காதலை வெறுத்தொதுக்க சிறுவயது காரணம் போதும்!- காதலியின் பிடிவாதம் - பியார் மெய்ன் படிப்போயனே
பியார் மெய்ன் படிப்போயனே
இயக்கம் ரவி சாவலி
ஒளிப்பதிவு
இசை அனுப் ரூபன்ஸ்
சிறுவயதில் தோழியின்(யுக்தா)
வீடியோகேமராவைத் திருடும் நண்பனின்(சந்திரா எனும் சின்னா) பின்னாளைய வாழ்க்கை பிரச்னைதான்
கதை.
கேமராவைத் திருடினால் என்ன
ஆகப்போகிறது என்று நினைப்பீர்கள். சிறுவயது தோழியே பின்னாளில் ஆசைக்காதலியானால் என்னவாகும்?
அதுதான் சின்னாவுக்கும் நடக்கிறது. இருவரும் ஒரே காலேஜில் படிக்கிறார்கள். அங்குதான்
இருவரும் அறிமுகமாகிறார்கள். இருவரும் சிறுவயது நண்பர்கள் என்பதை சின்னா பின்னாளில்தான்
கண்டுபிடிக்கிறான். அதேசமயம் அவனது வீட்டில் கூப்பிடும் சிறுவயது பெயரான சின்னா என்பதை
யுக்தா எந்தளவு வெறுக்கிறாள் என்பதையும் கண்டுகொள்கிறான். கேமராவை திருடிய சின்னாவை
தீவிரமாக வெறுக்கிறார். சந்திரா தான்தான் சின்னா என்பதை யுக்தாவிடம் சொன்னானா, இல்லையா
என்பதுதான் கதை.
ஆஹா
அனுப் ரூபனின் இசையில் பாடல்கள்
படத்தின் நிறைய குறைகளை மறைக்கிறது. அம்மாவில் தாலாட்டுப்பாடல் நன்றாக இருக்கிறது.
ஆதி சந்திரா கதாபாத்திரத்தில் உற்சாகமாக நடித்திருக்கிறார். யுக்தாவாக ஷான்வி சிறுவயது
அம்மாவின் நினைவுகளை மறக்கமுடியாமல் சிரமப்படுகிறார். யுக்தாவை ஆல்பத்தில் பாடவைக்கும்
முதல் பாடல் நன்றாக இருக்கிறது. இசை சார்ந்த படம் என்பதால் பாடல்கள் நன்றாக வந்திருக்கின்றன.
சந்திராவின் குடும்ப காட்சிகளின்
காமெடி நன்றாக இருக்கிறது.
ஐயையோ
வெண்ணிலா கிஷோர் மூலம் ஓரினச்சேர்க்கையாளர்களை
இப்படி கிண்டல் செய்யவேண்டுமா இயக்குநர் சார்? அதை காமெடி என்று கொள்வதா? மட்டமான சிந்தனை
என்று கொள்வதா?
இசையால் மயங்கும் மனம்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக