தன் பால்ய நண்பர்களைக் கொன்றவனை 17 ஆண்டுகள் கழித்து பழிதீர்க்கும் நாயகன்! - அந்தகாடு
ராஜ்தருண் ஸ்பெஷல்
அந்தகாடு
இயக்கம் வெள்ளிகொண்டா ஸ்ரீனிவாஸ்
ஒளிப்பதிவு பி.ராஜசேகர்
இசை சேகர் சந்திரா
சாரதா கண் பார்வையற்றோர்
பள்ளியில் வளரும் ஐந்துபேரின் நட்பை பேசுகிற படம். இதில் மூவருக்கு மட்டும் கண்பார்வை
கிடைக்கிறது. பார்வை கிடைத்து, தாங்கள் முதல்முறை நண்பனிம் முகத்தை பார்க்கவேண்டும்
என்று வரும்போது நடக்கும் மோசமான சம்பவம் அவர்களது வாழ்க்கையை அழிக்கிறது. நண்பர்களின்
உயிரை பலிவாங்கிய ரவுடியை அழிக்கும் அவர்களின்
நண்பனின் கதைதான் இது.
படம் முதலில் பிக் எஃப்எம்மில்
வேலை பார்க்கும் ரேடியோஜாக்கி கௌதம், பார்வைத்திறன் இல்லாதவர். இவர் தனக்கான காதலியைத்
தேடி அலைகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு டாக்டர் நேத்ரா காரில் லிஃப்ட்
கொடுக்கிறார். அவரை தான் கண்பார்வை இல்லாதவன் என்ற உண்மையை சொல்லாமல் காதலிக்கிறார்.
இந்த உண்மை தெரியவரும்போது அவர் காதல் பிழைத்ததா? ஏன் இந்த உண்மையை மறைத்தார் என்பதுதான்
கதை. இந்த காதல் டேக் ஆஃப் ஆனபிறகுதான், அவருக்கு கண்பார்வை கிடைக்கிறது. அதேநேரம்
அவருடைய கண்ணுக்கு ஆன்மா ஒன்று தெரிகிறது. அந்த ஆன்மா இரு கொலைகளை செய்யச்சொல்கிறது.
இதுபற்றிய உண்மையை அறிந்துகொண்டால் படம் முடிந்துவிடும்.
Add caption |
ஆஹா
ராஜ் தருண்தான் இந்த படத்தைப்
பார்க்கவைப்பதற்கான முக்கியமான ஆள். கண்பார்வை இல்லாமல் இருந்தாலும், தனது புத்தியின்
மூலம் கமிஷனரின் பெண்ணுக்கு கட்டம் கட்டி காதலிப்பது, ஆத்மா என்று சொல்லி அனைவரையும்
நம்பிக்கை கொள்ள வைப்பது, இறுதியில் பழிவாங்குவது என அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.
ஹெபா படேல் அழகாக இருக்கிறார். கண்களை வழங்கி காதலனை தகுதிப்படுத்தியவர், அவருக்கு
மனநல பிரச்னை என்றதும் அமைதியாக ஒதுங்கிவிடுகிறார். சத்யாவின் காமெடி நன்றாக இருக்கிறது.
அடுத்த பாகத்திற்கான விஷயங்களையும் இந்தப் படத்தில் வைத்துவிட்டார்கள். ராஜேந்திர பிரசாத்திற்கு சின்ன கதாபாத்திரம் என்றாலும் நன்றாக நடித்திருக்கிறார்.
ஐயையோ
வில்லனுக்கு பில்ட்அப் கொடுத்தாலும்
அப்படியொன்றும் நமக்கு பயம் ஏற்படவில்லை. பாண்டியன் மெஸ் புரோட்டா மாஸ்டர் போல இருக்கிறார்.
காமெடியை அதிகரிக்கும் வேகத்தில் அனைத்துமே காமெடியாகிவிடுவது எப்படி ஏற்பது?
கண்பார்வையற்றவனின் மைண்ட்கேம்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக