முதல்வரைக் கொன்றது யார் என மர்மத்தை கண்டுபிடிக்கும் சிபிஐ அதிகாரியைச் சுற்றிய சதிவளையம்! -லயன்
லயன்
இயக்கம் சத்யதேவா
ஒளிப்பதிவு வெங்கடபிரசாத்
இசை மணிசர்மா
மும்பை பிணவறையில் திடீரென
ஒரு பிணம் எழுந்து உட்கார்கிறது. காவலர் பயத்தில் அலறியபடி ஓட, மருத்துவர்கள் அந்த
மனிதரை சோதிக்கிறார்கள். அவர்தான் பாலைய்யா என்று நாங்கள் சொல்லவேண்டுமா என்ன?
அவரின் பெற்றோர், வேலைபார்க்கும்
நிறுவனம், அவரது மனைவி என்று கூறப்படும் ஏதும் அவருக்கு நினைவில் இல்லை. நினைவில் உள்ள
காட்சிகள் அனைத்தும் ஹைதரபாத் என்றே சொல்லுகின்றன. ஆனால் மருத்துவர்கள், பெற்றோர்,
அவரது மனைவி எல்லோரும் அவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் என்று சொல்லுகின்றனர்.
யாருக்கும் சொல்லாமல் மருத்துவமனையில்
இருந்து எஸ்கேப்பாகி ஹைதரபாத் வருகிறார் காட்ஸே. மும்பையில் அவர் பெயர் அதுதான். ஆனால்
அவருக்கு தன்னுடைய பெயர் நினைவில் இருக்கிறது, ஆம் போஸ்தான் அவரின் பெயர். இங்கு வந்து
வீட்டைத் தேடினால் அங்கு வேறு யாரோ இருக்கிறார்கள். காதலியைப் பார்த்து மகாலஷ்மி எப்படியிருக்கிறே
என்று கேட்டால், யார் நீங்க என்கிறார் அவர். அவரின் பெற்றோர் என நம்புவர்களைப் பார்த்தாலும்
அவர்கள் இவரை மகனாக ஏற்கவில்லை. அடித்து துரத்துகிறார்கள். இறுதியாக மருத்துவமனையில்
டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்கிறார்கள். ம்ஹூம் அதிலும் அவர் மும்பை பெற்றோருக்கு சொந்தமானவர்
என்றே அறிக்கை வருகிறது. உண்மையில் காட்ஸே, அல்லது போஸ் என்ற இருபெயரில் எது உண்மை?
எது பொய்? என பாலைய்யா என்னைத் தெரியுமா என்று நம்மை கேள்விகேட்டு தன்னைத்தானே அறிவதுதான்
படம்.
ஆஹா
பாலைய்யாவைத்தானே சொல்லியாகவேண்டும்.
இவருக்கு செம டஃப் கொடுத்து நடித்துவிட்டு பின்னர், நாயகனை புகழ்ந்துவிட்டு அவர் கையால்
மோட்சயோகம் பெறுகிறார் பிரகாஷ்ராஜ். பட்டையைக் கிளப்பும் சண்டைக் காட்சி, போஸாக தோன்றும்
காட்சியில் எல்லாம் வெடிக்கும் பன்ச்சுகள், தன் அடையாளம் தெரிந்தபிறகு தங்கையை மானபங்கம்
செய்யமுயன்றவனை அடித்தே கொல்லுவது என ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார் பாலைய்யா.
இறுதிக்காட்சியில் உள்ள நான் சாகப்போறேன் என்று பாலைய்யா கெத்தாக செய்யும் சாகச காட்சிகளை
காணத்தவறாதீர்கள். இதய பலமுள்ளவர்கள் மட்டும் வீடியோ பாடல்களை பாருங்கள்.
ஐயையோ
ஜெய் பாலைய்யா என்று சொல்லிவிட்டாலே
படத்தின் மைனஸ்கள் எல்லாம் நம்மைப் பார்த்தே போடா ஃபூல், ப்ளடி ஃபூல் என இருமுறை சொல்லி
பிளஸ் ஆகிவிடும். முதல் அமைச்சரை ஒருவர் சாதாரணமாக எதிர்த்துவிட்டு ஒரு ஊரில் வாழமுடியுமா?
அவருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்திற்கே டஜன் கணக்கில் பிரச்னைகளை தர முடியும். ஆனால்
பாலைய்யா விஷயத்தில் பிரகாஷ்ராஜ், நிதானமாக அவர் என்ன செய்கிறார் என்பதை ஸ்டார் டிவியில்
ஐபிஎல் பார்ப்பது போல பார்த்துக்கொண்டே இருக்கிறார்.
தனிச்சிங்கம்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக