காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு சாதனை செய்த தலைவர்கள்- சாதனை தலைவர்கள்





comment - Congress on road to self destruction
சிதைந்து வரும் காங்கிரஸ் கட்சி - சதீஸ் ஆச்சார்யா






காங்கிரசிலிருந்து குதிரைபேரம் மூலம் வெளியே செல்பவர்கள் தவிர்த்து சிலர் தானாகவே மனம் கசந்து, விரக்தியுற்று வெளியேறி தனிக்கட்சி தொடங்கியுள்ளனர். அதில் சிலர் மாநிலத்தின் ஆட்சியையே பிடிக்குமளவு முன்னேறியுள்ளனர். பழம்பெரும் கட்சியான காங்கிரசில் இன்றுவரை வயதானவர்களுக்கே பதவி தரப்படுகிறது என புகார்கள் எழுந்து வருகின்றன. ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் ஆகியோர் இதில் அண்மைய வரவு. காங்கிரசில் கட்சியில் இருந்து விலகிய அரசியல்வாதிகளில் சிலரைப் பார்ப்போம்.

சரண்சிங் 1967

உ.பி

1959ஆம் ஆண்டு நேருவின் கொள்கைகளுக்கு எதிராக கொடி பிடித்தார். இதனால் கட்சியில் இருந்து ஒரம்கட்டப்பட்டு விலக்கப்பட்டார். பின்னர், அடுத்தவர்கள் கட்சி எதற்கு என்று யோசித்தார். பிறகு நல்ல ஒரு சுபதினத்தில் பாரதீய கிராந்தி தள் என்ற கட்சியைத் தொடங்கினார்.

1977ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் அரசில் துணை பிரதமராக பதவி வகித்தார். பின்னர் 1979ஆம் ஆண்டில் 23 நாட்கள் பிரதமர் பதவியில் நீடித்து சாதனை செய்தார்.

மொரார்ஜி தேசாய் 1969

மகாராஷ்டிரம்

இந்திராகாந்தியின் அரசில் துணை பிரதமராக இருந்தார். நிதி அமைச்சர் பொறுப்பையும் வகித்தார். ஆனால் இந்திராவில் பல்வேறு கொள்கைகளில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார். அதனை வெளிப்படையாக அவரிடம் பேச, கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். பின்னாளில் காங்கிரஸ் அமைப்பில் இணைந்தார்.

1977ஆம் ஆண்டு இந்திராவின் காங்கிரஸ் கட்சியை தேர்தலில் மண்ணைக் கவ்வச்செய்து, இந்தியாவின் பிரதர் ஆனார்.

விஸ்வநாத் பிரதாப் சிங் 1988

உ.பி.

ராஜீவ்காந்தி அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக பணியாற்றியவர். பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவருக்கு போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால் பிரதமருக்கும், விஸ்வநாத்திற்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் பதவியை விட்டு விலக்கப்பட்டார்.

பல்வேறு கட்சிகளை இணைத்து ஜனதா தள் என்ற கட்சியைத் தொடங்கினார்.

1989ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார். தேசிய முன்னணி மூலம் இந்த வாய்ப்பு விஸ்வநாத்திற்கு கிடைத்தது.

மம்தா பானர்ஜி 1997

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஊக்கமான தலைவி. சிறப்பாகத்தான் செயல்பட்டார். அதனால் இம்மாநிலத்திலுள்ளவர்கள் செய்த அரசியலால் மெல்ல கட்டம் கட்டி ஓரங்கட்டப்பட்டார்.

அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார்.

2011 முதல் கம்யூனிஸ்ட் கட்சியை ஒதுக்கி இன்றுவரை மேற்கு வங்காள முதல்வராக மம்தா பானர்ஜி தீதிதான் இங்கு கோலோச்சி வருகிறார். இந்த ஆட்சி மாற்றத்திற்கு கம்யூனிஸ்ட் தலைவர்களின் மோசமான ஆட்சி முக்கியமான காரணம்.

சரத் பவார் 1999

மகாராஷ்டிரம்

சரத் பவார், சோனியா காந்தியின் பூர்வீகம் பற்றி கேள்வி கேட்டார். உடனே கட்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார்.

பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர் ஆகியோருடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். இதன்மூலம் மகாராஷ்டிரத்தின் முதல்வராகவும் வென்றார். 2004-14 வரையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு கொடுத்தார். இப்போது மகாராஷ்டிர அரசை நடத்த சிவசேனை கட்சிக்கு ஆதரவு வழங்கி செயல்பட்டு வருகிறார்.

ஜெகன்மோகன் ரெட்டி 2010

ஆந்திரம்

இவரது தந்தை ராஜசேகர ரெட்டி காங்கிரஸின் முக்கியமான தலைவர். 2009ஆம் ஆண்டு அவரது இறப்பிற்கு பிறகு ஜெகன் தன்னை காங்கிரஸ் ஆந்திரத்தில் முதல்வராக்கும் என்று நம்பினார். சோனியாகாந்தி அதனை மறுத்தார்.

ஜெகன், தமிழ்நாட்டின் அருண்மொழி போல பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்தார். அனைவருக்கும் பரிச்சயமானார். மக்களின் உற்சாக வரவேற்பைக் கண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார்.

2010இல் ஆந்திரத்தின் தேர்தலில் தெலுங்குதேசம், காங்கிரசை தோற்கடித்து மகத்தான வெற்றியைப் பெற்றார். முதல்வராகி பல்வேறு சீர்திருத்தங்கள் அங்கு செய்து வருகிறார்.

தற்போதைக்கு பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. பாஜக, இந்த மாநிலங்களை குறிவைத்து இயங்கும்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு மாறிவிட வாய்ப்பு அதிகம் உள்ளது. 1999ஆம் ஆண்டு காங்கிரஸ் வாக்கு சதவீதம் 28.3 சதவீதமாக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 2019படி 19.5 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்தியா டுடே

கௌசிக் தேகா


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்