக்கமுடியுமா என்பதை பொல்சனாரோ தீர்மானிப்பார் என்றே
தெரிகிறது. இருந்தாலும் அவரை மக்களே தேர்ந்தெடுத்து இருப்பதால், இச்சோதனையின் விளைவை
மக்கள்தான் ஏற்கவேண்டும்.
இயான் பிரம்மர்
கிரேட்டா துன்பெர்க் - தினமலர் |
கிரேட்டா துன்பெர்க்
ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா
துன்பெர்க், பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு சூழலுக்கு எதிராக போராடி பிரபலமானார்.
இப்படியெல்லாம் போராடலாம் என்று உலகு முழுக்க சூழல் போராட்டங்கள் நடைபெற காரணமாக இருந்தார்.
அரசின் விதிகளை மாற்றாமல் நாம் சூழல் பாதிப்பை குறைக்கமுடியாது என்று தில்லாக போராடிய
சிறுமி. பலருக்கும் எதிர்காலத்தில் நாம் எதைக் குறித்து கவனமாக இருக்கவேண்டும் என்பதை
உணர்த்தினார். இதன்விளைவாக உலகமெங்கும் சூழல் தொடர்பான விதிகள் புதிதாக இயற்றப்பட்டன.
கரிம எரிபொருட்களிலிருந்து அரசுகள் மாறி, சூரிய சக்தி சார்ந்த வளத்தை பயன்படுத்துவதை
ஊக்கப்படுத்தி வேகமூட்டுவதாக கிரேட்டாவின் போராட்டம் அமைந்திருந்தது. இப்போராட்டங்களையும்
இவர் அகிம்சை முறையில் நடத்தியது முக்கியமானது.
எம்மா கான்சாலஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக