இலங்கையில் தொலைந்த அம்மாவை மகன் தேடி கண்டுபிடித்த கதை! - சத்ரபதி 2005
சிறந்த துணைநடிகையாக பானுபிரியா, சிறந்த இசைக்காக கீரவாணி ஆகியோருக்கு நந்தி விருது கிடைத்த படம். |
சத்ரபதி
இயக்கம் ராஜமௌலி
ஒளிப்பதிவு கே.கே.செந்தில்குமார்
இசை கீரவாணி
இலங்கையிலிருந்து வரும்
மக்களின் அவல வாழ்க்கையும், துறைமுகத்தில் வாழும் அவர்களின் வாழ்க்கையைக் காப்பாற்ற
துடித்தெழும் தலைவனின் கதை.
8 கோடி பட்ஜெட்டில் 22 கோடி லாபம் பார்த்த படம்! |
சத்ரபதி, பிரபாஸூக்கு வாழ்கைகயில்
முக்கியமான படம். வெற்றிப்படமும் கூட. உண்மையில் அவரின் முதல் காட்சி அவரை கயிற்றில்
கட்டி தூக்கியிருப்பார்கள். பிற நடிகர்களுக்கு எடுபடாமல் போயிருக்கும் காட்சிதான்.
ஆனால் பிரபாஸூக்கு சிறப்பாக இருக்கிறது. படத்தின் முக்கியமான நூல், அம்மாவை பிரியும்
சிவாஜி எப்படி தன் அம்மாவைக் கண்டுபிடித்து சேர்கிறான் என்பதுதான். அப்படி கண்டுபிடிக்க
அவனது தம்பியே தடையாக இருக்கிறான். எப்படி இந்த தடைகளை தகர்த்து, எதிரிகளின் கொலைவெறித்தாக்குதலையும்
சமாளித்து தம்பியையும், அம்மாவையும் காப்பாற்றுகிறான் சிவாஜி என்பதுதான் இறுதிக்காட்சி
ஆஹா
படம் முழுக்க பிரபாஸ், அம்மாவைக்
காணாத தவிப்பிலேயே இருக்கிறார். பாடல்களின் மட்டும்தான் ரிலாக்ஸாக இருக்கிறார். அந்த
சீரியஸ்னெஸ் கூட சண்டையில் பீதியை நமக்கு கடத்துகிறது. பானுபிரியா, பிரபாஸ், அஜய் பாத்திரங்கள்
நன்றாக உள்ளன.
ஐயையோ
வேணு மாதவ்வின் காமெடி படத்தில்
ஒட்டவில்லை. ஆர்த்தி அகர்வாலின் ஒரு பாடல் எதற்கு வருகிறது என்றே தெரியாமல் வருகிறது.
ஷிரியாவின் காதல் காட்சிகளும் பொருந்தவில்லை.
மக்களின் நலனுக்காக போராடுபவனே சத்ரபதி! |
உரிமைக்குரல்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக