தொழில்திட்டங்களை தாமதிக்க கூடாது! - சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர்







Nature, Forest, Sun, Moss, Rays, Green, Sunbeam, Tree








பிரகாஷ் ஜாவேத்கர்

சுற்றுச்சூழல்துறை அமைச்சர்

பொதுமுடக்க காலத்தில் சுற்றுச்சூழல் துறை நிறைய திட்டங்களுக்கு எதற்கு அனுமதி கொடுக்கிறது. இந்த காலகட்டத்தில் அதிகாரிகள் கூட அந்த இடங்களை பார்வையிட முடியாதே? பாதிப்பு பற்றி மக்கள் ஆதாரங்களை கூட திரட்டி அனுப்ப முடியாது என்பதை நீங்கள் யோசிக்கவில்லையா?

நாங்கள் இதுதொடர்பான வல்லுநர் கமிட்டி அடிப்படையில்தான் செயல்பட்டு வருகிறோம். இத்திட்டங்களுக்கான அனுமதி, மக்களின் கருத்துகளுக்குப் பிறகே வழங்கப்படுகிறது. இதற்காக 60 நாட்கள் காலம் அளிக்கப்பட்டது. நாங்கள் மாநில அரசின் வனத்துறை அனுமதி பெற்றுதான் செயல்படுகிறோம். மேலும் அனைத்து இடங்களுக்கும் தேவையின்றி அதிகாரிகள் சென்று பார்வையிடுவது தேவையில்லை. மக்கள் திட்டங்கள் பற்றி கருத்துகளை தெரிவிக்க பொதுமுடக்கம் தடையாக உள்ளது என்பது தவறான கருத்து.

2020 சுற்றுச்சூழல் விதிகள் மாசுபாடு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபற்றிய மக்கள் கருத்தைக் கேட்கும் காலகட்டத்தையும் கூட நீங்கள் குறைத்துள்ளதாக கூறப்படுகிறதே?

இந்த சட்ட வரைவு இன்னும் சட்டமாகவில்லை. நாங்கள் இன்னும் அதனைப் பற்றிய கருத்துகளை பெற்றுக்கொண்டுதான் உள்ளோம். இதுபற்றிய விவரங்களை மக்கள் பார்க்கும்படியான வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறோம். இதற்கான கமிட்டி அமைத்து அதன்படிதான் செயல்படுகிறோம். சட்டத்தின் ஒரு விதி கூட மீறப்படவில்லை என்று நான் உறுதியாக கூறுவேன்.

பொதுமுடக்கம் முடிந்தபிறகு தொழிற்சாலைகளுக்கான அனுமதி கொடுக்கப்படலாமே?

அரசு திட்டங்களுக்கான நேரத்தை முடிந்தளவு குறைத்து வேகமாக செயல்பட்டு வருகிறது. கோவிட் -19 நோய்த்த்தொற்று எப்போது குறையும் என்று தெரியவில்லை. அதேசமயம் அரசு திட்டங்களுக்கான அனுமதி வழங்க எந்த குறுக்குவழியையும் பின்பற்றவில்லை.

திட்டங்கள் பற்றிய கருத்துகளைப் பேசுவதற்கான சந்திப்புகள் கூட இரண்டு மணிநேரங்கள்தானே நடத்தப்பட்டது?

கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக நாடு பெரும் சிக்கலில் உள்ளது. வயதானவர்களுக்கு வேகமாக நோய் பரவிவருகிறது. எனவே நாங்கள் காணொலி வழியாக சந்திப்புகளை நடத்தினோம். மேலும், திட்டம் பற்றிய விவரங்களை நாங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளோம். சூழலைப் பொறுத்தே நாங்கள் செயல்பட்டுள்ளோம்.

இந்தியாடுடே

கௌசிக் தேகா, ராகுல் நோரோன்கா

 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்