நேர்மையான வழியில் நடக்க முயலும் இளைஞர்களும், மாபியா கும்பலும்! - அய்தே

Amazon.com: Watch Aithe | Prime Video













அய்தே 2003

இயக்கம்  சந்திரசேகர் யெலட்டி 


ஒளிப்பதிவு கல்யாணி மாலிக்

இசை  கே.கே. செந்தில் குமார்



நான்கு இளைஞர்கள். பள்ளி முதல் கல்லூரி வரை படித்து நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பிரச்னை, பணம்தான். ஒருவர் போலீஸ் வேலைக்கு தேர்வாகியும் பணம் கொடுத்தால்தான் வேலை என்கிறார்கள். அவர் அந்த வேலையை வைத்துதான் தங்கையை கல்யாணம் செய்துகொடுக்கவேண்டும். இன்னொருவருக்கு வீட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய நெருக்கடி. இன்னொருவருக்கு, சூதாட்டத்தில் தோற்ற பணத்தை கொடுக்கவேண்டும். 

இந்த நேரத்தில் நண்பர்களில் ஒருவர் போதைப் பொருட்களை கடத்துவோம். பணம் சம்பாதித்து செட்டிலாவோம் என்கிறான். ஆனால் போலீஸ் நண்பன், அது தவறு என்கிறான். அப்போது அவர்களுக்கு  ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. சர்வதேச தீவிரவாதிக்கு உதவும் வாய்ப்பு வருகிறது. அதில் பணம் கிடைக்கும் என செல்கிறார்கள். ஆனால் திட்டத்திற்குள் உள் திட்டம் போட்டு, அந்த தீவிரவாதியைப் பிடித்து வைத்து அரசிடம் பேசி அவருக்கு கொடுப்பதாக சொன்ன பணயத்தொகையை கேட்கிறார்கள். அரசு அவர்களுக்கு தொகையை கொடுத்ததா, தீவிரவாதியை எப்படி ஒப்படைத்தார்கள் என்பதுதான் கதை.

ஆஹா 

நடித்த எல்லோருமே நன்றாக அவரவர் பாத்திரங்களை யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். நட்பு மட்டுமே உள்ள கதை. சிந்து துலானி இருந்தாலும் காதல் அத்தியாயங்கள் கிடையாது. நேர்மையான வழியில் சென்றால் நல்லது நடக்கும் என்பதுதான் கதையின் முக்கியமான செய்தி. அதனை முடிந்தவரை ஆக்கப்பூர்வமான முறையில் காட்சி படுத்தியிருக்கிறார் சந்திரசேகர் யெலட்டி. இவர் இயக்கி முதல் படம் இது. இதிலேயே மாநில  அரசின் சிறந்த படத்திற்கான விருது வென்றிருக்கிறார். 

ஐயையோ

பட்ஜெட் பிரச்னைகள் படத்தில் தெரிவது போன்ற சில இடங்கள் உண்டு. காட்டில் தீவிரவாதியை பிடித்து வைத்துள்ள காட்சி நீண்டுகொண்டே போவது போல தோன்றுகிறது. 

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு 

கோமாளிமேடை டீம் 

கருத்துகள்