ஆசிய மறுகாலனித்துவ தலைவன் ஷி ஜிங்பிங்! - டைம் 2019 செல்வாக்கு பெற்ற தலைவர்கள்
ஷி ஜிங்பிங்
சீனாவின் அதிபர். இப்படி
கூட சொல்லவேண்டியதில்லை. நிலம், நீர், வானம் என அனைத்திலும் ஆதிக்கம் செய்யும் வேகத்தைக்
கொண்டுள்ள தலைவர். அனைத்து நாடுகளும் சீனாவை கொரோனா வைரஸை உருவாக்கிய நாடு என்று கைகாட்டிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலையேபடாமல், இந்தியாவின் எல்லையில் குடைச்சல் கொடுப்பது,
பூடானை என்னுடன் இணைந்துவிடுவது என மிரட்டுவது, ஹாங்காங்கில் தேசியபாதுகாப்பு சட்டம்
இயற்றி அதனை தன்னுடைய நாடு என்று சொல்லுவது என பிற நாடுகளை எப்போதும் பரபரப்பாக வைத்திருப்பவர்
ஜிங்பிங். இவர் பேசுவதை விட பிறர் இவரைப் பற்றி பேசுவதுதான் அதிகம்.
சீனா, முன்னால் இருந்த தலைவர்களை
விட வேறுபட்ட தலைவருடன் நாளும் வளர்ந்து வருகிறது. மென்மையாகவும், வலிமையாகவும் உள்ள
ஜிங்பிங்கின் பல்வேறு நடவடிக்கைகளை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. தனது பதவிக்காலத்தை
அதிகாரத்தையும் ஆதரவாளர்களைப் பயன்படுத்தியும் அதிகரித்துக்கொண்டவர் ஒற்றைக்கட்சி மூலம்
சீனத்தின் மன்னராகவே இருக்கிறார்.
பெல்ட் அண்ட் ரோடு திட்டம்
மூலம் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் பிற நாடுகள் என அனைவருக்கும் வளர்ச்சி
திட்டங்களுக்கு கடன்களை வழங்கி மறுகாலனியாதிக்க நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது சீனா.
இன்னும் சில ஆண்டுகளில் இதன் விளைவுகளை நாம் கேள்விப்படுவோம். இதை சரி, தவறு என்று
சொல்ல ஏதுமில்லை. மேற்கத்திய நாடுகள் முந்தைய நூற்றாண்டுகளில் செய்த அதேவிஷயம்தான்.
இப்போது சீனா ஆசிய நாடுகளில் முக்கியமான பொருளாதார சக்தியாக உயர்ந்து வருகிறது. இதில்
இந்தியா இப்போதைக்கு தலையிடவில்லை என்றாலும் சீனா அதனை அமைதியாக இருக்கவிடும் வாய்ப்பு
குறைவு.
கருத்துகள்
கருத்துரையிடுக